மீனவர் துயரம் தீயாக பரவியது

பார்க்க


இலவச வேட்டியை கட்டி கலர் டிவி பார்க்கும் தமிழனுக்கு கடலில் செத்து மிதக்கும் தமிழனை பற்றி கவலை இருக்காது என நினைத்த தமிழரசுக்கும் இந்திய அரசுக்கும் இணைய தோழர்கள் ஆப்பு வைத்து வருகிறார்கள்.

நூற்று கணக்கான டிவிட்டுகளால் குத்தி வருகிறார்கள் இந்தியா எனும் ஆனைக்கு டிவிட் எனும் அங்குசம் சின்னதுதான் இருந்தாலும் அது நேராக குத்தவேண்டிய இடத்தில் குத்துகிறது .

வழக்கமாக மொக்கை, சில பொழுதுபோக்கு எழுத்தாளர்களை பற்றிய சண்டை சில கவிதைகள் சில முற்போக்கு கட்டுரைகள் சில வசவுகள் என மிதக்கும் இந்த வெளி இப்போது போர்குரலுடன் திமிரி எழுகிறது .

தேர்தல் என்பது கந்துடைப்பு அதற்கு இலவசம் என்பது ஏமாற்று என்பது சாதாரணமக்களுக்கே புரிந்துவிட்ட நிலையில் இணைய வாசிப்பாளர்கள் அடுத்த கட்டமாக மத்திய மாநில அனைத்து ஓட்டு கட்சி அரசியல் வாதிகளையும் டிவிட்டரில் தோலுரிக்கிறார்கள்

மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போவதுதான் பிரச்சனை என யாரும் சொல்லமுடியாது ஏனெனில் இந்தியாவின் கடல் எல்லை எது இலங்கையின் கடல் எல்லை எதுவென்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறது போதும் மீனவர்கள்  எல்லைகளை கடந்தவர்கள் என்கிற நமது வாதம் வருகிறது .

மொத்தத்தின் இந்த மீனவர் பிரச்சனை என்பது ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்து தனியாக பார்க்க முடியாது

ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுதமிழர்கள் கொல்லப்படும்போது போர்குரல் எழுப்பனும்

இணையத்தில் பற்றவைக்கப்பட்டுள்ளது ஒரு புரட்சி தீ நிச்சயமாகவே அதை அணையாமல் கொண்டு செல்ல வேண்டும்

நிறைய நண்பர்கள் மீனவர் பிரச்சனை குறித்த கட்டுரைகளை தேடி படித்து கீச்சுகிறார்கள்
இது ஒரு விசயத்தின் மீது முன்பிருந்த அசட்டையான மனப்பான்மையை போக்குகிறது
மேலும் நடைமுறை விசயத்தின் தீவிரத்தை விடுத்து கதை கவிதை எனும் கற்பனை குதிரைகளை தற்காலிகமாகவேணும் நிறுத்தி வைக்கிறது .

சாதி , இன , வர்க்க வேறுபாடின்றி நாமனைவரும் மீனவ நண்பனுக்காக ஒன்று சேர்கிறோம் என்பதே ஒரு பெரிய புரட்சிதான் .

புரச்சியை ஆகாத விசயமாக அதை புர்ச்சி என கேலி செய்தவர்கள் தமிழக மீனவர்களுக்காக நடக்கும் புரட்சியை கண்டுகொள்ளட்டும் .

மறுபுறம் நாங்கள் களத்தில் இருக்கிறோம் நீங்கள் மத்தியதரவர்க்கம் இணையத்தில் சும்மா வாள் சுழற்றுகிறீர்கள் என சொன்ன போலி முற்போக்குவாதிகளே இது புரட்சிகரமானது என
சொல்ல வைத்து இருக்கிறது

இணையமோ மற்றெவ் ஊடகமோ அதனளவில் பிற்போக்குதனமில்லாதவை
அதை உபயோக்கிறவனே அதை தீர்மானிக்கிறான் என்பதை இந்த நபர்கள் இப்போதாவது புரிந்து கொண்டமைக்கு நன்றி !

மனிதன் மிக கொடூரமாக ஒடுக்கப்படும்போது புரட்சி வரும் என்பதை இது காட்டுகிறது
பிரச்சனையை விரிவாக அறிய சொடுக்கவும்

://inioru.com/?p=16420">http://inioru.com/?p=16420



மேலும் எகிப்தியர்களின் போராட்டம் டிவிட்டரில்:

எகிப்தியர்கள் போராட்டம் டிவிட்டரில்:எகிப்தியர்கள் களத்தில் மட்டும் போராடவில்லை. இணையதளத்திலும் போராடுகிறார்கள். உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக...
24 மணி நேரத்தில் அவர்கள் பதித்துள்ள கையெழுத்து வேட்டையை பாருங்கள்

Support the People's Revolution in Egypt



தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post