சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு பாகம்-4

இந்திய சில்லறை வணிகம் என்பது எப்படி பட்டது ?
இந்தியாவின் சில்லறை வணிகம் என்பது முறைபடுத்தபட்டது மற்றும் முறைபடுத்தப்படாதது என இருவகையாக பிரிக்கலாம் .
முறைப்படுத்தப்பட்டது அனைத்து வரியினங்களும் விற்பனை வரி வருமான வரி ஆகியவற்றை முறையே கட்டும் வகையினர்.
முறைப்படுத்தபடாத சில்லறை வணிகம் என்பது மேற்கட்ட எந்த வரிகளும் செலுத்தாக பகுதி மொத்த உள்நாட்டு GDP இல் இதன் சதவீதம் என்ன?
கடந்த சில ஆண்டுகளில் இந்திய சில்லறை வணிகம் என்பது 97 சதவீதம்
முறைபடுத்தப்படாத வணிகமாகவே நடக்கிறது மொத்த GDP இல் 35 சதவீதமாகும் சில்லறை வர்த்தகம் அதில் 97 சதமானம் இந்த முறைப்படுத்தப்படாத வர்த்தகமாகும் .
இந்தியாவின் மொத்த சில்லறை வர்த்தகம் 184-394 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் இதை செய்வது 12 மில்லியன் க்டைகளாகும் இதில் முறைப்படுத்த பட்ட கடைகள் 2-3 சதமானமாகும் (அதாவது நம்ம அண்ணாச்சி கடைகளே அதிகம்) 7 சதவீதம் வேலை
வாய்ப்பை வழங்குகிறது இந்த துறை சீனாவில் மொத்த சில்லறை வர்த்தகம் 360 பில்லியன்
அமெரிக்க டாலர்களாகும் இதை செய்வது 2.7 மில்லியன் கடைகளாகும் இதில் முறைப்படுத்த பட்ட கடைகள் 20 சதமானமாகும் ( நம்ம அண்ணாச்சி கடைகள் அங்கே குறைவு நம்மை விட ) 12 சதவீதம் வேலை வாய்ப்பை வழங்குகிறது இந்த துறை .
அமெரிக்காவில் மொத்த சில்லறை வர்த்தகம் 3800 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் இதை செய்வது 15.3 மில்லியன் கடைகளாகும் இதில் முறைப்படுத்த பட்ட கடைகள்80 சதமானமாகும் ( அண்ணாச்சி கடைகள் மிக மிக குறைவு ) 12.6 சதவீதம் வேலை வாய்ப்பை வழங்குகிறது இந்த துறை .மேற்கண்ட தரவுகளின் அடிப்படையும் முரண்பாடுகளும்:மேற்கண்ட தரவுகளின் அடிப்ப்டையை பார்த்தால் எந்தளவு முறைப்படுத்தப்பட்ட தொழிலாகிறது அந்தளவு வேலைவாய்ப்பு உயர்கிறது .ஒரு தொழில் முறைப்படுத்தபடப்பட அதில் தொழிலாளர்களுக்கான தரவுகளும் செயல்பாடுகளும் கோரிக்கைகளும் அதிகமாகிறது . அரசு இயந்திரம்
இம்மாதிரி முறைபடுத்தபட்ட தொழிலில் குறைந்தபட்சம் அதன் தொழிலாளர்களுக்கு எஸ் , பி எப் பிடித்தல் மற்றும் குறைந்த பட்ச பணிசூழல் பாதுகாப்பு மாதச்சம்பளத்தின் அரசு விதிக்கும் குறைந்தபட்ச கூலியை உறுதி படுத்தல் செய்யும்
அல்லது தொழிலாளர் சங்கத்தின் மூலம் இத்தகைய உரிமைகளை கோரிப்பெறமுடியும் ஆனால் சின்ன சின்ன கடைகளில் வேலை பார்க்கும் 7 சதமானம் (120 கோடியில் ஏழு சதவீதமான தொழிலாளர்களுக்கு) 8 கோடி தொழிலாளர்களுக்கு அவர்கள் தனிதனியாக பிரிந்து கிடப்பதாலும் கேட்க நாதியில்லாமல் கிடப்பதாலும் அல்லது சிறு வணிகர்கள் நேசசக்தி என சொல்வதாலும்
எந்த அடிப்படை உரிமையை இல்லாமல் இருப்பதும் அதை ஆதரிப்பதும் எந்தளவு நேர்மை அற்ற செயல். (இதில் கணிசமான தொகையினர் முதலாளிகள் என்றாலும் மீதமிருக்கும் தொழிலாளர்கள் கேட்பாரற்ற ஜீவன்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு மக இகவினர்
சொல்லும் பதில் பொறு நீயும் ஒரு நாள் ஓனராவாய் என்பது அதைத்தானே முதலாளித்துவம் சொல்கிறது எல்லாரும் முதலாளி ஆகலாம் ...............)
மேலும் கடைகள் முறைப்படுத்தப்படும் போது அதன் உள்கட்டுமானம் பொருட்களை பாதுகாக்கும் வசதிகள் அதிகமாகிறது இன்னொரு புள்ளி விபரம் சொல்கிறது இந்தியவில் உற்பத்தியாகும் மொத்த காய்கறி கனிகளும் 59 மெட்ரிக் டன் அழுகி வீணாகிறது ஒவ்வொரு ஆண்டும் .
இதை உற்பத்தி செய்தவனுக்கும் இல்லாமல் வாங்கி விற்பவனுக்கும் இல்லாமல் சாக்கடைக்கு போகிறது இந்த காய்கறிகள். ஆனால் நம்து குழந்தைகளோ ஊட்டமில்லாம் சாகின்றன.
என்ன காரணம் இந்தியவில் இருக்கும் குளிர்வூட்டும் வசதி என்பது மொத்த காய்கறி உற்பத்தில் 200 மெட்ரிக் டன்னில் 139 மெட்ரிக் டன்னுக்கு மட்டும்தான் குளிர்வூட்டும் வசதி இருக்கிறதாம் ஏன் என்றால் சின்ன
கடைக்காரர்கள் இந்த வசதியை பெற்று இருக்கமுடியாது ஒரு பிரிட் இல்லாத கடைகள் காய்கறிகளை ரோட்டில் கொட்டுவதை காணலாம். இந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுவரவேண்டும் என்றால் அந்நிய மூலதனம் இந்த தொழிலில் வரும்போது அது
சாத்தியமாகும் வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது.
சிறு வணிகமும் பெரு வணிகமும் விவசாயிகளும்:
விவசாயிகள் உற்பத்தி செய்வதை கமிசன் மண்டிக்காரன் வாங்கிவிற்க அதை வாங்கி செல்லும் சின்ன கடைக்காரர் ஒரு விலை வைக்க உற்பத்தியில் இருந்து இருமடங்கு சுரண்டலுக்கு பின் வாங்கி உபயோக்கிக்கும் பாட்டாளி அதிக விலை கொடுத்து அந்த பொருளை வாங்குகிறான்
அதாவது இந்தியாவின் 55 சதவீதம் பேர் இந்த பாட்டாளி ஏழை மக்களே இவனது வருமானத்தில் 48 சதவீதம் உணவை பெறுவதற்கே கொடுக்கிறன் இதற்கு காரணம் இந்த இடைத்தரகர்களே .
அடுத்து விவசாயிகள் இவர்கள் தங்களது நிலத்தில் பாடுபட்டு விளைவித்த பொருட்களை கமிசன் மண்டிக்காரனிடம் போய் அடிமாட்டு விளைக்கு விற்பதன் மூலம் (தற்போது இவர்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் காரன் அதிக விலை கொடுக்கிறார்ன் ஒட்டச்சத்திரம் பக்கம் விசாரித்தபோது கிடைத்த தகவல்) தனது நிலத்துக்கு உரம் கூட வாங்கிகொள்ள முடியாத நிலைக்கு போய் அவன் சொந்த நிலத்தை பிளாட் போட்டு வித்து விட்டு கூலித்தொழிலாளியாக
மாறி விட்டான் .இப்போது விவசாயிகளும் சுரண்டப்பட்டு வாங்கும் பாட்டாளி மக்களும் சுரண்டப்பட்டு இடைத்த்ரகன் பிழைப்பதற்கு வழிவகை செய்கிறார்கள் இந்த புதியஜனநயகஸ்டுகள்
இந்த சங்கிலி தொடரில் ஒரு முனையில் விவசாயியும் இன்னொரு முனையில் பாட்டாளியும் சுரண்டப்படுவது இந்த குட்டிமுதலாளித்துவ சிறுவணிகனாலேயே
சிறு வணிகனும் அவனது பணியாளும் முரண்பாடுகளும்:
இந்தியாவில் பாட்டாளிவர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இருக்கும் முரண்பாடுதான்
பிரதான முரண்பாடு என்கிறோம்.
இயக்கவியல் விதிகளின் படி நமது இன்றைய முரண்பாட்டை பரிசீலித்தோமானால் இந்தியாவில்
முதலாளிவர்க்கம் என்பது பெருமுதலாளிகள் மட்டுமல்லாமல் பெருவணிகர்களும் அடக்கம் .
ஒரு சிறு வணிகருக்கும் அவர் கடையில் வேலை செய்யும் சிப்பந்திக்கும் உள்ள முரண்பாடு
பகைமுரண்பாடாகும் இதை நாம் பகையற்ற முரண்பாடு என்று கருதமுடியாது .
இந்த பகைமுரண்பாட்டுக்கு என்ன தீர்வு வைக்கிறார்கள் என பார்த்தால் அந்த கடை சிப்பந்தி ஒரு முதலாளி ஆவதன் மூலம் அந்த முரண்பாடு முடிந்து போகிறது என்கிறார் அந்த கடையில் நடக்கமுடியாது இந்த பிராசஸ் வெளியில் நடக்கும் .எதிர்நிலைகளின் ஒற்றுமை தற்காலிகமானது முரண்பாடு நிலையானது அந்த சிறுவணிகனும் அந்த சிப்பந்தியும்
ஒற்றுமையாக இருப்பது தற்காலிகமானதே பகை பெற்று விளங்குவது நிரந்தரமானது
அந்த பணியாள் இன்னொரு முதலாளியாக மாற்றுவது கம்யூனிஸ்டுகளின் வேலை இல்லை மேலும் அவ்வாறு ஆகும் ஒரு நடவடிக்கைக்கு உதவுவதற்கு நாம் இங்கே கட்சி நடத்த வேண்டியதில்லை .
சிறுவணிகணும் பாட்டாளிகளுக்கும் உள்ள உறவு:
அவன் ஒரு முதலாளியாக மாறி அவன் இன்னும் சிலரை பணியில் அமர்த்தி உக்கார்ந்து திண்பதை ஆமோதிப்பதற்கும் ஆரதிப்பதற்க்கும் பெயர் சோசலிசம் அல்ல திரிபுவாதம் மாறாக
இந்த பகை முரண்பாட்டை தீர்க்க சோசலிச சமூகத்தை உருவாக்க பாடுபடுவதும் மனிதனை மனிதன் சுரண்டாமல் இருக்கவும் பண்ட உற்பத்தி சமூகத்தின் சந்தை விதிகளில் இயக்கத்தில் ஊசலாடும் பண்டமான மனிதனை காப்பாற்றி மனிதனை பண்டம் என்கிற நிலையில் இருந்து உயர்த்தி உண்மையான மனிதன் என்கிற வாழ்நிலையை கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய
போராட்டமே கம்யூனிச சித்தாந்தம் நிறுவிய விஞ்ஞான வழிபட்ட போராட்டமாகும் .
இவர்கள் சொல்வது கடை ஊழியருக்கும் கடை முதலாளிக்கும் இருக்கும் முரண்பாடு சார்பு
நிலையானது நிரந்தரமானது அந்நிய முதலாளிக்கும் தேசிய முதலாளிக்குமானது முதலில் அந்நிய முதலாளியை ஒழிக்க போராடும் இந்த தேசிய முதலாளியை காப்பாற்ற வேண்டும் பிறகு தேசியமுதலாளியை பற்றி பேசலாம் என்கிறார்கள் .
திட்டவட்டமான வரலாற்று சூழலில் ஒரு நாடு அதன் முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தை எட்டாத போது அது மற்றொரு நாட்டின் காலனி நாடாக இருக்கும் போதும் மாவோ வகுத்தளித்த கோட்பாடுதான் தேசிய முதலாளிகளும் நமது நேச சக்தி என்பதாகும் ஆனால் ஒரு நாட்டில் ஒரு முதலாளி உருவாகி அவன் அந்நிய நாட்டிலும் தனது நிருவனங்களை உருவாக்கும் சூழலை
பெறமுடிந்த நாடு காலனி நாடு அல்ல அந்த நாட்டில் இருக்கும் முதலாளிகளும் நேசசக்திகள் அல்ல எனவே அண்ணாச்சிகள் என்னாளும் நேசசக்திகள் அல்லர் அந்நிய முதலீடு என்பது வெளிப்புற முரண்பாடு என பார்த்தோமானால் அது உள்முரண்பாட்டில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் உள்முரண்பாட்டை தீர்க்காது ,
பெருவணிகத்துக்கு போட்டி :
சிறு வணிகம் தனது சீவனை தக்கவைத்திருப்பது அது பாட்டாளிகளுக்கு கடன் கொடுப்பதும் பிறகு வசூலித்து கொள்வதும் அந்த கடனுக்கு அளவாக வட்டியை விலையில் சேர்த்து விற்பதுமான நடைமுறையாகும் .இதனாலேயே சிறுவணிகம் சீவித்திருக்கிறது
இந்தியாவில் பாட்டாளிகள் மாசசம்பளக்காரர்களாக மாறும் வரை இது தொடரும் ஆனால் தற்போதைக்கு அவர்களின் நிலமை மோசமாகிகொண்டே வருவதால்
இவர்களும் இருப்பார்கள் தற்போது போட்டி பெரு வணிகர்கள் மற்றும் கமிசன்
மண்டிகளுக்கும் அந்நிய முதலீட்டிற்கும்.அந்நிய முதலீடு வருவதால் விவசாயிக்கும்
பாட்டாளிகளான (55%) குறைந்தது உள்ள மக்கள் தங்களின் பாதையில் இரு போட்டியாளரை காண்பார்கள் .
அவ்விருவரும் போட்டி போட்டு குறைத்து வாங்கியும் குறைத்து விற்பதன் மூலமாகவும் மட்டுமே தங்களை தக்க வைத்து கொள்ள இயலும் என்பதால் ஏற்கனவே
கொட்டை போட்ட ரிலையன்ஸும் பன்னாட்டு பெருவணிகன் வால்மார்ட்டும் மோதும் போது பயன் விவசாயிகளுக்கு பாட்டாளிகளான பொதுமக்களுகும் (55%) வருமா இல்லையா
மூலதனத்தின் தேசியவாதமும் சொந்த மூலதனத்தை கொஞ்சுதலும்:
மூலதனம் என்பது கைகாள் முளைத்து தற்போதுதான் நம்ம நாட்டை சுற்றி தவழ்ந்து வருவது போலவும் தான்சானியாவிலும் எகிப்திலும் சுரண்டும் முதலாளிகள் நமது நாட்டுக்குள் எந்த மூலதனத்தையும் கொண்டு வரவில்லை என்றும் மனப்பால் குடிக்கும் நண்பர்களே
மூலதனம் அப்படி எல்லாம் சொந்த நாட்டுகாரன் சொந்த இனத்து காரன் என பார்பதில்லை மூலதனத்துக்கு கருணை உள்ளமும் ஈகை மனப்பான்மையும் இல்லை மேலும் கம்யூனிஸ்டுகள் கவலை படவேண்டியது மூலதந்த்தை வச்சிருப்பவன் பாவமாச்சே அவன்
காணாமல் போவானே என்பதல்ல
கம்யூனிஸ்டுகள் கவலைப்பட வேண்டுவது இழப்பதற்கு ஏதுமில்லாத புரட்சிகர பாட்டாளிவர்க்கத்தின் மேலேயே.
போட்டி யாருக்கும் யாருக்கும் :
அந்நிய மூலதனம் 51 சதவீதம் மட்டுமே எனவே அவர்கள் இங்கிருக்கும் உள்நாட்டு பெருமுதலாளிகளான ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் தான் கூட்டு வைப்பார்கள் எனவே முரண்பாடு பழைய படி அண்ணாச்சி கடைகளுக்கும் பெருமுதலாளிக்கு மட்டுமே என்கிற வாதம் தவறானது
1.ரிலையன்ஸ் தனது தொழில் நல்லா ஓடிட்டு இருக்கும் போது என்ன காரணத்துக்கு வால்மார்ட் கூட கூட்டு சேருவான்னு வேணும்ல
2.சுபிட்சா போன்ற நட்டமடைந்த நிறுவனங்க ள் கண்டிப்பா அந்நிய மூலதனத்துடன் கூட்டு சேர்ந்து இங்கிருக்கிற ரிலையன்ஸ் கூடவும் பெரு முதலாளிகளான கமிசன் ஏஜெண்டுகளூடனும் போட்டி போடும்
3.ஏனெனில் வாங்கும் சக்தி கொண்ட மக்களே இந்த பெரிய கடைகளின் இலக்கு 20 சதவீதம் மக்களே இந்தியாவின் வாங்கும் சக்தி அதிகம் கொண்ட மாதசம்பளக்காரர்கள் இவர்களை கூட்டினாலே ஒரு அமெரிக்காவுக்கு சமமான எண்ணிக்கையில் வருவார்கள் இவர்களை குறிவைத்துதான் அந்நிய மூலதனம் இறங்குகிறது சொன்ன பொட்டி கடை வச்சிருக்கும் அண்ணாச்சிக்கு போட்டியாக அல்ல
4.ஏற்கனவே அண்ணாச்சியை அளித்து வரும் ந்ரிலையன்ஸ்கள் களை காப்பாற்ற்வே இந்த அந்நிய மூலதன எதிர்ப்பு பயன்படும்
5.அண்ணாச்சி கடைகள் முதலாளித்துவ விதிப்படி அழிய தலைப்பட்டு விட்டார்கள் மேலும் அதிகபட்சமான சுரண்டல் காரர்களான இவர்கள் மக்களின் நேச சக்தியோ புரட்சிகர சக்திகளின் நேசசக்தியோ அல்ல

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

10 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post