மார்க்சியத்தை மறுக்கும் மக இக



சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம் குறித்த விவாதத்தில் வினவும் அதன் அல்லகைகளும் சில முக்கியமான பகுதிகளை தவறாக திரிக்கிறார்கள் இது  ஒட்டுமொத்த கம்யூனிச அரசியலுக்கும் விரோதமானது


அதென்னவென்றால் சிறிய வணிகனின் மூலதனத்தை காப்பாற்ற பெரு வணிக நிறுவனங்களை எதிர்க்கனும் என்பது அவர்கள் வைக்கும் வாதம் இது மார்க்சியமா

இந்த வாதத்தின் ஊடே அவர்கள் கொண்டு வந்த முக்கிய கருத்துக்கள் (?)
1.வால்மார்ட் சின்ன வணிகனை ஒழித்து விடுவான்
அவனுக்கு போட்டியே சின்ன வணிகன் தான் என்பது

இதற்கு நமது பதில்

1.1. வால்மார்ட்டுக்கு போட்டி இங்கே இருக்கும் பெருவணிகனே என்பதும் அந்த பெருவணிகனின் சுரண்டலை சுரண்டல் என ஏன் சொல்ல கூடாது என்பதும் நமது பதில் இதன் மூலம் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் பெருவணிக நிறுவனங்களுடன் வால்மார்ட் போட்டி போடுவதை சொல்லாமல் ஏமாற்றும் பிற்போக்கு தனத்தை எதிர்த்தோம் .

2.இதன் மூலம் நீங்கள் வால்மார்ட்டை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு :

வால்மார்ட்டு ஒரு முதலாளித்துவ நிறுவனம் என்பதால் அது எல்லா முதலாளிகளும் செய்யும் மொள்ளமாறித்தனம் அனைத்தையும் செய்யும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை ஆனால் அதே மொள்ள மாறித்தனத்தை சுரண்டலை இங்கிருக்கும் அண்ணாச்சிகளும் செய்வார்கள் செய்கிறார்கள் இல்லையென மறுக்க முடியுமா ?

 
இப்போது வால்மார்ட்டையா உள்நாட்டு முதலாளியையா அண்ணாச்சி கமிசன் மண்டிகளையா யாரை ஆதரிக்கிறீர்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள் என அவர்களை கேட்டால் அவர்கள் வால்மார்ட்டை மட்டும் எதிர்கிறார்கள்

எங்களை கேட்டால் அனைத்துமே முதலாளித்துவ நிருவனங்கள் அதற்கே உரிய சுரண்டல் பாதையில் செல்லும் ஆகவே ஒட்டுமொத்தமாக இந்த முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதே சரியானது

3.வினவுக்கு எதிர்கட்டுரை போடுவதற்கான விளக்கமும் விவாதமும்தான் நான் செய்கிறேன் என்பது சரியா?

இல்லை வினவு ஒரு கட்டத்தில் ரிலையன்ஸை எதிர்க்கிறோம் என அந்த நிறுவனம் உள்ளே வரும்போது சொன்னது சில போராட்டங்களை செய்தது ஆனால் ரிலையன்ஸ் வந்தபிறகு எந்த போராட்டமும் நடக்கவில்லை தொடர்ச்சியாக செய்யவில்லை மாறாக ஒரு புதுபடம் வரும்போது அதற்கு தோரணம் கட்டும் ரசிகனின் மனப்பான்மையை விட்டு கொஞ்சமும் மாறாமல் பெருமூலதன எதிர்ப்பை சம்பரதாயமாக செய்துவிட்டு மற்ற வேலைகளை செய்வதும் அப்போது
குட்டி முதலாளி நல்லவன் அவன் உழைக்கிறான் எனவே சுரண்டுகிறான் என்பன போன்ற எதிர்புரட்சி சவடால்களை விடுவதும் என செயல்படும் அரசியல் ஓட்டாண்டி தனத்தை கண்டிக்கவே தொடர்ச்சியாக நாம் இயங்க வேண்டியதாக உள்ளது 

மேலும் இந்த செயல்முறையின் ஊடே மார்க்சியத்தை தனக்கு தகுந்தமாதிரி திரிக்கிறது அதாவது சின்ன முதலாளி நல்லவன் அவன் கடையில் வேலைபார்ப்பவன் சுரண்டப்பட்டாலும் அவனுக்கு முதலாளியாகும் வாய்ப்பு இருக்கு என சொல்லி மக்களுக்கு முதலாளித்துவ பாதையை காட்டுகிறது

இது எதிர்புரட்சியாகும் முதலாளித்துவம் என்பதை தீர்மானிப்பது முதலாளித்துவ உற்பத்தி வினொயோகமுறையே தவிர அதன் அளவுகள் கிடையாது
மொத்தமாக முதலாளித்துவத்தை ஒழிக்காமல் பெரிய முதலாளியை மட்டும் ஒழிக்க இயலாது மேலும்

சுரண்டலுக்கு உள்ளாகும் பாட்டாளிகளுக்கு முதலாளித்துவ கனவை விதைப்பது மிக தவறான செயலாகும்

சிறிய வணிகன் புரட்சிகரமான வர்க்கமா என்பது குறித்து :

சிறிய வணிகன் அழிவதை பற்றி அது முதலாளித்துவ விதி என்றால் இல்லை அப்படி சொல்வது பாசிசம் என்றும் எனவே சிறு வணிகனை தாங்களே காப்பாத்த போவதாகவும் சொல்கிறார்கள் இவர்களை குறித்து மார்க்ஸ் என்ன சொல்கிறார் கம்யுனிஸ்டு கட்ட்சி அறிக்கையில்

----------------
மார்க்ஸ் இவரைப் போன்றவர்களைத்தான் "இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள்." என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சாடுறாரு,சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள்,பற்றி  மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்வது இதுதான்:
----------------------------
"மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டுகளைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், சிறு வாடகை, வட்டி வருவாயினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய எல்லோரும் சிறிது சிறிதாய்த் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகிறார்கள். காரணம் என்னவெனில், முதலாவதாக அவர்களிடமுள்ள சொற்ப அளவு மூலதனம் நவீனத் தொழிலின் வீச்சுக்கும் போதாமல் பெரிய முதலாளிகளுடைய போட்டிக்குப் பலியாகிவிடுகிறது, இரண்டாவதாக அவர்களுடைய தனித் தேர்ச்சியானது பொருளுற்பத்தியின் புதிய முறைகளால் மதிப்பற்றதாக்கப்படுகிறது. இவ்விதம் தேச மக்கள் தொகுதியைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள்."
---------------------------
"இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றது, பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது."
----------------------------------
"மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லாரும் தொடர்ந்து தாம் மத்தியதர வகுப்பினராய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல"

---------------------------
ஆகவே மார்க்சியத்துக்கு அப்பாற்பட்டு சிறுவணிகனின் அழிவை நாம் சொல்லவில்லை என்றும் மூலதன போட்டி ஓயாமல் நடைபெற்று வருகிறது தினம் தோறும் ஏன் நொடிதோறும் சிறுவணிகன் அழிவும் பெருவணிகன் தோற்றமும் நடந்து கொண்டே இருக்கிறது என்கிறோம்

கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன :

 மூலதனத்தை காப்பாத்த போராடுவதும் முதலாளிகள் உருவாக வாய்ப்பு இருக்குன்னு பேசுவதும் கம்யூனிஸ்டுகளின் க்டமை இல்லைன்னு ஒரு வரியில் சொல்லலாம் மாறாக அனைத்து முதலாளித்துவ நிருவன அமைப்புகளிலும் உருவாகும் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவது தலையாய கடமையாக ஒரு கம்யூனிஸ்டு கொண்டிருக்க முடியும்

வால்மார்டு பற்றிய தனிபெரும் கண்டுபிடிப்பு :

வால்மார்ட் உற்பத்தியை கட்டு படுத்துகிறான் என்கிறார்கள் இதை நமது உள்ளூர் ஆரோக்கியா பால்காரனே செய்கிறான் மாடு வாங்கி தந்து விவசாயிக்கு மாட்டு தீவன விதையும் வாங்கி தந்து அதை விதைச்சு அறுக்க சொல்கிறான் இது எந்த வர்க்கத்துக்கான விவசாயம்
இதைத்தான் வால்மார்ட் பெரிய அளாவில் செய்கிறான் அதை தவறு என்றும் உள்ளூர்காரன் செய்வது சரி என்றும் சொல்வது எந்தவகை மார்க்சியம்

மேலும் அவர்களிடம் இருந்து பதில்வராத பல கேள்விகள் இருக்கு அதன் பட்டியல் இதோ:

பதில் வராத கேள்விகள்


1.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்

2.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்

3.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்

4.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா

*மேலும் இந்திய முதலாளிகளில் நேசசக்தி என அழைக்கும் நீங்க எந்தமாதிரி கம்பெனியெல்லாம் நேசசக்தி எதெல்லாம் எதிரி சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்

ஏன்னா ருசி ஊறுகாய் காரன் வெளிநாட்டில் இடங்களை வளைத்து போடுவதும் இந்தியாவில் பல கம்பெனிகள் அந்நிய நாட்டில் சுரண்டுவதும் நடப்பதை பற்றிய தங்களின் மேலான கருத்து என்ன

----------------

ஆக தனது அரசியல் ஓட்டாண்டி தனத்தில் எத்தனை நாள் பதுங்கி கொண்டு இருந்தாலும் ஒருநாள் வெளியே வந்துதான் ஆகனும் இவர்கள்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

13 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post