தெருவோரத்து நண்பன்

















அவனை நீங்கள் பார்த்திருக்கலாம்
மதுரை நகரின் மத்திய வீதியில் 
திருவிழா காலங்களில் 
சுடும் வெயில் நேரங்களில் 










சட்டை போடாது உடம்பு 
சட்டை செய்யாத மனிதன் அவன்
இன்சூர் இல்லை சோறும் இல்லை
கிடைக்கும் பழைய சோறு புளித்திருக்கும்





கடைவாயில்  ஒட்டி கொண்டிருக்கும்
சோற்று பருக்கை 






கண்களில் கனவு வாய் அதை 
சொல்லி கொண்டே இருக்கும் 





ஜபம் என்று நினைத்தேன் 
என்ன மந்திரம் நண்பா

ஒரு பாக்கெட் சோறு கொடு
சரி என்ன மந்திரம் 






சோறு தராதை தறுதலை போடா?





உன் சொந்த ஊர் எது 

தெரியலை 







நீ ஏன் பிச்சை எடுக்கிறாய் 
ஆழமான பார்வை என்னை நோக்கியது





கேள்விகள் முடியும் போதெல்லாம்
முனுக்கிறது வாய் சோறு 





அவனுக்கு மோடியை தெரியாது
மோடிக்கும் அவனை தெரியாது





அவனுக்கு பஜக தெரியாது
அவனும் இந்துதான்






நீண்ட சடைமுடி முகம் நிறைய
முடியும் அவன் ரிசியல்ல





கிளீன் இந்தியா மோடியிடம்
நண்பனை பற்றி சொல்லுங்கள்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post