| தாலி அறுப்பு | ||||
| பூணூல் அறுப்பு | ||||
| அறுப்புகளை வகைகளின் | ||||
| பின்னாலும் ஆதிக்க | ||||
| போட்டி நிலவுது | ||||
| கிழக்கை அடைய | ||||
| மேற்கை தள்ளுதல் | ||||
| நிமிடங்களை கழிக்க | ||||
| மணிக்கணக்கான சிந்தனை | ||||
| ஆயிரம் வருட பழக்கம் | ||||
| அறுத்தெறிவதால் வளரும் | ||||
| களைகளை அழிக்க | ||||
| உரங்களாகி போன அரிவாள்கள் | ||||
| பெரியாரின் பாசறையில் | ||||
| பேச்சுக்கு இடமில்லை | ||||
| பேசுகின்ற இடத்தில் பெரியாருக்கு | ||||
| மதிப்பில்லை | ||||
| சடங்குகள் ஒழிக்க | ||||
| போராட்டம் பிறந்தால் | ||||
| போராட்டமே சடங்காகி | ||||
| சண்டையை போடுது | ||||
| நீதியரசர்கள் கொடுவாள்களோடு | ||||
| சாட்சிகளின் கண்களை தோண்டி | ||||
| நிலைபடுத்தும் நீதி | ||||
| ஆடுது தராசு | ||||
| அச்சமில்லை இதான் வழி | ||||
| என்கிறது ஒரு குரல் | ||||
| முடிவற்ற பாதை நோக்கி | ||||
| நீள்கிறது கால்கள் | ||||
Tags
கவிதை