thanks -to The hindu
"எத்தனை முறை வாக்களித்துவிட்டோம் ஏன் இன்னும் நமது வறுமை மாறவில்லை . நல்ல சாலைகள் குடிநீர் இலவச கல்வி போன்றவை கிடைக்கவில்லை ,நாம் ஏன் இன்னும் இலவசங்களுக்காக அலைகிறோம் நம்மால் ஏன் ஒரு சுயகவுரத்துடன் வாழ முடியவில்லை ஓசியா குடுத்தா பினாயில கூட வாங்கி வாங்கி குவித்து விடுவோம் "
என்பது எப்படி பட்ட ஒரு கேவலமான மனநிலை !நடுத்தர வர்க்கத்தினரின் புலம்பல் இது
ஒரு கிரைண்டர் ஒரு மிக்சி இதெல்லாம் வாங்க கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைக்கும் ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசியும் இலவசங்களும் தேவையாக இருக்கின்றன. இவர்கள்தான் வாக்கு வங்கி என்பதால் இலவசத்தை அள்ளி வீசுகிறார்கள் மேலும் குடி நமக்கு கேடல்லவா நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்குமே அவர்களுக்காக நாம் குடிக்க கூடாது என சிந்திப்பார்கள் நடுத்தர வர்க்கம் ஆனால் ஏழைகளுக்கு பாட்டாளிகளுக்கும் குடி எளிதாக கிடைப்பதும் இலவசங்களில் ஒரு நாளில் சாப்பாடு ஓடி விடுவதும் வாழ்க்கையை ஹிப்பி வாழ்க்கையை போல ஆக்கி வைத்திருக்கிறது.
இதை அதிமுக மிக நன்றாக புரிந்து கொண்டு இந்த விளையாட்டை விளையாடுகிறார்.
2011
ல் இலவசங்களை கொடுத்து ஆட்சியை புடித்த போதே புரிந்து கொண்டிருப்பார்
இலவசம்தான் நமது தூண்டில் புளு கண்டிப்பா மீன் சிக்கும் என்பதை .
திமுக திருமங்கலத்தில் அடுத்த கட்ட நகர்வை கொண்டு சென்றது அதாவது ஓட்டுக்கு பணம் என்ற பார்முலா இதுவும் ஜனநாயக படுகொலைதான் .
திமுக திருமங்கலத்தில் அடுத்த கட்ட நகர்வை கொண்டு சென்றது அதாவது ஓட்டுக்கு பணம் என்ற பார்முலா இதுவும் ஜனநாயக படுகொலைதான் .
இந்த அரசியலின் மகா வினோதமே ஆட்சி வந்தவன் வரப்போகிறவன் எல்லாரிடமும் இருக்கும் அளவுக்கு அதிகமான பணம் நடுவில் இருக்கும் அறிவு ஜீவிகளும் நடுத்தரவர்க்கமும் என்ன செய்ய முடியும் அவர்களது ஓட்டு ஒரு வரையறைக்குட்பட்டதே
கம்யூனிஸ்டுகளிடம் கூட சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்து விட்டதால் அவர்களும் கூட்டணிக்கு அலைகிறார்கள்
1.இலவச மிக்சி கிரைண்டருக்கு ரூ -8 ஆயிரம் கோடி எத்தனை தொழிற்சாலைகள் திறந்திருக்கலாம் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கலாம் ?
2.அம்மா உணவங்களுக்கு வந்து நிற்கும் வரிசையில் உள்ளவர்களை திருப்பூர் போன்ற ஒரு பனியன் தொழிற்சாலைகளை ஆரம்பித்து வேலை செய்தால் குறைந்த விலை உணவை கொடுத்திருக்கலாம்
3.எத்தனையோ தொழில் முனைவோர் இருக்கிறார்கள் அவர்களுக்கு தொழில் துவங்க மானிந்யம் வழங்கி இருக்கலாம்
http://www.tamilhindu.com/2014/07/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/
செய்ய வேண்டிய வேலைகளுக்கான நிதி என்பது பல ஆயிரம் கோடி தேவை படும்போது ஏன் இலவசத்தில் அள்ளி இரைக்கிறார் நிதியை
//
தமிழக காவல் துறையை நவீனப்படுத்த, ரூ. 10
ஆயிரம் கோடி வழங்க வேண்டும்; தமிழகத்தில், அத்திக்கடவு- அவிநாசி வெள்ளநீர்
கால்வாய் இணைப்புக்கு, ரூ. 1,862 கோடி வேண்டும் (கடந்த 20 ஆண்டுகளாக
இத்திட்டம் குறித்து அரசுகள் வாக்குறுதி அளித்து வந்துள்ளன) ; பெண்ணையாறு-
பாலாறு இணைப்புக்கு, ரூ. 500 கோடி; காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக்கு,
ரூ. 5,166 கோடி; தமிழகத்தில் உள்ள, 32 ஆயிரம் கட்டுமரங்களை மோட்டார்
படகுகளாக மாற்ற, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 9 கோடி; ராமநாதபுரம் மற்றும்
திருவாரூர் மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தேவையான,
உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, ரூ. 420 கோடி; மீன்பிடித் துறைமுகங்களை
ஆழப்படுத்த, ரூ. 1,520 கோடி ரூபாய் தேவை. எனவே, ஆண்டுக்கு,ரூ. 10
கோடியாவது ஒதுக்க வேண்டும். காவிரி கால்வாய்களை நவீனப்படுத்த, ரூ. 11,421
கோடி வழங்க வேண்டும்.
இவ்வாறாக, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களின் பட்டியலைப்
படித்தாலே மலைப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்க
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமானது. இவ்வாறு வழங்கப்படும் நிதி மாநில
அரசின் இலவசத் திட்டங்களுக்கு அளிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும்
இல்லை. இதைத் தான் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது’
என்று சொல்கிறார்களோ?//