66 ஆவது சுதந்திர தினமும் அதைபற்றிய நமது பார்வையும்



 

நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா


  இந்த கேள்விக்கு ஆமாம் இல்லை என்ற இரண்டு பதில்களை சொல்லலாம் சுதந்திரம் என்பது என்னவென கேள்வி கேட்டு அதற்கு பதில் தேடி அலையவேண்டியதில்லை எங்கெல்லாம் பேச எழுத வாழ சுதந்திரம் இருக்கிறதோ அது சுதந்திர நாடு  ஒரு வகையில் வெள்ளை தோல் காரர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் முதலாளித்துவம் அடிமை தனத்தில்தான் இருக்கிறோம் என்று ஒரு சோசலிச புரட்சி நடந்து பாட்டாளி மக்களிடன் ஆட்சி அதிகாரம் வருகிறதோ அன்றே நமக்கு உண்மையான சுதந்திரம் நிற்க

நமக்கு கிடைத்திருப்பது சுதந்திரம் அல்ல :

என்பது சரியல்ல நாம் சுதந்திரம் பெற்றவர்களே அதை மறுத்து நாம் இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்பது இந்த குறைந்த பட்ச சுதந்திரத்தை பெற போராடிய வர்களை அவமதிப்பதாகும்.

நாம் செய்ய வேண்டியது என்ன?
  நாம் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை புரிந்து கொள்வது அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்வது மட்டுமே சாத்தியம் நமக்கு என்ன வாய்ப்பு கிடைத்துள்ளது .

  1.இந்தியாவில் இருக்கும் ஜனநாயக பார்லிமெண்டு அமைப்பு
  2.மக்களை திரட்டவும் போராடவும் கிடைத்த வாய்ப்பு

இவை இரண்டும் ஓரளவுக்கு கிடைக்கப்பெற்றும் நாம் அதை காலால் எட்டி உதைக்கிறோம் புரட்சியே நமது தேவை  என முழங்குகிறோம் அது சரியா ?

ஜார் ஆட்சியில் அமைக்கப்பட்ட மிகவும் போலித்தனமான டூமாவில் கூட பங்கேற்கவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் லெனின் .

ஓட்டு அரசியல் தீர்வா ? :

ஓட்டு அரசியலா அல்லது ஓட்டு போடாத அரசியலா என்பது பிரச்சனை இல்லை நம்முன் உள்ள் பிரச்சனை  நோய் ஒன்று இருக்க மருந்து வேறொன்று தரக்கூடாது

இந்தியாவின் உற்பத்தி நடைமுறை என்பது முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையே இதை மாற்றவும் மக்கள் புரட்சியை சுதந்திர  போராட்டதுடனேயே சேர்த்து நடத்திவிடவும் பகத்சிங் போன்ற தோழர்கள் முயன்றும் சுதந்திரம் பெற்ற இந்தியா முதலாளிகளின்(அவர்களின் சார்பானவர்கள்) கைகளுக்கு போய்விட்டது .

இந்த நிலையில் ஓட்டு அரசியலை விட்டு மக்களை வெளி கொண்டுவர அதே அரசியலுக்குள் புரட்சியாளர்கள் பிரவேசிக்க வேண்டும்

லெனின் கூற்றுப்படி :

வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மை வளர்வதற்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல், புரட்சிகரப் போர்த்தந்திரம் ஒரு நாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ருஷ்யாவில் நீண்ட நெடிய கொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கி விட முடியாதென்ற உண்மையை எங்களுக்கு போதித்துள்ளது.”

நிலமைகளை கணக்கில் எடுத்து கொள்ளாதவர்கள் பற்றி லெனின்:

   எந்த நாட்டிலும் நிலமைகளை கணிப்பது என்பது அந்த நாட்டின் வரலாற்று கட்டத்துக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும் சுதந்திரத்துக்கு முந்திய சீனாவின் வரலாற்று கட்டம் தற்போதைய இந்தியாவுக்கு முற்றிலும் பொருந்தாது . தற்போதைய இந்தியாவின் நிலமை என்பது விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் முதலாளித்துவ உற்பத்தியை
மையமாக கொண்டது .1917 ல் புரட்சியை நடத்த கூடாது என சொன்னவர்களை நோக்கி லெனின் இதைத்தான்

 இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு” என்ற புத்தகத்தில் - முதலாளித்துவ பாராளுமன்றங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்ற துணைத் தலைப்போடு இது குறித்து விரிவாக ஆராய்கிறார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:“முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்” என்கிறார்

  இதன் படி நிலமைகளை கணக்கில் எடுத்து கொள்ளாதவர்கள் குருட்டு பூனைகளே


தற்போதைய மக்களின் மனநிலை குறித்து :

தற்போதைய விசயங்களை ஆராய்ந்தீர்கள் என்றால் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அதற்கு அரசின் ஒடுக்குமுறை பிறகு அன்னாவின் பல்டி ஆகியவற்றையும் அவர் பின்னால் அணி திரண்ட மக்கள் ஏமாற்றம் அடைவதையும்  அடுத்து பாபா ராம்தேவ் போன்றவர்களின் போராட்டம் ஆகியவற்றையும் அது இலக்கில்லாமல் மக்களை அலைய விடுவதையும்  அதே நேரத்தில் போராட்டத்தை குறை சொல்லும் ஆளும் வர்க்கத்தின் குரலிலேயே சுதந்த்திர தினத்தை குறை சொல்லும் ஒரு சில கம்யூனிஸ்டுகளின் குரலும் இந்த போராட்டத்தை கிண்டல் செய்வதையும் விலகி நிற்பதையும்

ஊழலுக்கு சப்பைகட்டு கட்டி திரிவதையும் காணலாம் .

மக்கள் திரள் போராட்டங்களை கொச்சை படுத்துவது தியாக தினங்களை மறுப்பது என மிகவும் விலகிய மனநிலமை புரட்சிகர மனநிலையோ சமூக மாற்றத்தை கோரும் மனநிலையோ அல்ல  அது தேவை அற்றது அதனால் விளையும் பலன் ஏதுமில்லை


எதிர்மறையாக சிந்திக்க வேண்டாம் :

மேற்கண்டவாறு நாம் சொல்கிறோம் என்பதற்காக சுதந்திரத்தை போற்றுங்கள் என்றோ சோனியா காந்தியை போற்றுங்கள் என்றோ அர்த்தமல்ல

தேர்தலில் நின்று நாலு சீட்டை பெற்று கொள்வது புரட்சிக்கு உதவாது ஆனால் இந்த அமைப்பில் இருந்து அதன் போலித்தன்மையை தோலுரிப்பதன் மூலம் மக்களை புரட்சியை நோக்கி இட்டு செல்வதுதான் சரியானதாக இருக்கும்







Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post