பெண்ணுக்கு கட்டற்ற பாலுறவு சுதந்திரம் கோரி அதை சுரண்டுவது சரியா ?
ஆடுநனையுதேன்னு ஓநாய் அழுததாம் என்கிற ஒரு பதிவை ஷோபாசக்தியின் தளத்தில் எழுதி இருக்கிறார் (நிர்மலா ராஜசிங்கம்)
தற்சமையம் ஷோபாசக்தி மீது தமிழச்சி கையை புடிச்சு இழுத்தான் என்கிற குற்றசாட்டை வைத்திருக்கும் போது சோபாசக்தியின் கட்டற்ற பாலியல் சுதந்திரம் குறித்த கருத்தை நான் அறிய அவரது பழைய பதிவுகளை படித்து பார்க்கையில் மேற்கண்ட கட்டுரையின் அம்சங்களை விமர்சன பூர்வமாக அணுக வேண்டியதாக இருக்கிறது
அந்த கட்டுரையில் இப்படி சொல்கிறார்
////வெவ்வேறு தத்துவார்த்தப் பின்புலத்தைப் பெண்ணிய அமைப்புகள் கொண்டிருப்பினும் ஒரு புள்ளியில் அவர்கள் இணைகின்றனர். தனது பாலியல் உறவை தேர்ந்தெடுக்கும் உரிமை, யாருடன் பாலியல் உறவை எப்போது வைத்து கொள்ளலாம் என்ற உரிமை, தனது உடல் சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை ஆகியவை பெண்ணின் அடிப்படை உரிமைகள் என்கின்றனர் பெண்ணியவாதிகள். இது மேற்கு நாட்டு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. தமிழ் பெண்களுக்கு உரித்தான உரிமையும் கூட. குடும்பம், பாலுறவு ஆகியவை பெண்ணடக்குமுறையின் கருவிகளாக இருப்பது மேற்கு நாட்டில் மட்டுமல்ல அனைத்து சமூகங்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும். அவர்கள் என்ன சாதி, என்ன மதம், என்ன நிறம், எந்த வர்க்கம் என்பதற்கு மேலாக இது எல்லா பெண்களுக்கும் பொதுவான அம்சம்.//
குடும்பம் பெண்ணை அடக்குகிறது சுரண்டுகிறது என பலவாறாக முழங்குகிறார் கட்டுரையாளர் ஆனால் ஷோபா இன்னொரு பெண்ணை உறவுக்கு அழைக்கிறார் அதன் தத்துவார்த்த அடிப்படையாக நிலவும் சமூகம் பெண்ணை ஒடுக்குகிறது என்கிறார்
இது சரியா இது எப்படி இருக்குன்னா முதலாளி ஒடுக்குகிறான்னு சொல்லி சந்தா வாங்கி தின்னும் தொழிற்சங்க தலைவர் செய்வது போன்றது
தமிழச்சி சொல்வது சரி என வைத்து கொண்டு நாம் மேலே செல்வோம் அதாவது ஷோபாசக்தியின் கருத்துக்களை ஆராய
ஒரு பக்கம் சோபா சக்தி பெண்களின் சுதந்திரம் பற்றி மிக அதிக கவலை கொள்கிறார்
பெண்களின் மீதான ஒடுக்குமுறை பற்றியும் எங்கெல்ஸ் புத்தகத்தில் (அரசு குடும்பம் தனிசொத்து ஆகியவற்றின் தோற்றம் ) இருக்கும் விபரங்கள் நிராகரிக்கப்பட்டவை என்றும் அது குடும்பம் பற்றிய குறைபாடான கருத்து கொண்டது என சொல்லி அவர் சொல்வது போல பெண்களுக்கான சுதந்திரம் என்பது பெண்களே தீர்மானிப்பதாக இருக்கவேண்டும் என சொல்வது உள்நோக்கம் என்னவென ஆராய வேண்டும்
பெண்கிட்ட அவளோட உடம்புக்கு சுதந்திரம் கொடுன்னு போராடனும் ஆனால் மறுபக்கத்தில் பெண்கிட்ட அதாவது பெரியாரியம் மார்க்சியம் பேசும் பெண்கிட்ட போய் தர்க்க ரீதியா பேசி மடக்கனும் என்கிற எண்ணம் வருகிறது.
மார்க்சியம் அல்ல பெரியாரியம் அல்ல சுய நலமே பல்வேறு தத்துவ அடிப்படைகளை தனக்காக உருவாக்குகிறது அதுதான் சோபா சக்தி செய்வது
ஈழ விடுதலை பற்றி பேசனும் ஆனால் புலிகளின் போராட்டத்தை எதிர்க்கனும் அல்லது மக்களை திரட்டி போராடுனும் என கோரிக்கை வைக்கும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்க்கனும் எதுவுமே சாத்தியமல்ல என கதைகளை மட்டும் எழுதனும் என்கிற முரண் நிலையில் வந்து சோபா நிற்பதை போன்றது
பெண் விடுதலை என்பது வர்க்க போராட்டத்துடன் இணைக்கப்படனும் அது ஆண்களுடைய சலுகைக்கு உட்பட்ட விடுதலை அல்ல என கோரும் மார்க்சியத்தை நுணுக்கமாக மறுக்கிறார் கட்டுரையாளர் நடைமுறையில் ஷோபா தனது சொந்த இச்சைகளை தத்துவார்த்த கருத்துக்களை கொண்டு ஈடு செய்கிறார் .
பின் இணைப்பு:
------------------
முதல் வர்க்க ஒடுக்குமுறை பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகின்றது. ஒருதார மணம் மணமுறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதேசமயத்தில், அது அடிமைமுறையுடனும் தனிச்சொத்துடனும் சேர்ந்தாற்போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் துவங்கியது."3
ஒரு தாரமுறை ஒரு முன்னேற்றம் என்றால் அதை வைத்துகொண்டே பாலுறவு சுதந்திரம் மட்டும்
அதாவது ஒரு தாரமுறை தனிசொத்துடமை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்தாமல் பெண்களின் பாலுறவு சுதந்திரத்தை அவர்களிடம் பேசி பேசி உருவாக்கும்வது
நேர்மையான வழிமுறை அல்ல
அதை ஷோபாசக்தி செய்திருந்தால்
அது சொந்த சுரண்டலே தவிர பெண்விடுதலை அல்ல
//தாயுரிமை தூக்கியெறியப் பட்டது. இது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள், அடிமைப்படுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள். கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகி விட்டாள். இது பெண்ணின் நிலையைக் கீழ் இறக்கிவிட்டது"3//
ஆணாதிக்கம் என்பது தனிசொத்துடன் ஆணுக்கு சிறப்பு சலுகை வழங்குவதில் ஆரம்பிக்கிறது என்கிறார் எங்கெல்ஸ்
ஆனால் சமூக உற்பத்தியில் எந்த மாற்றத்தையும் கோராமால் மாறாமல்
பாலுறவு சுதந்திரமும் கட்டற்ற உறவும் பெண்களை சுரண்டுவதில்தான் போய் முடியும் அதை ஷோபா செய்கிறார் என்றால் அது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்’
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================