ஆளுக்கு ஒரு நீதியா -வினவு






















இந்த பதிவை எழுதுவதன் நோக்கம் சாரு நிவேதிதாவால் செக்ஸ் சாட் நிகழ்த்தி துன்புறுத்த பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வினவு எடுக்கும் முயற்சியை தடுப்பதற்காக அல்ல

-----------------------------------------------------




ஒரு பெண் தாக்கபடுகிறாள் எனும்போது பொங்கவேண்டும் அதுதான் ஆண்மை அது சரியே ஆனால் இதற்கு முன்பும் இங்கே பெண்கள் ஆணாதிக்க வெறியோடு தாக்கப்பட்டார்கள் அப்போது எங்கே போனார்கள் இவர்கள் .


முகிலன் சாந்தி பிரச்சனையில் தனது பெயரை லேபிளில் போடவேண்டாம் என்று மதார் எவ்வளவோ கெஞ்சி பார்த்தாரே அப்போது என்ன சொல்லப்பட்டது

சுட்டி :

http://www.vinavu.com/2010/09/10/values/

இணையவெளியில் நடந்த ஒரு பிரச்சனைக்கு தனது பெயர் லேபிளில் வைக்க வேண்டாம் என்றும் தனக்கு அது பின்னாளில் என்ன விளைவுகளை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம் என்றும் எனவே லேபிளில் இருக்கும் தனது பெயரை நீக்க வேண்டும் என்று கோரினார் மதார் கம்யூனிஸ்டுகள் என தங்களை அழைத்து கொள்ளும் இவர்கள் கட்டுரைக்குள் மதார் பெயர் இருக்கட்டும்


லேபிளில் அவர் பெயர் தேவையற்றது என கருதி அதை நீக்கி இருக்கலாம் அல்லவா மதுரை பெண் எப்படி பெண்ணோ அப்படித்தானே மதாரும் பெண்

ஒரு பெண்ணின் நலனை கருத்தில் கொண்டு அந்த பதிவில் இருக்கும் மதாரின் பெயரை நீக்காத வீரர்கள் இன்று திமிர் பிடிச்ச ஆணாதிக்கத்தை பற்றி எழுதுவது கொஞ்சம் நமுட்டு சிரிப்பை எனக்கு வரவழைக்கிறது ( ஆனால் வினவு தலையிட்டு அனைத்து சாட்டுகளையும் போட்டு விசயத்தின் முடிச்சை அவிழ்த்தது குறித்தெல்லாம் மகிழ்ச்சிதான் )



இதோ மதார் போட்ட கமெண்டு வினவில்

------------------

Reply

MatharMatharSeptember 10, 2010 at 12:11 pm Permalink

8

மிக்க நன்றி வினவு , என் பெயரையும் லேபிளில் போட்டதுக்கு அப்புறம் எனக்கும் சில பக்கங்கள் ஒதுக்கியதற்கு . சாந்தி அக்கா இப்போ சந்தோசமா . ஒரு பெண்ணுக்கு இழைத்த கொடுமைக்கு நியாயம் கேட்கிறேன் என்று சொல்லி எனக்கு ஆப்பு வைக்குரீன்களே . நாளைக்கு எனக்கும் திருமணதிற்கு மாப்பிளை தேடுவாங்க .என் பெயர் வேற கூகிளில் மதார் என்று தேடினால் என் ப்ளாக் மட்டும் இதுவரை வந்தது .இனி இந்த பதிவும் வரும் இன்னொரு ஆணுடன் சேர்த்து வைத்து மிக்க சந்தோசம் . என் பதிவுகள் அனைத்தும் படித்துப் பாருங்கள் வினவு அவர்களே எங்கேயாவது ஒட்டுமொத்தமாய் ஆண்களுக்கோ பெண்களுக்கோ நான் சப்போர்ட் பண்ணி பேசியிருக்கேனா என்று தெரியும் . ஒண்ணுமில்லாத பிரச்சனைகளை எவ்வளவு பெருசா லென்சு போட்டு காட்டுறீங்க உங்கள மிஞ்ச முடியாது போங்க. ஒட்டுமொத்தமாய் நீங்கள் எல்லோரும் டாக்டர் சாலினியை கலந்து பேசுவது நல்லது . கொஞ்சமல்ல நிறையவே கழண்டு போயிருக்கு . உங்ககிட்ட எல்லாம் இதுக்கு மேல பேசுறதே வேஸ்ட் . சொன்னதையே திரும்ப திரும்ப நீங்க பக்கம் பக்கமா பேசினா அதுவே உண்மை ஆகிடாது .ஏனுங்க ஒரு வயது வந்த பெண்மணிக்கு நியாயம் கேக்குறீங்க எனக்கு இன்னும் திருமணமே ஆகலியே . ஒரு படித்த கொஞ்சம் அறிவாளியான பையன் என் பெயரை போட்டு கூகிள் தேடி இதன் மூலம் நாளை என் வாழ்வுக்கு ஏதேனும் ஆனால் அந்தப் பாவம் அனைத்தும் வினவு மற்றும் சாந்தி அக்காவுக்கே சேரும் . கடவுளுக்கு தெரியும் அத்தனையும் .காலம் உங்களுக்கு பதில் சொல்லும் அக்கா காத்திருங்கள் .. நன்றி

-----------------------------------

அப்படியானால் தன்னிடம் பிராது கொண்டுவரும் பெண் மட்டுமே பெண் மற்றவர்கள் எல்லாம் பெண் இல்லை என்ற இக சாதாரணமான திமுக அதிமுக கட்சிகள் செய்யும் அரசியல் தானே இது .

-----------------------

வினவு சொல்கிற பதிலை பாருங்கள்

-------------------------

வினவுSeptember 10, 2010 at 12:31 pm Permalink

8.3

மதார்,

வினவு மற்றும் சாந்தி அக்கா என்று தலைப்பில் போட்டு தனி பதிவு வெளியிட்டது நீங்கள்தான். அந்த பதிவில் நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு மட்டும் இங்கே விளக்கமளித்திருக்கிறோம். இதை செய்ய பணித்தது நீங்கள்தான். உலகில் எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது ஒரு பொண்ணு சொல்றத கேட்டுட்டு இப்படி எல்லா ஆண்களும் வந்து நியாயம் கேட்பதாக அங்கலாய்த்தது நீங்கள்தான். இந்த கட்டுரையில் உங்களை கருத்து ரீதியின்றி கண்ணியக் குறைவாக ஏதும் மறந்தும் கூட சொல்லவில்லை மதார். மற்றபடி நாங்கள் கழண்டு இருக்கிறோம், மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்ற தங்கள் ஆலோசனைக்கு நன்றி. இது முதலிலேயே தெரிந்திருக்கும் பட்சத்தில் இந்த பைத்தியங்களை அப்படி சட்டை செய்திருக்க வேண்டாமே.

அன்புள்ள மதார் உங்களது எதிர்கால வாழ்க்கைக்கு பதிவுலகில் ஏதும் பிரச்சினை வந்தால் நீங்கள் சொல்லாமலேயே உங்களை பாதுகாப்பதற்கு வருவோம். அதை என்றேனும் நீங்க்ள் நிதானமாக புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலும், ஏசுநாதர் அவரது வாழ்க்கையில் அடிமைகளுக்காக போராடியதற்காக சிலுவையில்தான் அறைந்து கொல்லப்பட்டார். அதுதான் எங்களுக்கும் உங்கள் கடவுள் வழங்குவார் என்றால் பிரச்சினை இல்லை. மதாரின் மனநிம்மதிக்காக நாங்கள் சிலுவையை சுமக்க தயார்தான்.

------------------

வினவு போன்ற ஒரு தளத்தில் தன் பெயர் அதுவும் லேபிளில் வந்தால் என்னவிதமான பாதிப்பு ஏற்படும் என்பது சராசரியாக இருப்பவர்களுக்கே புரியும் சந்தேகம் குடும்பத்தில் புகைச்சல் மற்றும் அதை ஒட்டிய மனசலனங்கள் மதாரை பற்றிய அவரது வருங்கால கணவனின் எண்ண ஓட்டம் இதெல்லாம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது லேபிளில் இருக்கும் பெயரை நீக்க சொல்கிறார் அவ்ளோதானே அவர் சொல்வதன் யதார்த்த உண்மையை கூட புரிந்து கொள்ளாமல் உங்க எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சனை வந்தா நாங்க வருவோம்னு அப்பாடக்கர் மாதிரி பேசிட்டு இருந்தா என்னத்த சொல்றது

அதாவது எதிரி கட்சியில் நீ இருக்கிறே என்றால் நீ பெண் என்றாலும் அவமானப்ப்படுத்துவோம் என்பதே இவர்களின் எண்ண ஓட்டம்

இதே பதிவில் தொடர்ச்சியாக வந்த கமெண்டுகளில் சாந்தி என்பவர் மதாரின் புகைப்படத்தை மற்ற ஆண் நண்பர்களுக்கு அனுப்பியதாக சஞ்சய் குற்றம் சாட்டுகிறார்

தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு அனுப்ப கூடாது என சொல்லி அனுப்பிய புகைப்படத்தை நிறைய பேருக்கு அனுப்புகிறார் ஆனால் மதாரின் மீது பகை வந்ததும் அவரது புகைப்படத்தை மற்றவர்களுக்கு அனுப்பி இருக்கிறார் இந்த சாந்தி

// Reply

புன்னகைதேசம்September 10, 2010 at 1:48 pm Permalink

12

[Sanjai Gandhi - அந்தப் பெண் பதிவரின் படத்தை நடுவர் என சொல்லப் படும் யாருக்கோ அனுப்பி இருக்காங்க. இது மிகப் பெரும் குற்றம்.]]

—————

ஆதாரம் இருக்கா சஞ்சய்.?..

ஆதரத்தோடுதான் பேசுகிறீர்களா?..நிரூபிக்க முடியுமா?…

//

இதை சொல்லும் சஞ்சயிடம் ஆதாரம் இருக்கா என வினவு கிறார் இந்த சாந்தி இப்போ ஆதாரம் நம் வசம் இருக்கு

புகைப்படம் அனுப்பியதை குறித்து என்ன செய்யலாம் என ஏழர ; வினவு ஆகியோரிடம் கேட்கிறார் சாந்தி அதற்கு ஏழர சொல்லும் பதில் மழுப்பலானது அந்த தனிமடல்கள் இவர்கள் யாருக்கோ அனுப்ப அது சுத்தி சுத்தி எனக்கு வந்து விட்டது இதில் வினவும் உடந்தை




அந்த மடல்கள் பார்வைக்கு வைக்கிறேன் . ஆனால் இந்த பிரச்சனையில் சம்பந்தபட்ட இவர்களால் தூக்கி பிடிக்கப்பட்ட சாந்தி இன்று வரை மதாரை தாக்கி எழுதிகொண்டு இருக்கிறார் கூகுள் பஸ்ஸில்

சுட்டி இதோ

https://profiles.google.com/103009964296769904418/posts/SmC36LHGvJF

---------------------------------

உலகில் பிறந்த பிறக்கபோகும் பெண்களுக்கெல்லாம் குரல் கொடுக்கும் வினவு ஏன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மட்டும் விரும்பதகாத விளைவுகள் ஏற்பட காரணமாக வேண்டும்

பெண் என்றால் பெண் உழைக்கும் பெண் மேட்டுகுடி பெண் என்றெல்லாம் இல்லை என வாதிடவும் போரிடவும் தெரிந்தவகள் சாந்தி போட்டோ அனுப்பிய தெரிந்து ஏன் கண்டிக்கவில்லை அதை தங்களது தளத்தில் பதிவிடவில்லை அடுத்து அடுத்து சாந்தி மிக மோசமான வார்த்தைகளால் அனைவரையும் குத்தி கிழிக்கும் போது கண்டுக்காம இருந்து கொள்ளும் சாதுரியம் என்ன நன்றாக இருக்கிறது நடிப்பு கடைசியாக வினவு ரெளடியா இல்லை அவர்கள் ரெளடியான்னு பார்த்துவிடுவோம் என தனிமடலில் சாந்தி சொல்வதை மறக்கமுடியவில்லை


1.ஆக பெண்ணியம் என்பது தன்னை சார்ந்தவர்களுக்கே தனது கருத்துக்கு எதிர்கருத்து கொண்டவரின் மிக சிறிய வேண்டுகோள்கூட புறக்கணிக்கப்படும்

2.தங்களை சார்ந்தவர் ஒரு தனிமடலில் தான் ஒரு பெண்ணின் புகைப்படத்தை சுற்றில் விட்டிருப்பது தெரிந்தும் அந்த தகாத செயலை கண்டிக்காத்தும் தனது செயலுக்கு சுயவிமர்சனம் ஏற்காமையுமாக ஒரு சராசரி பதிவரின் நேர்மை கூட இல்லாத போக்கை கடைபிடிக்கும் வினவு ஆனால் அதன் புரச்சிகர கதாபாத்த்திரம் மட்டும் தூய்மையானது சாருநிவேதிதா என்கிற அதிகாரவர்க்கத்தில் இருக்கும் ஆணைக்காட்டிலும் என்ன பெரிய வித்தியாசமாக வினவு நடந்து கொண்ட்து என்பதை விளக்க முடியுமா விவாதிக்க முடியுமா ?

இதெல்லாம் செய்ய மாட்டீர்கள் ஏனெனில் தலைக்கு மேல் கணம் இருப்பவன் இதை குனிந்து பார்க்க மாட்டான்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

7 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post