தோழர் நன்மாறன் பற்றி

சிபிஎம்முடன் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும் தோழர் நன்மாறனை நான் சிறுவயது முதலே பார்த்து வருகிறேன் அவரை பற்றி குமுதத்தில் வந்துள்ள கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமைபடுகிறேன் சேற்றில் கூட செந்தாமரை இருப்பதில்லையா அதைபோலத்தான் போலிகம்யூனிஸ்டு கட்சியில் ஒரு நல்ல உள்ளம்

----------------------------------------------------------------------------------

அம்மா, அப்பா: கூலி

மகள் : எம்எல்ஏ

 

இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏ-வாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

 

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன்னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் தேவ்டு காத்து நிற்கிறார்கள். மார்க்சிட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ.

நன்மாறன்

எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதாரம் என்று எளிமையாய் சிரிக்கிறார்.

 

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எசி படித்துவிட்டு வேலைபார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட்டுப் பெண்!

பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமையாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து என்கிறார்.

 

 

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

 

இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோ. அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி!

லீமாறோஸ்

ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர். எங்க போனாலும் பதாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர்கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க.

 

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறா ங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும் என்று சொல்லும் லீமாரோ பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

 

உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன? என்றால், பெரியதாக சிரித்தவர்... ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து என்று நம்மை பதற்றப்பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

 

சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளால வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது? என்று சொல்லும் லீமா ரோ,

 

நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?

 

- கடற்கரய்

படங்கள் : ஆர்.சண்முகம்

நன்றி : குமுதம் (2.3.2011)




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post