ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் அப்படின்னு சொன்னான் என்கிற பழமொழியை கேட்டு இருப்பீர்கள் இந்த நிகழ்வுகள் அதற்கொப்பவே அமைந்திருக்கின்றன .
என்ன அந்த நிகழ்வு என்றால் அண்ணா ஹசாரேவின் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்ற அறிவிப்பும்
அதெல்லாம் ஒன்றும் நெம்ப முடியாது என்கிற வினவின் அறிவிப்பும்
கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு வலைத்தளம் நடத்துவதையே தனது புரட்சிகர செயல்திட்டமாகவும்
அதில் வரும் புண்ணூட்டங்களே
பயங்கரமான சாதனை மாதிரி எழுதி திரியும் இந்த புரட்சியாளர்கள் மெசிண்டோசின் பிணூட்ட புரட்சியை ஓரளவு நடத்தி முடித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்
தனக்கு கிடைத்திருக்கும் பாலோவர்களை கணக்கில் கொண்டு தனது கருத்து சரியென நம்பிக்கொண்டு இருக்கும் அற்பவாதிகளை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது .
ஒரு கிராமத்து கிழவன் மஞ்சள் பையை தூக்கி கொண்டுவந்து இத்தனை ஆயிரம் இளைஞர்களை
எப்படி திரட்ட முடிந்தது என்ற கேள்வியை நக்கலடித்து கொண்டு தப்பித்துவிட்டு
கம்யூட்டர் முன் அமர்ந்து புரட்சிகருத்துக்களை அள்ளி வீசும் இவர்களைத்தான்
“புரட்சிகர வாய் சொல் வீரர்கள்” என்கிறார் லெனின் .
நமக்கு முன் இருக்கும் கேள்விகள் இதான்
1.அண்ணா ஹ்சாரே போராடியது சரியான கோரிக்கை அடிப்படையிலானதா
சரி என்றால் ஏன் அதை முன்வைத்து தொடர்ச்சியாக போராடமுடியவில்லை
2.அண்ணா போராடுவதே ஒரு தவறான கோரிக்கை என்றால் அந்த ஊழல்
என்கிற பிரச்சனைக்கு நாம் என்ன தீர்வு கொடுக்க போகிறோம் அல்லது ஊழலை
ஒழிக்க நமது போராட்டங்களின் எண்ணிக்கை எத்தனை
3.அண்ணா அரசியலில் இறங்கினால் சரியா அல்லது இறங்கவில்லை என்பது சரியா
இப்படி அடிக்கி கொண்டே செல்லலாம்
ஆனால் இந்த கேள்விகளை கேட்டு கொள்வதற்கும் அதற்கு பதில் தேடி அடைவதற்கும்
கொஞ்சம் நேர்மை வேண்டும் உலகின் அனைத்து பிரச்சனைகளை கட்டுரை எழுதியும் வேறு வேறு பெயர்களின் வந்து பின்னூட்டம்
இட்டுமே தனது வரலாற்று கடமையை ஆற்றும் வினவு அதை செய்ய முடியாது
1.அண்ணா ஹ்சாரே போராடியது சரியான கோரிக்கை அடிப்படையிலானதா
சரி என்றால் ஏன் அதை முன்வைத்து தொடர்ச்சியாக போராடமுடியவில்லை
---------------------------------------------------
அண்ணாவின் கோரிக்கை சரியானது ஊழல் என்கிற பேய் நமது உள்ளங்கால்வரை
ஆக்கிரமித்து கொண்டுள்ளது அவரால் தொடர்ச்சியாக தனது லோக்பால் மசோதா நிறைவேற்ற போராட முடியவில்லை என்பதற்காக அந்த மசோதாவோ
அவர் கொண்டு வந்ததோ தவறானது என அர்த்தமல்ல
வெற்றி பெறக்கூடிய போராட்டத்தை தான் நடத்தவேண்டுமென்றால் ஒரு போராட்டம் கூட நடத்தமுடியாது என்பார் காரல்மார்க்ஸ்
அண்னா ஹசாரேவின் தோல்வி நாட்டு மக்கள் அனைவரின் தோல்வியும் என சொல்லலாம் அடுத்து அண்ணாவுக்கு ஒரு கம்யூனிஸ்டை போன்ற வர்க்க பார்வை இல்லை அது இருக்க வாய்ப்பில்லை
ஏனெனில் அண்ணா பின்பற்றும் காந்தி எந்த முட்டு சந்தில் உக்கார்ந்து கனவு கண்டாரோ அதே முட்டு சந்தில்தான் அண்ணாவும் உக்கார்ந்து இருக்கிறார் .
போராட்டம் தோல்வி அடைய இதுவும் ஒரு காரணம் ஊழல் போராட்டத்தை நடத்த ஒரு வர்க்க அணியும் பாட்டாளி வர்க்க நலன்களை முன்னுருத்தும் ஒரு தத்துவமும் சமூக மாற்றத்தை குறித்த சரியான பார்வையும் அவசியம்
காந்தி அண்ணா இருவரும் மக்களை திரட்டுவதில் வெற்றி பெற்றனர் ஆனால் சமூக மாற்றத்திற்கான
போராட்டமாக ஒவ்வொரு போராட்டத்தையும் நடத்த வேண்டுமென்பதில் தத்துவ பிழையால் தோல்வி பெற்றனர்
அண்ணா தொடர்ச்சியாக போராட இயலாமல் போனதற்கு அவருடைய தவறான தத்துவமே காரணம்
2.அண்ணா போராடுவதே ஒரு தவறான கோரிக்கை என்றால் அந்த ஊழல்
என்கிற பிரச்சனைக்கு நாம் என்ன தீர்வு கொடுக்க போகிறோம் அல்லது ஊழலை
ஒழிக்க நமது போராட்டங்களின் எண்ணிக்கை எத்தனை
---------------------------------------------------------------
உப்பு காய்ச்சுவது என்கிற கோரிக்கை உப்புக்கு வரியை நீக்கு என்கிறா கோரிக்கை சுதந்திரம் வேண்டும் என்கிற
கோரிக்கை விட எவ்வளவோ வித்தியாசம் உள்ளதுதான்
ஆனால் உப்பு காய்ச்சும் போராட்டமோ ஒத்துழையாமை இயக்கமோ மக்களை சுதந்திரத்தை நோக்கி எந்தளவு
உந்தி தள்ளியது என்பதை வரலாறு படித்தவர்கள்
உணருவார்கள்
அதை எல்லாம் விடுத்து வினவு பக்கங்களை நிரப்பிகொண்டு உக்கார்ந்து இருப்பதால் போராட்டம் வந்துடுமா :)
ஊழல் ஒரு பிரச்சனையே இல்லை என்றும் தனியார் மயத்தின் விளைவுதான் என்றும் ஒரு இன்ஸ்டன் காபியை கொடுத்தது
வினவு இதன் மூலம்
போராடவேண்டிய கடமையில் இருந்து தப்பித்து வரலாற்று பிழை புரிந்துள்ளது
3.அண்ணா அரசியலில் இறங்கினால் சரியா அல்லது இறங்கவில்லை என்பது சரியா
---------------------------------------------------------
உண்மையான சமூக மாற்றத்தைபற்றிய
தத்துவ இல்லாமல் அரசியலில் இறங்கினாலும் இறங்காவிட்டாலும் இரண்டும் ஒன்றுதான் ஆனானபட்ட கம்யூனிஸ்டு கட்சிகளே நீர்த்து போகும் நீரோட்டமே நமது இந்திய போலிஜனநாயக அரசியல் நீரோட்டம் இதில் இறங்கி
பாராளுமன்றத்தில் கொடி நாட்டுவது எளிதானதல்ல என்றாலும் அண்ணாவின் பின் திரண்டுள்ள இளைஞர்களை சரியான வழியில் சமூகமாற்றமே முக்கியம்
என
திருப்பி விடுவதன் மூலமே நாம் வெற்றி பெற முடியும்
4.இளைஞர்களை கிண்டலடிப்பதன் மூலம் சாதிப்பது என்ன ?
-------------------------------------
ஒரு பக்கம் குட்டி முதலாளிகளை துணையாக கொண்ட ஒரு புதியஜனநாயக புரட்சியை கனவில் கொண்டு இன்னொரு பக்கம் மத்திய தரவர்க்கம் திரண்டு நிற்கும் போது அவர்களை அவமதிப்பதும் - காட்டுக்குள் நடக்கும் யாருக்கும் தெரியாத மாவோ இஸ்டுகளின்
போராட்டமே சிறப்பானதென வாழ்த்தி வணங்குவதும்
அதையே நாட்டுக்குள் செய்யமுடியாத கையறுய் நிலையில் இருந்து கொண்டு மெசிண்டோசில் எழுதி குவிப்பது ஒருவிதமான குட்டி
முதலாளித்துவம் சிந்தனையே இதன் மூலம் எந்த பயனும் விளைய போவதில்லை வள்ளி
பட்த்தில் அனைவரையும் குறைசொல்லும் கதாநாயகியின் அப்பா வேடமே இது :)