குழுமங்கள் பற்றிய என் கருத்து

கூகிளின் குழுமங்கள் ஆரம்பிக்கும் வசதி என்னைக்கு வந்ததோ எனக்கு தெரியாது . இன்று பல குழுமங்கள் இருக்கு இணையத்துல .

அதில நானும் ஒரு குழுமம் வச்சி இருக்கேன்னு வைங்க
ஆனா ஜனநாயகம் ஜனநாயகம்ன்னு சொல்வாங்களே அது
நயா பைசாவுக்கு கிடையாதுங்க !

ஏன்னா நீங்க ஒரு குழுமத்தில சேர்ந்து எழுத ஆரம்பிப்பீங்க உங்க கவிதையோ கட்டுரையோ போடுவீங்க
நல்லா தான் போகும் கொஞ்சநாளைக்கு !

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து நிர்வாகின்னு ஒருத்தர் நீங்கள் இந்த இழையில் இப்படி எழுதுறீங்க அப்படி எழுதுங்கன்னு சொல்வார் மேலும் உப்பு சப்பில்லாமல் எழுதும் அந்த குழும நிர்வாகி எழுதும் கவிதைகளை
ஆகா ஓகோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க இப்ப உங்களுக்கு கடுப்பாகிடும் .

அதுக்கு தமிழ் மணம் எவ்வளவோ அதிக சுதந்திரம் கொடுக்குதே! இந்த மாதிரி குண்டாஞ்சட்டி குழுக்களில்
எழுதுவதற்கு பதிலாக பேசாமா உங்க பிளாக்குகளில் எழுதுங்க.

குழுமங்கள் அதிகார மையங்களா போயிடுச்சு அதான் இதை சொன்னேன்
குழும நிர்வாகி சொல்வதுதான் வேதம் , அவர் நான்கு வேதத்தையும் கறைச்சி குடிச்ச மாதிரி உக்கார்ந்து இருப்பார் .

மற்றபடி நல்ல படியாக செல்லும் குழுமங்கள் இருக்கு ஆனா நீங்க நல்லா விசாரித்து பார்த்து சேரனும்

நான் மேற்சொன்ன வரையறை அனைத்து குழுமங்களுக்கும் பொருந்தாது

ஒரு சில குழுமங்களுக்குதான் பொருந்தும்

தியாகு

10 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post