1.இந்திய அரசு தனது சொந்த நாட்டின் மூலதனத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாக்கிறது எப்படி சில்லறை வணிகத்தில் பாதிக்கு பாதி அனுமதி என்பது அந்நிய மூலதனத்தை வளர்க்கவல்ல மாறாக தனது உள்நாட்டு முதலாளிகளை பாதுகாக்க
2. இந்தியாவில் இருந்து அந்நிய நாடுகளில் நமது முதலாளிகளின் முதலீடு இல்லாமல் இருப்பது போன்ற தோற்றம் சரியா ? இல்லை இருக்கிறது அதுவும் அசுர
வளர்ச்சியை அடைந்து வருகிறது எப்படி என பார்ப்போம் கீழ்கண்ட சுட்டிகள் ஆப்பிரிக்க நாடுகளை சுரண்டும் இந்திய பகாசுர கம்பெனிகளை பற்றியது //More than 80 Indian companies have invested an estimated £1.5 billion in buying huge plantations in Ethiopia.//
எத்தியோப்பியாவில் 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யலாம் அப்போது தேசியவாதம்
குறுக்கிடாதா எத்தியோப்பியாவின் இயற்கை வளத்தை சுரண்டுதல் என்பது மூலதன சுரண்டல் இல்லையா அதன் உபரியை இந்திய முதலாளிகள் பங்குபோடல் இல்லையா
?தோழர் விவாதகன் இப்படி கேட்கிறார் // அந்நிய மூலதனத்தை எதிர்ப்பது என்பது அதன் உபரி எங்கே யாரால் பங்கு போடப்படுகிறது என்பதையே// அப்போ இந்தியாவின் மூலதனம் எத்தியோப்பியாவில் சுரண்டுவது எந்தவகை உபரி சுரண்டல் எந்தவகை மூலதன சுரண்டல் இந்திய முதலாளிகளுக்கு எந்த அடிப்ப்டையில் வக்காலத்து வாங்க முடியும் நாம் நமக்கு கீழே இருப்பவனை சுரண்டுவது சரியென்றால் நமக்கு மேலே இருப்பவன் நம்மை சுரண்டுவதும் சரி என்றுதானே வரும் இல்லை நாங்கள் இதையும் எதிர்க்கிறோம் அதையும் எதிர்க்கிறோம்
என்றால் எதை எதிர்க்கிறார்கள் என்பதை விளக்கமாக நாம் கேட்கவேண்டும் அப்படி பின்வரும் பகுதிகளில் கேட்போம்
இதோ இன்னொரு சுட்டி
:http://farmlandgrab.org/post/view/2
973
அடுத்து தான்சானியாவை சுரண்டுவதற்கான சுட்டி
:http://farmlandgrab.org/post/view/7
561 According to Tanzanian government statistics, during 1990-2006, 118
companies with "Indian interest" ave invested $825 million in
Tanzania.
3.ஒரு கட்டுரையில் புதிய ஜனநாயகம் இப்படி சொல்கிறது கிழகிந்திய கம்பெனிக்கும் வால்மார்ட்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் துப்பாக்கி மட்டும்தான்
இருப்பது என்கிறது அப்படியென்றால் இந்தியாவின் மூலதன் எத்தியோப்பியாவில் சுரண்டுவதும் ஆப்பிரிக்க நாடுகளிலும் தான்சானியாவிலும் சுரண்டுவது
அந்தநாடுகளின் மேலான ஆயுத யுத்தம் என கொள்ளலாமா ? அப்படி என்றால் இவற்றை தடுக்க கம்யூனிஸ்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்கலாம் ஆனால் இந்த விசயங்களை பற்றி அவர்கள் பேசுவதில்லை இதை மறைக்கிறார்கள் அந்நியன் சுதேசி
இயக்கம் சுதேசி முதலாளி என இந்த சுரண்டல்காரர்களை மறைக்கிறார்கள்
4.சரி 2006ல் ரிலையன்ஸ் பிரஸ்ஸை எதிர்க்கிறோம் ஆனால் 2011ல் ரிலையன்ஸ் பிரஸ் வந்துவிட்டது கண்ணன் டிபார்ட்மெண்டல் வந்துவிட்டது சரவணா ஸ்டோர் வந்துவிட்டது இவர்கள்தான் நீங்கள் சொல்லும் தேசிய முதலாளிகள் இவர்களை ஏன் எதிர்த்தோம் சிறு
வியாபாரிகளை முழுங்கி விடுவார்கள் என்பதால் ஆனால் அவர்கள் சீனுக்கு வந்த பின்னால் நீங்கள் அந்நிய மூலதனத்தை எதிர்ப்பது இந்த ரிலையன்ஸ் பிரஸ் நமது சிறு வியாபாரிகளை சாப்பிடுவதை தடைசெய்து விடுவார்களே என்ற காரணத்தினால் என்றுதானே
தர்க்கபடி வருகிறது அதைத்தான் விரும்புகிறதா மக இக
5.முரண்பாடுகள் மாறிவரும் சூழலில் தற்போதும் இவர்கள் காக்க விரும்புவது சிறுவணிகர்கள்தாம் என்பது கேலி க்கூத்தானதே இவர்கள் காக்க விரும்புவது
ரிலையன்ஸ் பிரஸ் ம் கண்ணன் டிபார்மெண்டல் சரவணா ஸ்டோர்களையே
6. ஏனெனில் அந்நிய மூலதனம் என்பது சின்ன பொட்டிகடைக்கு போட்டியாக வரவில்லை அதற்கு போட்டியாக ஏற்கனவே பெரிய கடைகள் வந்து பெருமளவில் அழித்துவிட்ட சூழலில் பெரிய கடைகள் அதாவது தரகு முதலாளிகள் எனப்படும் இடைத்தரகர்களுக்கு போட்டியாக வருகிறது
7.இவர்கள் இடைத்தரகர்கள் இல்லை என்கிறார் விவாதகன் உற்பத்தியில் ஈடுப்டாமல் ஒரு பண்டத்தை வாங்கி கைமாத்தி விடும் அனைத்து நபர்களும் இடைத்தரகர்கள்தான் இவர்கள் அந்த பண்டத்தில் எந்த உழைப்பையும் செலுத்துவதில்லை கைமாற்றி விடுவதால்யே சம்பாதிக்கிறார்கள்
8.இந்த இடைத்தரகர்கள்தாம் விவசாயிக்கு உரிய விலை கொடுக்காதவர்கள் பதுக்கல் சந்தை காரர்கள் ஏற்கனவே நீங்கள் சொல்லிய பொருளில் சிறு கடைகளை அழிப்பவர்கள் இவர்களுக்கு இப்போது போட்டி வந்துள்ளது
9.ஆதாயமடைவது யார் பொதுமக்களும் விவசாயிகளுமே ஏனெனில் தற்போது ஒட்ட சுரண்டப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் விவசாயிகள் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 52 சதவீத தொழிலாளர்களின் உழைப்பை பெற்று மொத்த தேச வருமானத்தில்
(18.5) சதவீதம் மட்டுமே பெறும் ஒரு தொழிலாக நமது விவசாயம் நலிய காரணம் இந்த இடைத்தரகர்கள் ஆக இருக்கும் பெருவணிகர்கள்தான்
10.முரண்பாடுகள் இருவகை உள்முரண்பாடு வெளிமுரண்பாடு உள்முரண்ட்டை தீர்க்காமல் வெளிமுரண்பாடே பிரதானமானதுன்னு சொல்வது என்ன வகை தற்போதுள்ள முரண்பாடு இந்தியாவின் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு இந்திய முதலாளிகளுக்கும் என்பது உள்முரண்பாடு வெளி முரண்பாடு அந்நிய முதலீடு உள்முரண்பாடுதான் சமூக மாற்றத்தின் தலையாய முரண்பாடாகும்
பின்வரும் சுட்டிகளையும் பார்க்கவும் :
http://thiagu1973.blogspot.com/2011/11/blog-post_30.html
http://thiagu1973.blogspot.com/2011/12/blog-post_05.html