கஸ்தூரிபா காந்தி என்ற பெண்போராளி



கஸ்தூரிபா காந்தி

பெண் என்பவள் எப்போதுமே அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டுமே வாழ்ந்து வருகிறாள் . கணவன் – பிறகு அவளது குழந்தைகள் இந்த சமூகம் இது முழுக்க ஆண்களால் அவர்களின் கருத்துக்களால் நிறைந்தது.
காந்தியை பற்றி அறிந்து கொண்ட நமக்கு கஸ்தூரிபாவை பற்றி எவ்வளவு தெரியும் என்பது வியப்பான கேள்வி?
காந்திதான் கஸ்தூரிபா , கஸ்தூரிபாதான் காந்தி என சொல்ல முடியாது.
 
வேலைக்கு போகவேண்டும் என எனது மனைவியிடம் நான் சொன்ன போது அது பொருளாதார தேவையாக மட்டுமே இருந்தது ஒரு முறை எனது தாய் அவளை திட்டியதும் “நான் ஒரு ஆசிரியையாக மிக அந்தஸ்தாக சமூகத்தில் மதிக்கப்படுகிறேன் ஆனால் உங்கள் அம்மா குறைந்த பச்ச மரியாதையை கூட தரவில்லை “ .
பெரும்பாலும் வீட்டில் வேலை சென்றாலும் வீட்டு வேலைகளை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் போது வெடிக்கும் சண்டைகளினூடே அவளது கருத்துக்கள் வரும்.
ஆரம்பத்தில் இருந்தே சமூக உழைப்பை செலுத்தும்படி நான் அவளை கேட்டு கொண்டேன் இதன் மூலம் சமூகத்தில் இருந்து நிறைய கற்று கொள்ளலாம் முதலாளித்துவம் என்றால் என்னவென நான் சொல்ல தேவை இல்லை என அடிக்கடி வகுப்பெடுப்பேன்.

சரி காந்தியாரின் பேமிலுக்கு வருவோம்











என்னுடைய பீதிகளைப் பற்றி எப்படி சொல்ல முடியும்? என்னைவிட அவளுக்கு அதிக தைரியம் உண்டு என்று எனக்குத் தெரியும். ஆகவே, எனக்கு வெட்கம். அவளுக்கு பாம்புகள், பேய் பிசாசு பற்றி பயம் கிடையாது. இருளில் எங்கேயும் போக முடியும். இந்த துணிச்சல்தான் குஜராத்தி மொழி மட்டும் தெரிந்த, பிராமணர் அல்லாத, ஆனால், பிராமயணீயத்தை முழுமையாக நம்பி கடைபிடித்த கஸ்தூர்பா கடல் கடந்து புதிய நாடான தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்று தனது கணவரின் பரிசோதனை கூடங்களான டால்ஸ்டாய் பண்ணைக் குடியிருப்பு, பீனிக்ஸ் குடியிருப்பு ஆகியவற்றில் பலதரப்பு, பல சாதிகளை சார்ந்தவர்களோடு ஒன்றாக வாழச் செய்தது, பல பழைய முடநம்பிக்கைகளை தகர்த்தது. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவிற்கு மறந்து போன தீண்டாமை உணர்வு, இந்தியாவிற்கு திரும்பிய பின் அகமதாபாத் கோச்ரப் ஆஸ்ரமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தம்பதியோடு சேர்ந்து வாழவேண்டிய  நிர்ப்பந்தம் உருவான போது, மீண்டும் அவர் மீது தொத்திக் கொண்டது. ஆனால், தன்னை திருத்திக்கொள்ள முயன்று வெற்றியும் கண்டார்.
காந்தியின் முட்கள் நிறைந்த பாதை- தீண்டாமை ஒழிப்பு நான் மிகவும் தைரியசாலிபோல் முகத்தை வைத்துக் கொண்டேன். உண்மையில் மிகவும் வெட்கத்தோடு வீட்டுக்கதவை மூடினேன். என்னை விட்டுவிட்டு என் மனைவியால் போக இயலாது என்றால் என்னாலும் அவளை விட்டு விட்டு போக முடியாது. எங்கள் இருவரிடையே ஏராளமான சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. என் மனைவியின் நிகரற்ற சகிப்புத்தன்மையால் இறுதியில் சமாதானமே நிலைத்திருக்கிறது. எப்போதும் அவளே வெற்றி பெற்றிருக்கிறாள்காந்தி. காந்தி வகுத்துக்கொண்ட பாதை அவருக்கு சுலபமானதல்ல. கஸ்தூர்பாவைப் போல 13 வயதிலிருந்து அவரோடு நடந்து வந்தவரின் கதியைப்பற்றி கேட்க வேண்டாம்! ஆனால், இது முட்கள் நிறைந்த பாதை எனப்பட்டது. தீண்டாமைப் பிரச்சனையில் தம்பதிகளின் முரண்பட்ட நிலையை இதில் பார்க்கலாம்.
மேல் குறிப்பிட்ட நிகழ்ச்சி காந்தி பற்றி  மிகவும் பிரசித்தியானது என்றாலும் சாதி வெறி இன்றும் தலை விரித்தாடும் சூழலில்  மீண்டும்   நினைவுபடுத்திக்கொள்வது பயனுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் அவர்கள் வீட்டில் தங்கிய கிருத்துவ, தலித் விருந்தாளி ஒருவர் தனது கட்டிலின் கீழ் வைக்கப்பட்டிருந்த மலத்துக்கான மண் பாண்டத்தை கழுவி வைக்கவேண்டும் என்று தெரியாமல் போய்விடவே அப்பணியை முகத்தை சுளித்துக்கொண்டே செய்ய முற்பட்டார் கஸ்தூர்பா. அவர் கண்களில் நீர் வழிந்துகொண்டே  வீட்டு வாசலை தாண்டும்போது காந்தி பார்த்துவிட்டார். அதன்பின் என்ன நடந்தது என்பதை சத்தியத்துடன் எனது பரிசோதனைகள் என்ற  அவர் நூலில் பார்க்கலாம். அவள் பாண்டத்தை முனகிக்கொண்டே எடுத்துப் போனது மட்டும் என்னை திருப்திப்படுத்தவில்லை. அவள் அதை மகிழ்ச்சியோடு செய்யவேண்டும் என எதிர்பார்த்தேன். என் வீட்டில் இத்தகைய-நான்சென்ஸை அனுமதிக்கமாட்டேன் என உரத்த குரலில் கூறினேன். என் வார்த்தைகள் அம்பைப்போல் அவளை குத்தின. உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொண்டு என்னை இங்கிருந்து போக விடுங்கள் என்றார். பரிதாபம் என்பது என்னுள்ளே உலர்ந்துவிட்டது. அவள் கையை பிடித்து தர தர என இழுத்துச் சென்று அவளை வெளியே தள்ள வாசல் கதவை திறந்தேன். கண்ணீர் வெள்ளமாய் பெருக அவள் கேட்டாள், உங்களுக்கு வெட்கம் இல்லையா? உங்களையே மறந்து இப்படி நடந்து கொள்வதா? நான் எஙகே செல்ல முடியும்? இங்கு எனக்கு உதவ யார் இருக்கிறார்கள்? உங்கள் மனைவி என்பதால் உங்கள் அடியையும், உதையையும் நான் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? முறையாக நடந்துகொண்டு கதவை மூடுங்கள். நாம் இருவரும் இப்படி நடந்து கொள்வதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும். நான் மிகவும் தைரியசாலி போல் முகத்தை வைத்துக்கொண்டாலும் மிகவும் அவமானப்பட்டு கதவை மூடினேன். பல சண்டை சச்சரவுகள் நடந்தாலும் இறுதியில் சமாதானமே நிலவியது. என் மனைவியின் நிகரற்ற சகிப்புத்தன்மையால் அவளே இறுதியில் வெற்றி பெறுகிறாள்.
காந்தியின் கருத்துக்களை கிட்டதட்ட அவரது மனைவி மீது திணித்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் .
இன்னொரு நபரின் மலசட்டியை எடுப்பது பிரச்சனையா அல்லது தலித் விருந்தாளியின் மலச்சட்டி என்பது குறித்த பிரச்சனையா என கஸ்தூரிபாவிடம் விவாதமே நடைபெறவில்லை.
இன்றைய காலகட்டத்தின் ஒட்டு மொத்த ஆண்ணாதிக்க சிந்தனையின் தலைவராகவே காந்தி தென்படுகிறார்.
தனது வீட்டில் ஜனநாயக பூர்வமான விவாதங்களை மனைவியுடன் அவர் நடத்தவில்லை என்பது நிச்சயம் சாதாரண விசயமல்ல.
ஆனால் கஸ்தூரிபா இதையெல்லாம் கொண்டு அவரை விட்டு பிரியவோ விட்டு போகவோ இல்லை அப்படி செய்திருந்தால் ஒருவேளை இந்தியாவுக்கு ஒரு மகாத்மா கிடைக்காமல் போயிருக்கலாம்.
பிறகு காந்தி என்ற போராளியின் மனைவியானதால் தானும் போராடத்தான் வேண்டி இருக்கும் என்று ஒரு மனநிலைக்கு வந்தார் கஸ்தூரிபா
அதன் பின்னால் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்
//கஸ்தூரிபாவின் முதல் சிறைவாசம்
செப்டெம்பர் 23, 1913. 16 குஜராத்தி பேசும் இந்தியர்கள். காந்தியின் 15 வயது மகன் ராம்தாஸ் உட்பாட12 ஆண்கள், கஸ்தூரிபா உட்பட 4 பெண்கள்இக்குழு பீனிக்ஸிலிருந்து ட்ரான்ஸ்வால் பயணித்த போது அதற்குத் தலைமை தாங்கியவர் கஸ்தூர்பா போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாமென்று முடிவெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான 13 வயதான தேவதாஸ் காந்திக்கு இந்தியன் ஒபினியன் பத்திரிகை வேலைகள், மற்றும் வீட்டில் விடப்பட்ட குழந்தைகளை பராமரிப்பது போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டன.
துவக்கத்தில் பீனிக்ஸ்வாசிகளின் படையெடுப்பு பட்டியலில் தான் இல்லை என்று அறிந்த கஸ்தூரிபா கணவரை அழைத்து, நான் சிறை செல்ல தகுதியற்றவள் என்பதற்கு என்னிடம் என்ன குறைகள் உள்ளது? என்றார். எனக்கு உன்மீது எந்த சந்தேகமும் இல்லை. உன்னை நான் சிறைக்கு போகச்சொன்னால் நீ எனக்காக வேண்டி போகலாம். சிறையில் உடல் நலமின்றி போய்விட்டால் நான் உன்னை குறைகூற முடியாது. ஆனால், என்னால் என்னை மன்னிக்கவே முடியாது என்றார் காந்தி. கஸ்தூர்பா தன் நிலையிலேயே நின்றுசிறைக்கஷ்டங்களை உங்களாலும் என் மகன்களாலும் தாக்குப் பிடிக்க முடியும் என்றால் என்னால் மட்டும் ஏன் முடியாது? என்றார். நீ சற்று ஆழமாக சிந்தித்து முடிவெடு என்று கணவர் மீண்டும் வேண்டியபோது இதில் சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை. போராட்டத்தில் கலந்துகொள்ள நான் முழுமையாக தயாராகிவிட்டேன் என்ற பதிலே மனைவியிடமிருந்து கிடைத்தது.
பீனிக்ஸ் குழுவின் போராட்டம் பரம ரகசியமாக வைக்கப் பட்டது. இச்சிறு சத்தியாகிரகப் படை பீனிக்ஸ் எல்லையை கடந்து நேடால் போக முயற்சி செய்தபோது தங்கள் பெயர், மற்ற அடையாளங்கள் எதையும் போலிசிடம் தர மறுத்தனர். உடனே அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் என மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அரசால் கைது செய்யப்பட்ட முதல் பெண் சத்யாகிரகிகள் என்ற பட்டத்தை இப்பெண்கள் பெற்றுவிட்டனர்முதல் சிறை வாழ்வின் கடுமையான சூழலை சமாளிப்பாதற்கான மன உறுதியை இவ்விளம் பெண்கள் பெற கஸ்தூர்பா உதவினார். ஏராளமான துனிகளை துவைப்பது, தைப்பது போன்ற கடினமான சிறை வேலைகளை முடிப்பதற்கு அவர் ஊக்கமளித்தார். சிறையில் அளிக்கப்படும் அசைவ உணவை பெண்களால் உண்ண முடியாது என்று பலமுறை அவர் கேட்டுப் பார்த்தும் பயனில்லை. மாலையில் பஜனை பிரார்த்தனைகள நடத்தினார்.//
காந்தியின் மனதைரியம் நாம் அறிந்ததே ஆனால் போலீஸ் என்றாலும் போராட்டம் சிறை என்றாலும் கலவரப்படும் நமது வீட்டு பெண்ணை போல ஒருவர்தான் கஸ்தூரிபா இருந்தாலும் சிறை செல்லும் அளவுக்கு தன்னை தயார் படுத்தி கொண்டது வியப்பளிக்கிறது இதில் காந்தியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

உப்பு சத்தியா கிரக போராட்டத்தை காந்தி அறிவித்த போதும் கஸ்தூரிபா ஒரு வீரப்பெண்மணியாக கலந்து கொண்டார்
/நாடெங்கும் திட்டமிட்டபடி மக்களால் வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் உப்பு சட்டத்தை மீறுவதற்கான போராட்டத்தில் காந்தி தலைமையில் 79 சத்தியாகிரஹிகள் சபர்மதி ஆரமத் திலிருந்து கிளம்பி 240 மைல்கள் தெற்குப்புறமாக நடந்து கடலை ஒட்டிய தண்டி கிராமத்தை நோக்கி புறப்பட்டனர். 240 மைல்கள் நடக்கவில்லை என்றாலும் வழி அனுப்பி வைத்தவர் கதூர்பா காந்தி. பங்கு கொண்டவர்களில் காந்தி குடும்பத்தில் அவரைத்தவிர மகன் மோதிலால், பேரன் (ஹரிலால் மகன்) இருந்தனர். நடைபயணம் நகர்ந்தபது காந்தியின் இடிமுழக்கம், நீங்கள் சாவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது. தென் ஆப்யீபரிக்காவிலிருந்து வந்திருந்த மோதிலால் மனைவி சுசிலா உட்பட பல பெண்கள் அழத் துவங்கியதை பார்த்த கதூர்பா காந்தி அணிவகுப்பின் முன்வைந்து நமது ஆண்கள் எல்லோரும் போர் வீரர்கள். நாம் இந்த வீரர்களின் மனைவிகள். நாம் ஆண்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். நாம் நெஞ்சுரத்தோடு இருந்தால் தான் அவர்களும் அவ்வாறு இருப்பார்கள் என்று தனது சுருக்கமான ஆணித்தரமான வாழ்த்துரையை வழங்கினார். ஒவ்வொரு சத்தியாகிரகியின் நெற்றியில் வெற்றிச்சின்னமாக பொட்டு இட்டபின் பேரணி நகர்ந்தது. அப்போது கதூர்பா காந்திமறுமகள் சுசீலாவை பார்த்து, அழுது கொண்டிருக்கும் ஒரு தைரியமற்ற பெண்ணாகவே உன் கணவர் உன்னை நினைக்க வேண்டும் என்று விரும்புகிறாயா? என்றாராம்./
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு என வரும்போது
காந்தியின் மனைவியின் பங்கை குறைத்து மதிப்பிட இயலாது .
குடும்பம் என்பது நாட்டுக்கானது நாடு என்பது மக்களுக்கானது என பெண்கள் முடிவெடுக்கும் போது .
அங்கே நிச்சயம் ஆயிரக்கணக்கான போராளிகள் தோன்றுவார்கள் .
தாய் நாவலில் வரும்  தாய் கதாபாத்திரத்தை மார்க்சிம் கார்க்கி உயிரோட்டத்தோடு படைத்திருப்பார் .







  பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.
சிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.
இதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.
தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால் செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.
ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன
//
மகாத்மா காந்தி என்கிற மகாத்மாவுக்கும் ஒரு பின் புலத்தாயாக கஸ்தூரிபா இருந்திருக்கிறார்.ஆனால் காந்திக்குத்தான் பெண்ணியம் குறித்து சொல்ல ஆள்கள் இல்லை போலும்

//சுசீலா மருத்துவ மாணவியாக இருந்த போது விடுமுறைகளை காந்தி ஆரமத்தில் கழிப்பாராம். அவர் நினைவுகள்: கதூர்பா காந்தி எல்லா ஆரமங்களிலும் ஒரு தாயாகவே இருந்தார். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான்தான் செய்வேன் என்று பிடிவாதமாக செய்வார். இருப்பிடம் குடிசையாக இருந்தாலும் அதை மிக சுத்தமாக வைத்திருப்பார். சமையல் அறையில் தனக்கு உதவுபவர்களை செமையாக வேலை வாங்குவார். ஆரமத்திற்கு வரும் விருந்தாளிகளை பராமரிப்பதில் அவருக்கு ஈடு இணை இல்லை. இந்திய பண்பாட்டில் சீதாராம், ராதா கிருஷ்ணா என்று மனைவிகளின் பெயர்கள்தான் முதலில் வருகிறது. ஆகவே நாம் பாபுவிற்கு முன் பா வை நினைப்பது தான் இயல்பு. தங்கள் கணவன் மார்களை தெய்வப் பிறவிகளாக ஆக்குவதில் ராமர், கிருஷ்ணன் ஆகியோரின் மனைவிமார்களுக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால், மோஹன்தாசை மஹாத்மா ஆக்குவதில் கதூர்பா காந்திக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. கதூர்பா காந்தி மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். வசதியாக வாழ்ந்தவர். ஆனால், ஆப்பிரிக்காவில் காந்தி ஏழ்மையாக வாழ்வது என்று உறுதி எடுத்துக்கொண்ட போது கதூர்பா காந்தி அதை ஏற்றுக்கொண்டார்.  ஏற்றுக்கொள்ளாமல் என்ன செய்வது? அவருடைய சூழலில் கணவரை விட்டுப்போக முடியுமா? இந்தியாவில் அவர் பெற்றோர்களும் இறந்துவிட்டார் களே? என்பதும் நியாயமான கேள்வியே. ஒரு ஆணுக்கு தன்னுடைய சூழலை மாற்றிக்கொள்ள சுதந்திரம் உண்டு. அதற்கு மனைவியை கேட்க வேண்டியதில்லை. ஆனால் பெண்ணுக்கோ…? இந்த பழம் கோட்பாட்டி;ன படியே வளர்க்கப்பட்ட கதூர்பா காந்திதென் ஆப்பிரிக்காவிற்கு வந்த சில ஆண்டுகளில் ஆரம வாழ்க்கையை ஏற்று சாதி பாகுபாடு பார்க்காமல் பலரோடு சேர்ந்து எல்லா வேலைகளையும் பங்கிட்டுக்கொண்டு வாழ வேண்டி இருந்தது.//

ஆம் பெண்ணுக்கு தன் சூழலை மாற்றி கொள்ளும் உரிமை இல்லாமல் இருந்தும் தனது மகத்தான தியாகத்தினால் சமூக போராட்டத்தில் பங்கெடுப்பதும் தனக்கு உரிய எல்லைக்குள் நின்று போராடுவதும் பிறகு எந்த தடையமும் இல்லாமல் ஒரு பறவையை போல வானை கடப்பதும்தான் பெண் 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post