மாற்று அரசியலும் மாற்று தர அரசியலும் தேர்தல் கூட்டணியும்

ஊழல் கட்சிகளோட ஏன் தேர்தல் கூட்டணி வைக்கிறீங்க மாமா என நான் பத்தாம்வகுப்பு படிங்கும் போது சிபிஎம்மில் இருக்கும் மாமாவிடம் கேட்டிருக்கிறேன்  அப்போது அவரது பதில் தேர்தல் கூட்டனி வேறு கொள்கை வேறு என்பதாக இருக்கும் .
ஒரு ஜனநாயக நாட்டில் கூட்டணி அமைத்து வேலை செய்வது ஒன்று போராட்டங்களில் போது கூட்டணி அமைப்பது என்பதெல்லாம் இருந்தது அந்த காலம் ஆனால் போராட்டங்களே செய்வதில்லை என்றும் எப்பவாவது ஒரு சில போராட்டங்கள் அதுவும் மக்களின் கவன ஈர்ப்பு போராட்டங்கள் மட்டுமே செய்வது என்றும் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் உட்பட மாறியது 90 களுக்கு பிறகு .





விசயத்துக்கு வருவோம் ஜெயா உடனும் கருணாநிதியுடனும் மாறி மாறி கூட்டணி வைத்தவர்கள் தாம் கம்யூனிஸ்டுகளும் , வி சிறுத்தைகளும் , வாசன்களும்  ,வைக்கோவும் அனைத்து அல்லு சில்லு கட்சி எல்லாமே அந்த இரு பெரும் கட்சிகளோடு கூட்டணிவைத்து அந்ததந்த காலகட்டத்துக்கு தகுந்தா மாதிரி பேசி வந்தவர்கள்தாம் .
தனியே உருவானார் விஜயகாந்த் அவருக்கு இருந்த ரசிகர் பலத்தில் உருவாகி 8 சதவீத ஓட்டுகளை பெற்றார் .
இந்த கூட்டணி எப்படி உருவாச்சு என்பதே மக்களுக்கு தெரியாது என்கிற மாதிரியும் என்னமோ வைக்கோ இப்போதான் பிறந்து வந்து ஊழலை பற்றி பேசுவது மாதிரியும் பேசிட்டு இருக்காரு
அவர் திமுகவில இருந்தப்போ சர்காரியா கமிசன் ஏன் வச்சாங்க
காங்கிரசின் முதல் ஊழலான நகர்வாலா ஊழல் முதல் அடுத்தடுத்து ஊழல்களை திமுக இன்றுவரை செய்து வருகிறது அதில் இருந்த வரை அதை சொல்லாத வைக்கோ இடையில் புலிகளின் அனுதாப அரசியல் செய்தார் இப்போ புலி சத்தம் ஓய்ந்ததும் அவர் ஆரம்பித்ததுதான் இந்த மாற்று அரசியல் எனும் விசயம்.
எல்லாம் நல்ல விசயம்தான் காட்டில் இருந்த நரிதான் சாயம் பூசிட்டு வந்திருக்குன்னு மக்களுக்கு தெரியாதா?
மக்கள் ஏமாளிகள் முட்டாள்கள் என்ற கணக்கை இவர்கள் எப்படி போட முனைந்தார்கள்
மாற்று அரசியலே கூடாது என்பதல்ல எனது வாதம்
எதில் மாற்று மாற்று தரமான அரசியல் வேணும்
மக்களுக்கான அரசியல் எதுவென்றால் அவர்களின் வாழ்க்கை பிரச்சனைகளை தீர்க்க போராட்டங்களை செய்யும் தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்
1.கம்யூனிஸ்டுகள் பகுதி பிரச்சனைகளுக்கு போராடுவதும் இன்னொரு பக்கம் கொள்ளை இல்லாமல் கூட்டணி வைப்பதும் முரண்பாடு
2.வைகோ ஈழ பிரச்சனையை மட்டுமே மையபடுத்தி இதுவரை
பேசி வந்தது உள் நாட்டு பிரச்சனைகளை பேசாமல் விட்டதும்
3.திருமா சாதி கட்சியை போன்று குறுகி போனது
இந்த குறைபாடுகள் இல்லாமல் தங்களை சீர்தூக்கி பார்த்து அடுத்த கட்டமாக - மக்கள் பிரச்சனைகளை முரண்பாடின்றி முன்வைத்து தேர்தல் கூட்டணியை பின்னால் வைத்து செயல்பட்டால் இன்னும் ஒரு தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம்

இதற்கிடையே
விஜயகாந்துக்கு என்னாச்சு மக்கள் அவர் பேச்சை விரும்பவில்லை மேடை பேச்சின் தரம் குறைத்துவிட்டார்
மேடை பேச்சில்தான் திமுக மக்கள் ஆதரவை அள்ளினார்கள்
அண்ணாவின் மேடை பேச்சு கலைஞரின் மேடை பேச்சு வைக்கோவின் மேடை பேச்சு என்ற ஒரு பாரம்பரியம் இருக்கிறது
விஜயகாந்து அந்த விசயத்தில் தோற்று விட்டார் அவர் பிம்பம் சிதைந்து விட்டது
என்னதான் இலவச மருத்துவமனை நடத்தினாலும் பலருக்கு உதவிகள் செய்தாலும் அதெல்லாம் எடுபடமால் போய்விட்டது அவரது மேடை பேச்சால் .
மக்கள் தலைவர்களாக உருவாக முதலில் மக்களை நேசிக்கவேண்டும் அவர்களது பிரச்சனை யை தமது பிரச்சனையாக உணரவேண்டும்
இதோ விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது மத்திய மாநில அரசுகளின் பாராமுகம் விவசாய கொள்ளை இவற்றை இவர்கள் கையில் எடுப்பார்களா?
தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் விவசாயிகளை ஒன்று திரட்டி இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் போராடட்டும்
ஓட்டை கேட்டு வீட்டுக்கு இவர்கள் போகவேண்டியதில்லை

வைக்கோவின் தேர்தல் அரசியல் வரலாறு காலகட்டங்கள்

1994 - மதிமுக தோற்றம்
1996 - தேர்தலில் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி வைக்கோ போட்டிவிளாத்திகுளம், சிவகாசி ஆகிய இரு தொகுதிகளிலும் தோற்றார்.
2004 - ஜெயிக்க வாய்ப்பிருந்தும் போட்டியிடாமல் தோற்றார் இப்போ திமுகவுடன் கூட்டணி கண்கள் கலங்கின இதயம் பனித்தது பாணி டயலாக்குடன் அண்ணனுடன் தம்பி சேர்ந்து விட்டார்
2009 -தேர்தலில் தோல்வி அடைந்தார் விருது நகரில் 
2014 - பஜக என்ற கட்சியை சப்போர்ட் செய்தார் இந்த பாஜக ஒரு மதவாத கட்சி என தெரிந்தும் ஈழ பிரச்சனைக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என சொல்லி உள்ளூர் அரசியலை கோட்டை விட்டார் 
இதுதான் குறைந்த பட்ச வைக்கோவின் வரலாறு 
சிறந்த மேடை பேச்சாளராக இருந்தும் அரசியல் கணிப்பில் தோற்றார் வைக்கோ என சொல்லலாம் 
விஜயகாந்த் வந்தவுடன் மக்கள் நல கூட்டணி என்பது திமுக அதிமுகவில் ஓட்டு பேரம் கிடைக்காத கூட்டணி என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றே கருதலாம் 
ஆக மக்கள் பிரச்சனைக்கு போராடி வெற்றி பெறுக்கள் மாற்று அரசியல் வரும் 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post