முதலாளிகளை காப்பாற்ற துடிக்கும் மக இக

ஒரு குட்டிபூர்சுவாவின் கட்டுரைக்கு பதில்


உற்பத்தி உறவில் பெருவணிகன் என்ன செய்கிறான்; சிறுவணிகன் என்ன செய்கிறான் இவர்களுகிடையேயான உறவு எந்தவகைப்பட்டது என்பது மார்க்சிய ரீதியாக ஆராயப்படவேண்டியது எந்தளவு முக்கியமென்றால் அதை மாற்றுவதன் முக்கியத்தை போன்று மிக முக்கியமானது .

விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சொந்த காரனாக இல்லை மேலும் அதற்கு விலை வைக்கும் உரிமைகூட இல்லாத ஒரு அவல நிலைக்கும் காரணம் இந்த முதலாளித்துவ உற்பத்தி மற்றும் வினியோக முறையாகும் .(உற்பத்தி செய்பவன் உற்பத்தி பொருளுக்கு சொந்தகாரனல்ல என்பது முதலாளித்துவம்னு மார்க்ஸ் பேராசான் சொல்லி நூறாண்டுக்கு மேல் ஆயிடுச்சு)

உற்பத்தியில் முதலாளித்துவமும் வினியோகத்தில் சோசலிசமும் நிலவ முடியாது அப்படி நாமாக இந்தியாவில் போன்று அரசமூலதனம் நிலவினாலும் அது கூடிய விரைவில் அழிந்து முதலாளித்துவ வினியோக முறை வந்தே தீரும் என்பது கண்கூடானதல்லவா?

அரசு 80 சதமானம் கொள்முதல் செய்து கொண்டு இருந்து தற்போது அதை குறைத்து விட்டது என்றால் அரசு என்பது வர்க்க சார்பான அரசு முதலாளித்துவம் வளராதபோது அது செய்துகொண்டு இருந்த வேலையை வளர்ந்தவுடன் முதலாளிக்குத்தான் கையளிக்கும் மாறாக விவசாயிக்கே அந்த உரிமையை தராது அது அதன் வர்க்க குணாம்சம் .

இங்கே அரசு செய்யாததை இவர்கள் ஆதரிக்கும் குட்டி முதலாளியோ பெருவணிகனோ அல்லது கமிசன் மண்டி காரனோ செய்யவில்லை மாறாக அடிமடியில் கைவைப்பவர்கள் அவர்களே .ரிலையன்ஸ் விவசாயியை காப்பாத்துவான் என்றோ வால்மார்ட் ப்பாத்துவான் என்றோ யாரும் சத்தியம் செய்யவில்லை

மாறாக

சொந்த நாட்டின் கத்தியை வைத்து குத்தி கொண்டு செத்து போன்னு நீங்க சொல்வதை மறுத்து சொந்த நாட்டு கத்தியும் அந்நிய கத்தியும் மோதும்போது;


முதலில் அந்நிய கத்தி சொந்த நாட்டின் பெரு கத்தியுடன் மோதும் சூழலில் ஒப்பீட்டளவில் விவசாயிக்கு கொஞ்சம் கூட கிடைக்கும் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்(குறைந்த அளவுக்கேனும் குறைந்த காலமாவது) இதன் மூலம் இந்த நாட்டின் சுரண்டல் வர்க்கத்தை காப்பாற்ற பெருமுயற்சி செய்கிறீர்கள் .



அடுத்து விவசாயி அனுபவிக்கும் பல துன்பத்துக்கும் காரணம் இந்த அரசும் அதன் கொள்கையும் என பட்டியலிடும் நீங்கள் இதையும் கடந்து அவன் உற்பத்தி செய்கிறானே ஒரு பொருள் (விவசாய பொருள் )அதற்கு கூலியை நீங்கள் தூக்கி பிடிக்கும் வியாபாரி விலை நிர்ணயம் செய்ய என்ன தகுதி இருக்கு அந்த பொருளை உற்பத்தி செய்தவனா அவன் அந்த பொருள் மீது கூடுதலாக அவன் செலுத்தும் உழைப்பு ஏதுமின்றி அந்த பொருளை ஒன்றுக்கு மூன்று மடங்காக விலை ஏற்றி விற்பவன் சுரண்டல்காரனா இல்லையா ?


சுரண்டலை சுரண்டல்னு சொல்லு அது பெரிசா சிறிசா உள்நாடா வெளிநாடா என்பதை பிறகு பார்போம் .ஆக சுரண்டல் இன்றி ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தும் நகரவே நகராது என இருக்கும் நிலைமையை பேச, அது உற்பத்தி செய்வதற்கு முன் அந்த உற்பத்தியாளன் படும் கஸ்டங்களை அதாவது பசுமை புரட்சியில் கொட்ட பட்ட உரம் அந்த உரத்தை வாங்க அவன் கொட்டி கொடுக்கும் காசு , அரசு மானியம் இல்லாது ஒழிவது கொள்முதல் விலை குறைவது இதெல்லாம் சந்தை விதிகளால் ; நீர் கட்டி காப்பாத்த முயலும் பெரு வணிகனால்.(அது ரிலையன்ஸோ , கமிசன் மண்டியோ ,வால்மார்ட்டோ) எல்லாப்பயலும் சுரண்டுவது விவசாயிகளைத்தானே நியாயமாகப்பார்த்தால் நீங்கள் அவர்கள் பக்கம் நிற்கவேண்டும்)

(இதோ சுட்டியை அளித்து இருக்கிறேன் நேரத்துக்கு தகுந்தாற்போல் சில நேரங்களை வியாபாரிகளும் அரசும்

விவசாயிகளை ஏமாற்றுவதாக நீங்களே புதிய ஜனநாயகத்தில் எழுதிய கட்டுரையின் சுட்டியைதந்துள்ளேன்) http://www.vinavu.com/2011/07/14/irunda-kaalam/ (விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன்)


பிராக்டர் அன் கேம்பில் புலம்புகிறானாம் வால்மார்ட்டை பார்த்து பிராக்டர் அன் கேம்பில் என்பது முக்கில் பொட்டி கடை வைத்திருக்கும் அண்ணாச்சியா அவன் ரிலையனசை போன்றவன் இது ஒன்று போதுமே வால்மார்ட் ரிலையன்சுக்குத்தான் போட்டிக்கு வருகிறான் என்பதை புரிண்டு கொள்ள ரிலையன்சு போட்டி இன்றி அடித்து பிடிங்குவதை கேட்க ஆள் இல்லாமல் இருக்கிறான் அவனைபோன்றவந்தான் ஐடிசி அவனுக்கும் ஆப்பு வைக்கவே வால்மார்ட் வருகிறான்னு வச்சிக்கங்க இதை எதிர்ப்பது நேரா ரிலையன்சுக்கு வால்பிடிப்பதே ஆகும் .


அப்புறம் இந்த வால்மார்ட் பூச்சாண்டியை விடுங்க அந்நிய மூலதனம்னாலே வால்மார்ட்டுன்னு சுருங்கிட்டீங்க இந்த வால்மார்டோட சந்தையை காலி பண்ணிட்டு இருக்கான் அமெரிக்காவில் மற்றொரு ரீடெல் கிங்க் எனவே

அமெரிக்காதான் எதிரின்னு சொல்லிகிட்டே இருந்த சிபிஎம் மாதிரி நீங்க பெரிய கம்பெனிதான் எதிரி முதலாளித்துவம் அல்லன்னு சொல்ல ஆரம்பிப்பது திரிபுவாதமே.

சாராம்சம் :

1.100 சதவீதம் அந்நிய மூலதனத்தை ஏற்று கொண்ட சீனாவில்அது நடந்து 10 ஆண்டுக்கு பின்பும் அந்த நாட்டின் மொத்த சில்லறை வணிகம் என்பது இன்னும் 20 சதமானம் மட்டுமே முறைபடுத்தபட்ட வணிகமாக இருப்பது ஏன்

2.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்

3.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்

4.என்ன இருந்தாலும் சரவணா ஸ்டோரில் வேலை செய்பவன் சொந்த சாதிக்காரணாக இருந்தாலும் அவனுக்கு

வெளிய வந்து கடை ஓணராக வாய்ப்பிருக்கு என சொல்லும் உங்கள் குட்டி பூர்சுவா சிந்தனை எதை காட்டுகிறது ?

(ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட பார்க்காத உங்கள்

குட்டி பூர்சுவா மனப்பான்மை அம்பலப்படுவதையும் அம்மணமாக நீங்கள் நிற்பதையும் உணருகிறீர்களா இல்லையா?

5.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்

6.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா ?

7.உங்கள் சிகப்பு அங்கியை கழட்டி விட்டு தமிழ் தேசியவாத கட்சின்னு சொல்லிகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் . நீங்கள் நேரத்துக்கு தகுந்தாற்போல் முரண்பாடுகளை பேசுவதை விடுத்து பேசாமல் கட்சிக்கு பேரை மாற்றி கொள்ளுங்கள் -தமிழ் தேசிய கட்சி போன்ற பெயர்களை பரிந்துரைக்கிறேன்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

35 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post