தேசியமயமாக்கப்பட்ட வங்கி

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடுகளை நன்கு அறிந்தே இருந்த எனக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது நண்பர் ஒருவர் அனுப்பிய பணம் எனது வங்கி கணக்கில்  வரவில்லை இதை விசாரிக்க எனது வங்கி கிளை அலுவலகத்துக்கு சென்றேன்

இந்த பிரச்சனைகளை கவனித்து கொண்டிருக்கும் ஒரு ஆபிசர் பேசியதுதான் பெரிய சாக்காக இருந்தது

நான்: சார் எனது நண்பர் எனக்கு இணைய வழி பணமாற்று மூலம்  அனுப்பிய பணம் வரவில்லை
அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்திருக்கிறார்கள் ஆனால் எனக்கு இன்னும் வரவில்லை


அவர் : என்றைக்கு அனுப்பினார் உங்கள் வங்கி எண் என்ன? (இது போன்ற எந்த கேள்வியும் கேட்கவில்லை

அவர் : இணையத்தில் நடக்கும் பணபரிமாற்றங்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை நீங்கதான் பார்த்துக்கனும்

எனக்கு தரை நழுவி செல்வது போல இருந்தது சரி என சொல்லி விட்டு நான் வந்து விட்டேன் மதியம் மறுபடி சென்று அந்த வங்கியின் மேனேசரை பார்த்து மேற்கண்ட பதிலை சொன்னேன் .


மேனேசர்: அவர் சொன்னது சரிதானே எங்க கிட்ட என்ன இருக்கு என்றார் .


இதான் உங்க பதிலா இதை எப்படி சார் ஒரு பதில்லு சொல்றீங்க இதுக்கெல்லாம் ஓம்பட்ஸ் மெண்டுக்கு போவதா என்றுதான் யோசிக்கிறேன்
என்று சொன்னது ” இந்த பதிலை எழுத்து மூலமா கொடுங்க இணைய சேவையில் உங்களுடைய டாப் மேனசர்களின் நம்பர்கள் இருக்கு அவருக்கு மெயில் அனுப்பிக்கிறேன்என்றதும்”

 சரி ஒரு நிமிசம் இருங்க என சொல்லிட்டு  இரண்டு நம்பர்களுக்கு போன் செய்தார்பிறகு சார் உங்களுக்கு வந்த பணம் ரிடர்ன் ஆகிருக்கு

இதை ஏன் சார் முதலில் சொல்லவில்லை என்றதும்

அவர் என்ன சார் செய்றது ஆட்கள் இல்லை எதோ டென்சனில் சொல்லி இருப்பார் விடுங்க என்றார் .

ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்து கொண்டு பொறுப்பற்ற பதிலை வெக்கமில்லாமல் சொல்லும் இந்தமாதிரி நபர்கள் சமூகத்தி இருக்கிறார்கள்
என்றால் அதைத்தான் அரசு மூலதன் உருவாக்கி இருக்கிறது .

இதே மேனேசர் தங்களது வங்கியில் 650 பேருக்கு கல்வி கடன் கொடுத்துள்ளதாகவும் இதை ஐசி ஐசி ஐயில் எதிர்பார்க்க முடியுமா என்றும்
கேட்டார்

முடியாதுதான் ஆனால் அந்த தனியார் வங்கி தனது சேவையின் குறைகளை கலைய குறைந்த பட்சம் முயற்சியாவது செய்கிறதே
இவர்கள் என்ன செய்தார்கள் .

இதற்காக வங்கிகளை தனியார் முதலாளிகளுக்கு கொடுத்து விடுவதும் தீர்வல்ல ஆனால் இம்மாதிரி பொறுப்பற்ற வங்கி பணியாளர்கள்
உருவாக்கியதுதான் அரசு மூலதனத்தின் லட்சனம் .


தனியார் மயம் தாராள மயத்தை எதிர்ப்பது மட்டுமே சரியா அரசு மூலதனம் இப்படித்தான் அசட்டையாக தூங்கி வழிகிறது கல்வி சேவை ,மருத்துவ சேவை , வங்கி சேவை , இரயில் சேவை என எல்லா வற்றிலும் லஞ்சம் ஊழல் அதிகார திமிர் ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது .

இதே அரசு மூலதனத்தை வழுவட்டையாக விட்டு விட்டு தனியார்மயத்தை மட்டும் எதிர்ப்பவர்களை மக்கள் சந்தேகத்துடன் பார்ப்பதுமில்லாமல்
ஒரு நமுட்டு சிரிப்போடு பார்கிறார்கள்



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post