எங்களது அராஜகத்துக்கு கவிதை அனுபவம் கேட்டல் என பெயர்வை

எல்லாவற்றையும் புலியிசமாக பார்க்கும் இராயாகனும் லீனா மணிமேகலையின் விசயத்தை புலியிசமாக பார்ப்பது வருத்தமளிக்கிறது

இங்கு லீனாவின் கவிஜையை யார் வரவேற்று சொற்பொழிவு ஆற்றவில்லை
அவர் கவிதையை இதை எழுத தூண்டிய அனுபவத்தை சொல் என கேட்பது

ஒரு கவிதையோ கதையோ தன்னுடைய சொந்த அனுபவமாகத்தான்
இருக்க வேண்டுமா என்ன ?

வானில் ஏறி விண்ணை சாடுவோம்னா

எப்ப வானத்தில் ஏறினாய் எப்படி விண்ணை சாடுவாய்

என கேட்பார்கள் போல இங்கு கவிதை எழுதுபவர்கள் அதன் அனுபவத்தை
சொல்ல வேண்டும் என்பது கவிதையின் அடிப்படை புரிந்துகொள்ளாதவர்களின் போக்கு தாய் எழுதிய கார்க்கி தனது சொந்த அனுபவத்திலா
எழுதினார் .

மற்றவர்களை அனுபவங்களை வலிகளை புரிந்து கொள்பவன்
கவிஞனாக எழுத்தாளனாக வருகிறான் பாட்டாளியாக இருந்துதான் பாட்டாளிகளின் வலியை புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை

ஒரு தலித்தாக இருந்தால்தான் தாழ்த்தபட்ட சகோதரர்களின்
வலியை புரிந்து கொள்ள முடியும் என்பதில்லை

அடிப்படை விசயங்களை புரிந்து கொள்ளாமல் இவர்கள்
ஆட்திரட்டி போய் "ஆண்குறிகளின் வகைமாதிரியை சொல் "என சொல்வது

அராஜக வாதம் ..

வீட்டுக்கு வருவோம் உன் மனைவியிடம் காண்பிப்போம் எல்லார் வீட்டிலும் கவிதையை புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்களா ?

உன் எழுத்துக்கு நேர்மையாய் இரு என்பது என்ன நேர்மை என சொல்கிறார்கள்
என்றால் "எல்லா ஆண்குறியும் என்று கவிதை எழுதினால்
ஆண்குறிகளின் வகைமாதிரியை சொல்லு"
அது உன்னுள் எப்படி பாய்ந்தது என பதில் சொல் என்பதா


இதென்ன கவிதைக்கு அர்த்தம் கேட்டு மிரட்டும் தொணி

பல்வேறு வழிமுறைகளில் அட்ரஸை தெரிந்து கொண்டு
ராமசுப்ரமணியம் என்பவரின் வீட்டுக்கு போய்

விடியல் காலை கதவை தட்டி விளக்கம் கேட்டும்
கலாசார காவலர் பணியை மக்கள் உங்களுக்கு கொடுத்தார்களா

ஏழை எளிய உழைக்கும் மக்களின் பிரதிநிதி என சொல்லி கட்சி நடத்துகிறோம் என்றால் நிதி கொடுக்கும் ஐடி காரனெல்லாம் மாதம் 50 ஆயிரத்துக்கு மேல வாங்கிறானே அவன் எந்த வர்க்கம் அவன் மக்களுக்காக என்னைக்கு
தெருவில் இறங்கி போராடி இருக்கான்.

அவன் தரும் பணம் மட்டும் குட்டி முதலாளி தரும் பணம் இல்லையா


புணர்ச்சி விகிதத்தில் மார்க்சை எங்கெல்சை கலந்து எழுதி அவர்களின் மேல் சேற்றை வாரி இறைத்தல் அவர்களின் தத்துவத்தை எமது வாழ்வின்
லட்சியமாக வைத்துள்ளதால் நாம் கோபம் கொள்கிறோம் சரி .

அதற்கு அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிடலாமா? அவர்தான் குட்டி முதலாளிவர்க்க பிரதிநிதியாச்சே அங்கே பேசிய ஐம்பது பேரையும் கடும் உழைப்பு சிறைக்கு அனுப்புவோமா அல்லது மரணதண்டனை கொடுத்துடலாமா? (இந்த கருத்தை நான் வாபஸ் வாங்குகிறேன் இது
எதிர்மறையாக முதலாளித்துவ பாசிஸ்டுகள் சொல்வது போல இருப்பதால்)

சோபா சக்தி புலிகள் அமைப்பில் இருந்ததால் பெண்களை வசப்படுத்துவதில் கிள்ளாடியாம் லீனாவை வசியபடுத்திட்டாராம்

இதுபோன்ற கிசு கிசுவை எல்லாம் எழுதும் நிலையிலும் அதற்கு பதில் சொல்லும் நிலையிலும் அதையே பதிவெழுதும் நிலையிழும் புரட்சிகர கட்சிகள் இருக்கும் அவலநிலையை என்ன சொல்வது

நான் மார்சிஸ்டு இல்லையாம் ?

காண்க (அரடிக்கெட்டு என்ற பெயரில் என்னை பற்றி போடப்பட்ட கமெண்டு அதை பிரசுரித்த வினவு தளம்)


ஆமாம் நான் இவங்க கிட்ட கேட்டேனா நான் மார்க்சிஸ்டுன்னு அங்கீகாரம் தர சொன்னேனா ?

துரோகின்னு சொல்லிடுவீங்க , காலவாரிவிடுபவன் என சொல்லி விடுவீர்கள்
(இந்த விமர்சனம் ஏனெனில் துரோகம்னு இந்த பதிவெல்லாம் போட்ட பிற்பாடு அசுரன் தளத்தில் சொன்னார் www.poar-parai.blogspot.com)

இவ்ளோதானா உங்கள் சிந்தனை என்பது தெரிந்ததும் சிரிப்புதான் வருகிறது தோழர்களே ,தோழர்களாகிய நண்பர்களே !


1.லீனாவின் கருத்து ஏற்றதக்கதில்லை ஆனால் அவர் அதை வெளியிடும்
உரிமை இருக்கிறது அவருக்கு .
2.கவிதைகள் அனுபவத்தில் இருந்து பிறக்கவேண்டும் என்பதில்லை
3.வீட்டுக்கு போய் மிரட்டினால் வீட்டுக்கு வருபவனின் கையை
உடைக்க அதிக நேரமாகாது என் வீட்டு வந்தால் அதைத்தான் செய்வேன்
(இந்த கருத்துக்காக நான் சுயவிமர்சனம் ஏற்கிறேன் தொழிலாளி வர்க்கத்தை
விமர்சனம் செய்து கவிதை எழுதுபவனை ஈராக் உழைக்கும் மக்களை
கேவலப்படுத்துபவனை ஆதரிப்பதாக இருக்கிறது இந்த கருத்து )


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

25 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post