ஷோபா சக்தி -தமிழச்சி

டிசம்பரில் சென்னைக்கு சென்று புத்தக கண்காட்சியில் ஷோபாசக்தியை சந்தித்து அவரது பேட்டியை வெளியிட்டேன்

தற்சமயம் ஷோபாசக்தியை பற்றி கேள்விபடும் விசயங்கள் மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன


தமிழச்சியிடம் அவர் வரம்புமீறி நடந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை ஆதாரமின்றி ஏற்றுகொள்ள இயலாது என்றாலும் தமிழச்சி வெறுமனே இப்படி ஒரு குற்றச்சாட்டை ஏன் வைக்கனும் என்றும் என்னை யோசிக்க வைக்கிறது

ஆனால் தமிழச்சியிடமும் சில கேள்விகள் இருக்கு

ஒன்று

//'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது, கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். போதையில் இருந்த சோபா, அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, ஐ லவ் யூ என்றார். மேலும் கோபமடைந்து உடனே அங்கிருந்து கிளம்பி, சோபாவின் நடத்தையையும், அவரை அடித்ததையும் எனது வலைப்பக்கத்தில் பதிவாகப் போட்டேன். வலைப்பதிவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.//

இதன்மூலம் காதலிக்கிறேன் என்று சொன்ன சோபாசக்தியை தாக்கியதாக எழுதும் தமிழச்சி

பிறகு
//அன்று இரவு 11.45 மணிக்கு மீண்டும் சோபாவிடம் இருந்து போன். நான் இருக்கும் ஊரில் இருப்பதாகவும், ஒரு நண்பனைப் பார்ப்பதற்கு காரில் அழைத்துப் போக முடியுமா என்றும் கேட்டார். நான் முடியாது என்று சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன். நான் இருக்கும் ஊரில் உள்ள ஹோட்டலில் இருப்பதாகவும், உடல்நலம் சரியில்லை என்றும் சொன்னார். மனம் பொறுக்காமல் பார்க்கச் சென்றேன். அந்த காலை நேரத்திலும் போதையில் இடுப்பில் ஒரு துண்டுடன் இருந்தார். குகன் என்பவர் சோபாவைத் தொலைபேசியில் அழைக்க, சோபா அவரிடம் 'நான் தமிழச்சியுடன் ஹோட்டலில் இருக்கிறேன்' என்றார். அடுத்து வந்த 3, 4 அழைப்புகளிலும் இதேதான் சொன்னார். எனக்கு ஆத்திரமாகி ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு, என் கைபிடித்து இழுத்தார். நான் கோபத்தில் அவரை பலமாகத் தாக்கினேன். அடித்தும், உதைத்தும் அவரைக் கீழே விழச் செய்தேன். சோபா அழத் தொடங்கிவிட்டார். அன்றோடு துண்டாகிப் போனது சோபாவுடனான எனது நட்பு. அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது.//

மூன்றாவது சந்திப்பு போகவேண்டிய அவசியம் இல்லையே ஏன் சென்றார் என்பது எனது கேள்வி 
இதன் மூலம் நான் தமிழச்சிக்கு ஒரு கொடுமை நடந்து(அப்படி நடந்திருப்பின்) அதை மறைப்பதற்காக பேசவில்லை 
அத்துமீறிய பேசியதாக தன்னால் தாக்கப்பட்ட  ஒரு நபரை அவரதுஓட்டல்  ரூமில் சந்தித்தது ஏன்

ஷோபாசக்தி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்கிறார் என்ன ஆதாரம் கொடுக்க முடியும் என திருப்பி கேட்கிறார்கள்

இன்னொரு புறம் வளர்மதி சுகுணாதிவாகரை தாக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிள்ளைமார் பிள்ளைமாருக்கு சப்போர்ட் செய்கிறார் என வாதிடுகிறார்


ஒரு முற்போக்கு வாதி எழுதுகிறார் லீனாவை கேள்வி கேட்டோம் என சொல்கிறீர்களே இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்று லீணாவின் மீதான அவதூறான கேள்விக்கு உங்களை போல கள்ள மெளனமோ மழுப்பலோ பதிலாக தரவில்லை


லீனாவின் செருப்புக்கும் மரியாதை இருக்கு தமிழச்சியின் செருப்புக்கு உள்ளதை போல  லீணா அடிக்க சென்றது சிகப்பு சட்டைகளை  தமிழச்சி அடிக்க சென்றது ஷோபா சக்தியை

சுட்டிகள் :
தமிழச்சியின் எதிர்விணை - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

மினர்வாவின் பதிவு - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post