தாலி பற்றி பெரியாரின் கருத்துக்கள் மீது விமர்சனம்



தாலி பற்றி பெரியாரின் கருத்துக்கள் 
//
பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,
அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,
இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.//
மிக தவறான வாதம் தாலி என்பது இன்னாருக்கு இன்னார் என்பதை உரைக்கும் ஒரு அத்தாட்சி மட்டுமே
அடுத்து புருசர்களின் மிருக சுபாவம் தாலி மூலம் எப்படி வந்ததுன்னு பெரியார் விளக்கவில்லை மாறாக தாலி கட்டி விட்டதாலேயே ஒரு ஆண் அந்த பெண்ணை அடிமை போல நடத்துகிறான் என்பதை அப்படி சொல்கிறார்னு நினைக்கிறேன்
ஆணாதிக்க சமூகம் என்று எப்போது ஏற்பட்டது அப்போதிருந்து பெண்ணிடம் இருந்து ஆணுக்கு இந்த அதிகாரம் வந்தது .ஆணாதிக்க சமூகத்தின் தோற்றம்தான் ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை கொண்டு வந்தது இல்லை என்றால் ஒரு தாய்க்கு பல கணவர்கள் இருக்கும் நிலையும் யாருக்குமே தகப்பன் இன்சியல் இருக்காது என்ற நிலைதான் பண்டைகால சமூகத்தில் இருந்தது .
வரலாற்று ரீதியாக இதை ஆராயாமல் திடீரென தாலியை அறுத்து விட்டால் ஆண்களின் மிருகத்தன்மை மாறிவிடுமா?

/
பெண் அலங்கரிக்கப்பட்ட பொம்மையா?
ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி,
ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி,
ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு
ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.
ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும்
ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை
என்பதல்லாமல் பெண்கள் பெரிதும்
எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்-
என்பதை சிந்தித்துப் பாருங்கள்.//
தந்தை பெரியார் காலத்தில் உற்பத்தி சக்திகள் வளரவில்லை நில உடமை சமூகமாக இருந்தது நிலம் என்பது ஆண்களுக்கு சொந்தமாக இருந்தது பெண்களும் பாடுபட்டார்கள் என்றாலும் உடல் ரீதியாக ஆணுக்கு பெண்கள் சமமாக இயலவில்லை அதானால் ஆண்களால் பெண்கள் அடிமை கொள்ள பட்டார்கள் .அடுத்து முதலாளித்துவ இந்தியாவில் பெண்களும் தனியே சம்பாதிக்க ஆரம்பத்தவுடன் ஆண்களின் ஆதிக்க கை குறைந்து விட்டது
இதை சாதித்தது பெண்களின் விடுதலை விரும்பிகள் அல்ல
உழைக்கும் பெண்களே இதை சாதித்தார்கள் மேலும் சமூகத்தில் பெண் வேலைக்கு சென்று ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மறுக்க இயலாது பெண்களின் சுதந்திரத்தின் கதவை திறந்து விட்டது. இப்போது பெண்கள் அலங்கரிக்கப்பட்ட பொம்மை எல்லாம் இல்லை  இந்த நிலமை கொஞ்சமாக அதன் வளர்ச்சி போக்கில் மாறிக்கொண்டே வருகிறது இதை தீர்மானித்ததும் பெண்களின் சமூக உழைப்பே.

//மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய
யோக்கியதையே எடுத்துக் கொண்டால்
அவர்கள் எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும்
எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும்-
தொழில் திறமையும் கொண்ட சக்தியையும்
உடையவர்களாய் இருக்கின்றார்களே ஒழிய,
இந்திய ஸ்தரீ ரத்தினங்கள் கோருகிற மாதிரி
சங்கீதம்- கோலாட்டம்- பின்னல்- குடும்ப சாஸ்திரங்கள்//
இந்த இடத்தில் மேல் நாட்டின் உற்பத்தி வளர்சியை கணக்கில் எடுக்காமல் பெரியார் பேசுகிறார் . மேல் நாட்டில் பெண்கள் சமூக உழைப்பை செலுத்த ஆரம்பித்த போதுதான் அவர்கள் தொழில் திறமை பெற்ற பிறகுதான் அவர்கள்ன் சுயமரியாதை வளர்ந்தது அவரே சொல்வது போல ஆண்களுடன் போட்டி போடும் அளவு கல்வி பெற்றது முக்கிய காரணம் .

//
திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல.
உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது.
இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ,
பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக
ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள்.//
திருமணம் என்பது மத அடிப்படையான விசயமானது என்று பேசும் போது அனைத்து சடங்குகளும் மத அடிப்படையிலானது என பேச வேண்டும் .
மத அடிப்படையிலான சடங்குகள் அனைத்தையும் ஒழித்தால்தான் மதத்தை ஒழிக்க இயலும் என்பது ச்சரியில்லை ஏனெனில் மதத்தை பற்றிய மார்க்சிய தத்துவம் என்ன சொல்கிறது ந்னு கவனிச்சால்
இந்த குழப்பம் வராது .
மதம் என்பது இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது என்கிறார் மார்க்ஸ்

இதயமாக இருக்கும் மதத்தை எடுத்து விட்டால் இதயமில்லாத மனிதன் உங்களுக்கு கிடைப்பான் அவனை வைத்து கொண்டு என்ன செய்வீர்கள் .
மதம் என்பது ஒழிய அது தோன்றிய காரணங்கள் பயம், வறுமை , எந்த உத்திரவாதமும் இல்லாத வாழ்க்கை ஆகியவை மாற வேண்டும் அப்போது மட்டுமே மதம் ஒழியும்
.


-------------------------

பொன்மொழிகள்
பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,
அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,
இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.
புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,
இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.
ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்
கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை
பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும்
பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால்
அறுத்தெரியட்டும். அல்லது -
புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.
தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்
கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.
—————————–
பெரியார் கேட்கிறார்?
நமது இலக்கியங்கள் யாவும்
நியாயத்திற்காக, ஒழுக்கத்திற்காக
எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு
என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ!
அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும்
வைத்திருக்க வேண்டுமல்லவா?
——————————————–
பெண் அலங்கரிக்கப்பட்ட பொம்மையா?
ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி,
ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி,
ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு
ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.
ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும்
ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை
என்பதல்லாமல் பெண்கள் பெரிதும்
எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்-
என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர
மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில்
வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே
இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன்
இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இழி நிலை
பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லையா?
ஆகவே ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டுழியமாய்
நடத்தலாமா? என்று கேட்கிறேன்.
———————————————————–
பெரியார் சொல்கிறார்!
மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய
யோக்கியதையே எடுத்துக் கொண்டால்
அவர்கள் எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும்
எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும்-
தொழில் திறமையும் கொண்ட சக்தியையும்
உடையவர்களாய் இருக்கின்றார்களே ஒழிய,
இந்திய ஸ்தரீ ரத்தினங்கள் கோருகிற மாதிரி
சங்கீதம்- கோலாட்டம்- பின்னல்- குடும்ப சாஸ்திரங்கள்
ஆகியவைகளைக் கற்று சீதையைப் போலவும்,
சந்திரமதியைப் போலவும், திருவள்ளுவர்
பெண் ஜாதியான வாசுகியைப் போலவும்-
நளாயினியைப் போலவும் இருக்கத்
தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள்.
———————————————————
திருமணங்கள் மதத்தைப் பாதுகாக்கவே
திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல.
உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது.
இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ,
பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக
ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும்
மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள்.
இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள்
நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம்.
இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம்
மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post