திருப்பூர் சாயப்பட்டறை வேலை இழக்கபோகிறோம்

எப்போதுமே பாதிப்புகள் பலகீனமானவர்களுக்குத்தான் என்பது சாயப்பட்டறை பிரச்சனையிலும் நடக்கிறது

தனியார் மயம் ,தாராளமயம் , மறுகாலனியாதிக்கம் இன்னும் என்ன வரையறைகள் இருக்கிறதோ அதனாலெல்லாம் பாதிக்கப்பட்டு என்னைபோல பெட்டியை தூக்கிகொண்டு திருப்பூருக்கு வேலை வந்த தொழிலாளர்கள் சுமார் ஏழு லட்சம்

பாஸ்போர்ட் விசா இவை தேவை இல்லை கட்டி செல்ல வசதி இல்லை நூறு ரூபாய் பணம் உடுத்தி கொள்ள நாலு ஆடைகளுடன் வந்திறங்கும் தொழிலாளர்களுக்கு உழைக்க தெரிந்தவனுக்கு திருப்பூர் வாழவைக்கும் பூமி

இன்றந்த பூமியை மாசுபடுத்திதான் நாங்கள் வாழ்கிறோம் என சொல்லிவாழ்க்கையை காவுகேட்கிறார்கள்

இந்த ஏழு லட்சம் தொழிலாளர்களும் இந்த சாயகழிவு நீரை வெளியேற்றிய குற்றவாளிகள் அல்ல அதேபோல பாதிப்படைந்த நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு வாழ்ந்துவந்த விவசாயிகளும் ஒரு குற்றமும் செய்யாதவர்கள்

சாயத்தை நொய்யல் ஏரியில் கலந்துவிட்ட முதலாளிகளும் அவர்களிடம் காசுவாங்கி அனுமதி அளித்த மாசுகட்டுபாட்டு அதிகாரிகளும் முதல் குற்றவாளிகள் மண் அன்னையை பாழ்படுத்தி எங்களுக்கு சோறு போடுகிறார்கள்

கடந்த முப்பதாண்டுகளாக இதை குறித்து அரசு மந்திரி முதல் மந்திரி எல்லாம் கண்டுக்காம சிவனேன்னு இருந்துட்டாங்க
இப்ப விவசாய சங்கம் வழக்கு போடுது  எங்களுக்கு நிலத்துக்கான நஸ்ட ஈடு கொடுன்னு

கோர்டு சொல்லுது உடனே ஜீரோ டிஸ்சார்சை அமுல்படுத்துன்னு  முதலாளிமார் போய் அய்யா செய்துடுறோம் கொஞ்சம் அவகாசம் கொடுங்கன்னு கேட்க சில ஆண்டுகள் அவகாசம் கொடுத்து மறுபடியும் பீஸ் கட்டையை பிடிங்கியது கோர்ட்

இதை எப்படி சமாளிக்கலாம் கழிவு நீரை என்ன செய்வதுன்னு மண்டையை போட்டு குழப்பி கண்டுபிடிச்ச தீர்வு அதிக விலை கொண்டது அதை சாதாரணமா எல்லாரும் செய்ய முடியாது  யார் உதவனும் இந்த அரசுதானே

நீ இலவசமா வேட்டி தராதேன்னு சொன்ன அந்த விவசாயி போலவே நாங்களும் சொல்கிறோம் எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்  சாயகழிவு நீரை சுத்தபடுத்த மானியம் வழங்கு திருப்பூர் தொழிலை காப்பாற்று என்றுதான்

உலகத்திலேயே தடை செய்யப்பட்ட அனைத்து சாயமும் திருப்பூரில்தான் தண்னீரில் கலக்குது  இத்தனை நாள் சம்பாதிச்ச முதலாளிமாரு கையில் காசில்லைன்னுதான் சொல்வான்

அரசுதான் தலையிடனும் தீர்த்துவைக்கனும் இல்லையெனில் 7 லட்சம் பேரும் தமிழ்நாட்டில் உடனடியா வேலை இழப்போம்

டிவிட்டரில் இணையுங்கள்

#tntirupurworkers




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post