எழுதியவனை அழைத்துவா இங்கே

எழுதிய வார்த்தைகள்
எங்களை கீறின
நாங்கள் எடுத்துவிட்டோம்
வாளை நாவினால்

எத்தனை குறிகளை
நீ பார்த்து இருப்பாய்
நீ விபச்சாரிதானே
என்பதெங்கள் வாதம்

எழுதுகோளை எதிர்கொள்ள
ஆயுதம் எடுத்தோம்
வேசி முண்டை என
திட்ட வைத்தோம்

கெட்ட வார்த்தை உனக்கு
மட்டுமா எங்களுக்கு
இவ்ளோ தெரியும்
என சொன்னோம்

அழிந்தது அராஜம்
அழிந்தது பெண்ணியம்
என்ற பேரில் எழுந்த
பிற்போக்கு என கூவையில்

இதை எழுதலாம்
இதை எழுத கூடாதென்ற
அதிகாரபீடத்தில்
அமர்ந்திருந்தோம்

கையில் சாட்டைகள்
கவிதை எழுதி
என்னிடம் காட்டு
நான் சொன்னால் போடு
இல்லையேல்
உன்னை போடுவேன்

எங்களை பற்றி எழுது
பல கவிதைகள்
வாங்கி கொள் பட்டம்
எதிர்கவிதை எழுதினால்
பிரின்செய்து கொடுப்போம்
வீதி யெங்கும்

ஏற்கனவெ யோனியை
பெண்கள் சொல்ல
கூடாதெனும் சமூகம்
சும்மா விடுமா உன்னை
புறட்டி விடும் புறட்டி

நாங்கள் பேசுவோம்
பெண்ணியம்
அந்த அரங்கில்
அமர்ந்திருக்க விருப்பமா

எழுது எங்கள் பக்கம்
சாய்வான ஒரு கவிதையை
திருந்து இதை எழுதனும்
என்ற விதி பார்த்து

எந்த அதிகாரத்தின்பேரால்
நாம் பேசுகிறோம்
என எவன் கேட்பது
அவன் ஏன் அந்த
போராட்டத்தை செய்யவில்லை

எல்லா போராட்டம்
எங்களால் செய்யபடும்போது
எங்கு சென்றாய்
கவிதாயினி

ஏன் ஈழ போராட்டத்தில்
உன்னை காணவில்லை
இனியொரு முறை
நடந்தால் எங்கள் பேனாமுனைகள்

கீறிடும் உன் சுதந்திரத்தை
அது தரும் சூத்திரத்தை

அராஜக வாதிகள் அல்ல
புரட்சி காரர்கள் நாங்கள்




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post