இதயமற்ற மருத்துவமனைகள்

இதயமற்ற மருத்துவ மனைகளை நான் கோபியில் பார்த்தேன்

நான் குடும்பத்துடன் நண்பரும் அவரது மனைவியும் ஒரு சுற்றுலாவாக கோபி சென்று இருந்தோம் அங்கே உள்ள பாரியூரில் குளிக்கும் போது பெரிய கண்ணாடி துண்டு வெட்டி நண்பரின் மனைவிக்கும் பெரிய அளவில் காயம் பட்டுவிட்டது .

அங்கிருந்து நாங்கள் கோபி வந்து ஒரு ஐந்தாறு மருத்துவமனைகளில் சென்று பார்த்துவிட்டோம் யாருமே கட்டு போடமருக்கிறார்கள் ஏனென்றால் டாக்டர் இல்லையாம் ஒரு முதலுதவி சிகிச்சைக்கு டாக்டர் தேவை இல்லையே

ஏன் இப்படி படுத்துகிறார்கள்னு தெரியலை

பிறகு ஒரு மருத்துவமனையில் சென்று கட்டு போட்டுவிட்டு வந்துவிட்டோம்

ஆனால் மருத்துவ உதவி கோரும் எத்தனை பேரை இம்மாதிரி

டாக்டர் இல்லைன்னு விரட்டி இருப்பார்கள்னு தெரியலை :(

இந்த நிகழ்ச்சிய நான் கூகுள் பஸ்ஸில் பதிந்த்தும் ஒரு பெரிய விவாதம் நடந்த்து எனக்கும் புருனோ வுக்கும் அதை இங்கே காணலாம்

அதன் முடிவாக எனது கருத்து இதுதான் :

-------------------------------------

நான் பேசுவது திரு.புரூனோ பேசுவது வாசிப்பவர்களுக்கு ஒரு பெரிய குழப்பத்தை அளிக்க கூடும் ஏன் இந்த குழப்பம் என்பதை மருத்துவ சேவைக்குள் என்ன மாதிரியான வழங்கும் முறைகள் எதன்

அடிப்ப்டையாக கொண்டு இயங்குகிறது என்பதை சிந்தித்து பார்த்தாலே இந்த முரண் ஏன் என்பது புரியும்

தனியார் மருத்துவமனைகள் இயங்குவதே லாபத்தை கருதிதான் அதன் சேவை என்பது லாபத்திற்கு உட்படாத போது அல்லது அதற்கு பிரச்சனை வரும் என தெரிந்த இடங்களில் நிறுத்தப்படும்

(இந்த இடத்தில் புரூனோவின் கேள்விகள் பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் பாதிக்கப்படுவோமே என்கிற கேள்வி இதன் அடிப்படையிலேயே மொத்தமாக அமைகின்றதை காணலாம்)

ஒரு அரசு மருத்துவமனை இயங்குவதே தேவையை முன்னிட்டு அதற்கு லாபநோக்கம் இல்லை .

அரசு மருத்துமனை அந்த ஆண்டில் எத்தனை பணம் சம்பாதித்ததோ அதை பொறுத்து அல்ல அதற்கு

வழங்கப்படும் சம்பளம் .அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியானது மக்களின் நோயை நீக்க இயங்குகிறது அதன் சேவையின் தேவையும் நோக்கமும் எல்லாமே அதுதான் .

ஆனால் எல்லா நேரத்திலும் அரசு மருத்துவமனைகளை நாம் அனுகமுடிவதில்லை என்னாகிறது ஒரு காயம் படுகிறது கண்ணாடி வெட்டுகிறது இரத்தம் நிக்காமல் கொட்டுகிறதென்றால் என்ன செய்வோம் எந்த

மருத்துவமனை அருகில் இருக்கிறதோ அங்கேதான் செல்வோம்அப்படி செல்லும் போது அது தனியார் மருத்துவமனை என்றால் என்ன நிகழ்ந்தது என்றால் செவிலியர் சொல்லிவிட்டார்கள் மருத்துவம் பார்க்க முடியாது என்று ஏன் என்றால் டாக்டர் இல்லை (ஒரே ஒரு பதில்)

நமது கேள்வி இங்கேதான் வருகிறது செவிலியருக்கு இரத்தம் நிற்பதை தடுக்கவும் கண்ணாடி துண்டு

இருக்கிறதா என பார்க்கவும் பயிற்சி தரபடுவதில்லையா? இந்த கேள்வி திரும்ப திரும்ப என்னால்

கேட்கபட்டிருப்பதை காண்பீர்கள் அதன் அடிநாதமென்ன அதுதான் சேவைக்கான தேவையின் முக்கியத்துவம்

ஆனால் இதற்கெல்லாம் டாக்டரின் பாதுகாப்பில் இருந்து மட்டுமே புருனோ பதில் சொல்வதையும் எந்த விதத்திலும் டாக்டர் மாட்டிகொள்ளாமல் இருப்பதே சிறப்பானது என்பதிலும் உக்கார்ந்து பேசுகிறார்.

ஆம் அதைநாம் மறுக்கவில்லை டாக்டர் பாதிக்கப்படுவது இரண்டாம் பட்சம் அதாவது இரண்டாவது நடப்பது

முதலில் பாதிக்கப்படுவது நோயாளி அவன் பாதிக்கப்படாமல் இருக்க நாம் எல்லாரும்

சேர்ந்துதானே சிந்திக்கனும் அதாவது நீங்களும் நானும் மருத்துவர்களும் அல்லவா இந்த இடத்தில் புருனோ ஒரு கண்டிசன் போடுகிறார் பாதிக்கப்பட்டால் கோர்ட்டுக்கு போகமாட்டேன் என்று சொல் நான் செவிலியரை விட்டு மருத்துவம் பார்க்க சொல்கிறேன்

(இது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது )

மருத்துவம் தரப்படும் ஆனால் அதற்கு உத்திரவாதம் தரமுடியாது என்பதே அது அதற்கு பதிலாக ஏன் இப்படி யோசிக்க கூடாது டாக்டர்கள் இல்லாத போது செவிலியர்களால் ஒரு அவசர காலத்தை எப்படி சமாளிக்கனும் என்பதை ஏன் டாக்டர்கள் யோசிக்க கூடாது

அப்போதுதான் டாக்டர்களின் லாபநோக்கமுள்ள இயங்குதன்மை வருகிறது என்ன அது ஒரு பேசண்டு போனால் அவன் தரும் வறுமானம் போகும் ஆனால் அதை ஏற்றுகொண்டு மருத்துவம் பார்த்தால்

நஸ்ட ஈடாக தரவேண்டி வந்தால் நிறைய கொடுக்கனும் சிம்பிள் அவாய்டு செய்வது செய்துட்டாரு

இப்ப கேள்வி வருது மருத்துவை சேவை என்பது தேவையை ஒட்டியதா வருமானத்தை ஒட்டியதா


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

15 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post