ஆண்டு 19 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தரும் திருப்பூர் என பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை சொல்லியாச்சு .
இங்கே தொழிலாளருக்கு எந்த சலுகையோ , வீட்டு வசதியோ , வாழ்க்கை வசதியோ ஒரு வெங்காயமும் கிடையாது இத்தனை நாள் முதலாளிகள்தான் அள்ளி கட்டினார்கள் .
போகட்டும் இந்தியாவிலேயே சிறந்த பொருளாதார மேதை மன்மோகன் சிங்குக்கு தெரியதா? பஞ்சு ஏற்று மதி செய்தால் , பஞ்சு விலை ஏறும் அதன்மூலம் நூல் விலை ஏறும் ஏத்திட்டாங்க அதன் மூலம் சாய பட்டறை பிரச்சனையால் அள்ளாடிய திருப்பூர் மீண்டும் நூல் விலை ஏற்றத்தால் தள்ளாடுகிறது .
பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது மத்திய அரசு
பஞ்சு ஏற்றுமதி மூலம் , வேடிக்கை பார்க்கிறது மாநில அரசு .
அதுக்கு செம்மொழி மாநாடு முக்கியம் இங்கே காணமல் போகப்போகும்
தொழில் முக்கியமல்ல விளம்பர பாணி நடிகர்களின் ஆட்சி இப்படித்தான் இருக்கும் .
விபரங்களை படியுங்கள் கீழே
நன்றி : திருப்பூர் நியூஸ்
பஞ்சு விலை உயர்வு, நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல் வேறு காரணங்களால்,
திருப்பூரில் பனியன் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட் டுள்ளது. நூல் விலை உயர் வால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிக்கட்டியுள்ள நேரத்தில், சாயக்கூலி உயர்த்தப்பட் டுள்ளது, பனியன் உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில்
+ஆழ்த்தியுள்ளது.திருப்பூர் பனியன் தொழிலுக்கு அச்சாரமாக இருப்பது சாயத் தொழில். காட்டன் ஒசைரி நூலில் இருந்து, பனியன் துணிகள் உற் பத்தி செய்யப்படுகின்றன. பனியன் துணிகள் சாய ஆலைகளில் சாயமேற்றப்பட்டு, சுருக்கங் களை சரி செய்ய "காம்பாக்டிங்' மற்றும் "ரைசிங்' பணிகளுக்கு
அனுப்பப்படுகிறது. திருப்பூரில் உள்ள தொழிலதிபர்களில் சிலர் மட்டுமே, இத்தகைய அனைத்து நிறுவனங்களையும் இயக்குகின்றனர்.
பெரும்பாலான உற்பத்தியாளர் கள், "நிட்டிங்', "டையிங்', "காம் பாக்டிங்' உள்ளிட்ட வேலைகளை கூலி அடிப்படையிலும், ஆடை வடிவமைப்பு பணிகளை "ஜாப் ஒர்க்' முறையிலும் செய்து, பனியன் வர்த்தகத்தில்ஈடுபடுகின்றனர்.இந்நிலையில்,
அபரிமிதமான பருத்தி விளைச்சலால், பருத்தி ஏற்றுமதியை அரசு ஊக்குவித்தது. இதனால், உள்நாட்டு தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு 2,000 ரூபாய் வரை உயர்ந்தது. பஞ்சு பற்றாக்குறை ஏற்பட்டதால், 20 சதவீதம் அளவுக்கு நூல் விலை உயர்ந்தது.மின்வெட்டு காரணமாக, உற்பத்தியை நினைத்த நேரத்தில் முடிக்க முடியாமல் வருந்தி வந்த பனியன் உற்பத்தியாளர்களுக்கு, நூல் விலை உயர்வு பேரிடியாய் அமைந்தது.
tirupurnews-yarnநூல் விலை உயர்வை எதிர்கொண்டு, உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், நஷ்டத்தை சரிக்கட்ட பனியன் உற்பத்தியாளர்கள் 12 சதவீத கட்டண உயர்வை அறிவித்தனர்; சிறு பனியன் உற்பத்தியாளர்களும் 10 சதவீத உயர்வை அறிவித்தனர்.நூல் விலை ஏற்றத்தை, கட்டண உயர்வால் சமாளித்து தொழிலை தொடங்கிய போது, மீண்டும் ஒரு அதிர்ச்சி சாய
ஆலைகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட் டது. சாயத்தொழில் முடங்கியதால், "நிட்டிங்', "காம்பாக்டிங்', "ரைசிங்' மற்றும் "காலன்டரிங்'
தொழில் நேரடியாக பாதிக்கப் பட்டது. "ஸ்டாக்' இருந்த துணிகள் காலியானதும், பனியன் உற்பத்தியும் 80 சதவீதம் பாதிக்கப்பட்டது.
17 நாட்கள் நடந்த சாய ஆலைகள் போராட்டத்தால், 480 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக் கப்பட்டது. சாதாரணமாக,
ஐந்து நாட்கள் போராட்டம் நடந்தாலே, மீண்டும் தொழில் நிலை சீராக, இரண்டு மாதங்களாகும்.இரண்டு வாரத்திற்கும் அதிகமான
நாட்கள் போராட்டம் நடந்ததால், அனைத்து தொழில்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறித்த நேரத்தில் ஆர்டர் அனுப்புவதற்காக,
ஏற்றுமதியாளர்கள், ஈரோடு, பெருந்துறை பகுதிகளுக்குச் சென்று, கூடுதல் கட்டணம் செலுத்தி சாயமேற்றினர். அதிலும் தாமதம் ஏற்பட்டதால்,
சரக்குகளை விமான போக்குவரத்தில் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.சாய ஆலைகளின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும்,
குறைவான ஆலைகள் மட்டுமே இயங்குகின்றன. தற்போதைய நிலவரப் படி, மொத்தமுள்ள 529 சாய ஆலைகளில் 210 ஆலைகள் மட்டுமே
இயங்குகின்றன.ஆர்.ஓ., அமைப்பு செலவை ஏற்றுக்கொண்ட சாய ஆலைகளால், "ஜீரோ டிஸ்சார்ஜ்' நடைமுறை செலவை சமாளிக்க முடியவில்லை.
இதனால், கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை சாயக்கூலி உயர்த்தப்பட்டது. மின் வெட்டு, நூல் விலை உயர்வு உள்ளிட்ட
பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் வேளையில், சாய ஆலைகளின் கூலி உயர்வு உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:மின்தட்டுப்பாட்டால் ஏற்படும் ஜெனரேட்டர் செலவு, நூல் விலை உயர்வு என
அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டன. சாய ஆலைகளின் போராட்ட வடு மறைய சில மாதங்களாகும். இந் நிலையில், சாயக்கூலியை
உயர்த்தியுள்ளது பனியன் உற்பத்தி செலவை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இதனால், ஒப்பந் தம் செய்தபடி,
ஆர்டரை அனுப்பினாலும் கையை கடிக்கும்.நூல் விலை ஏற்றத்தின் போது நடைமுறைப்படுத்திய உற்பத்தி கட்டண உயர்வை,
பனியன் வர்த்தகர்கள் ஏற்க யோசிக்கின்றனர். சாயக்கூலி உயர்வை சமாளிக்க, மீண்டும் கட்டண உயர்வு செய்ய வேண்டிய இக்கட்டான
நிலைக்கு ஆளாகியுள்ளோம், என்றனர்.
காத்திருக்கும் அடுத்த "இடி' : பஞ்சு விலை உயர்வு, நூல் விலை உயர்வு என ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள்
பல பிரச் னைகளை கடந்து வந்துள்ளனர்.நிலைமையை அனுசரித்து சாயக்கூலியை சிலர் ஏற்றுக் கொண்டாலும், மின் கட்டண உயர்வு
என்ற பெயரில் மீண்டும் ஒரு "இடி' பனியன் உற்பத்தியாளர் களை நோக்கி வருகிறது."தற்போதைய நிலவரப் படி, மின்கட்டண உயர்வு
சேரும் போது, பனியன் தொழில் சிதறிப்போகும்' என, உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Tags
Problems in Exports