பிணத்தினுள்ளும் பணத்தை தேடும்
நாய்கள் இருக்கும் நாடு
திவ்யாவின் நிர்வாணத்தில் இருத்த
முயன்றது கொடூரம்
உங்கள் வீட்டில் பெண் இல்லையா
நீயே பெண்ணில்லையா
என வழக்கமான கேள்விக்கு
பதிலளிக்காத பேராசிரியைகள்
ஏழை என்பதால் இளப்பம் அல்ல
இயலாதவரின் மேல் கடுப்பும் இருக்கும்
ஏழ்மையிலும் கல்வி என்பது ஏடுகளில்
ஏழ்மைக்கு சூடு அது நெஞ்சை சுடுகிறது
வழக்கு நடக்கும் சாவுக்கு இவர்கள்
காரணமல்லவென சொல்லலாம்
அல்லது இவர்கட்கு கொஞ்சம் தண்டனை கிடைக்கலாம்
அய்யோ அந்த பெண் வருவாளா ?
வேலிகள் மேயும் பயிர்களை யார் காப்பார் இங்கே
கூலிகள் வீட்டு பெண்களை யார்
கவனிப்பார்
ஏழைகள் அழுகுரல் அம்பலம் ஏறாது
எதிர்ப்பு வலுக்காமல் நீதி கிடைக்காது
எங்கள் கழுத்தை சுருக்கும் ஏழ்மை
உங்களை கண்டால் திரும்பி கொள்வதேன்
எங்களை கண்டு நீதியும் அரசும்
திரும்பிகொள்வதை போல
இறக்குமுன் ஒரு கடிதம் ஆசிரியைதான்
காரணமென இல்லாவிட்டால்
இதே திவ்யாவின் நடத்தையை பேசி
இருப்பார்கள் பத்திரிக்கை வாதிகள்
பேராசிரியைகளை ரோட்டில் கண்டால்
ஒன்றை கேளுங்கள்
ஏன் திவ்யாவை கொன்னீர்கள்
என்று
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================