நிறம் மாறும் நாட்கள்

கால சக்கரத்தின் கடினவெளியில் ஒரு பயணம்
கடவுளின் கல்லா பெட்டியில் வழியே

இருள் சூழ்ந்த பகுதிகளை விளக்குகளாய்
காசு மலைகள்  பொய்களின் குவியலுக்கிடையே

உண்மைகள் அதன் சின்ன தலைகளும்
உண்மை சாகத்தான் போகிறதென்றால்

எதற்கு ஆக்சிசன் ஓலமிடும் போலி
 மருத்துவன் பொய்களை மருந்து புட்டிகளில்

அடைத்து விற்று கொண்டுள்ளான்
அவனது கோட்டில் ஆயிரம் பூச்சிகள்

தலை இல்லாமல்  உணவு இடைவேளையின் போது
அதை  அசவுகரியம் இன்றி உண்பான்

வாத்தியார்களின் பிரம்புகள் பணகத்தைகளாக மாறி
மாணாக்கனை அடிக்கவில்லை

புத்தகத்தை தலைக்கு வைத்து தூங்கும்
ஒருத்தனுக்கு மூளைக்குள் ஏற்றபடுகிறது

கல்வி சிரிஞ்சிகள் போதாமையால்
மூளை வெடித்து சாவுகள் !

போலி மருத்துவன் சிரிக்கிறான்
பெண்களில் இடுப்புகளில் ஊறித்திரியும்

ஊமை பாம்புகள்
பெருமுலைகளில் இருந்து கிளம்பும் புகை

மேகத்தை மறைத்து மழை கொட்டுது
 இடுப்பு வேட்டியை தலைக்கு போர்த்தி

தகப்பன்கள் ஓய்வெடுக்கிறார்கள்
ஓயாமல் மந்திரத்தை சத்தமாக சொல்லும்

ஒல்லி மனிதனின் முன்பு  நிர்வாணமான
பெண்களின் ஓலம்  பேய்களை

பிரித்தெடுக்க வாயில் எச்சில்  மெள்ள மெள்ள
 நிறத்த இழந்தபின் இன்னும் எஞ்சி இருக்கிறது நாட்கள்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post