தோழர் சந்திப்புக்கு எனது அஞ்சலிகள்

உலகமே தனக்காக வாழுகையில் அடுத்தவருக்கு

வாழ வேண்டாம் அடுத்தவனுக்காக சிந்திக்க கூட

இங்கே ஆள்கள் குறைவு , தனது உடல்நல குறைவு( கான்சர்)

பொருட்படுத்தாமல் பொதுவுடமையை தான் சார்ந்த கட்சிக்காக

நாளும் எழுதி வந்த அருமை தோழன் சந்திப்பு 22.01.2010 அன்று

மறைந்தார் என்ற செய்தி பேரிடியை போன்று உள்ளது எனக்கு


சொல்லி இருக்கலாம் தோழா
இனி கொஞ்சநாளில் நீ இருக்க மாட்டாயென
துயரங்களை தாங்கிதான் நீ எழுதினாயா
மேலும் விவாதித்து துன்புறுத்தி விட்டோமே

எந்த கம்யூனிஸ்டுதான் சொந்த கஸ்டத்தை
சொல்லி இருக்கிறான் நீ சொல்வதற்கு
தோழனே கடைசிவரை உபாதையை வெளியிடாமல்
உபகார கடிதங்களை நாட்டின் நடப்புகளை சொன்னாய்

உனக்கும் இருந்த உனது இதயம்
அகில முழுக்க இருந்த ஏழைகளுக்காக துடித்தது
உன்னைபோல எத்தனை உயிர்கள் இனி சிந்திக்கும்
காற்றை போல வந்தாலும் கவிதை போல
இனிமையை சேர்த்து விட்டு போய்விட்டாய்

நீ கொடுத்து சென்ற பொறுப்பு எத்தகையது
அதன் பளு மிக அதிகமானது தோழர்
இணையம் இருக்கும் வரை உனது
எழுத்து இருக்கும் தோழர்

நேரில் பார்த்ததில்லை ஆனால்
நேசத்தை விதைத்து விட்டாய்
நெஞ்சம் அழுகிறது
நினைவுகள் எழுகிறது

செவ்வணக்கம் தோழா

போய் வா









-
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post