என் இதய தீ முத்துகுமார்

ஆண்டாண்டு காலமாக
அடக்கப்பட்ட மக்களின்
திடீர் வெடிப்பு நீ முத்து குமார்

அடங்க மறுத்து திமிரி எழு
தீயிட்டு பொசுக்கி
உணர்வுகொள செய்
என்பதான செய்தி நீ

எரிமலையின் சிறு துளிநீ
இன்னும் இருக்கிறது
மாபெரும் மலை
எங்கள் இதயத்துள்
குமார்

சொன்னாயே சொன்னாயே
எனது உடலை கைப்பற்றி
போராடுங்கள் என்று

உன்னை அடக்கம் செய்து
உணர்வையும் அடக்கம் செய்து
ஓட்டுக்கு தானே வரிசையில்
நின்றோம்


கடன் வாங்கி
கட்ட முடியாமல் இறந்தவனோ
வயிற்று வலியில்
உன்னை மாய்த்து கொண்டவனோ-அல்ல
ஈழத்தில் தமிழன் சாகிறானே
என்று இறந்தவன் நீ

உன்னை நினைக்கையில்
கொஞ்சம் மானரோசம்
நினைவுக்காவது வரட்டும்

தமிழன் ஒருவன் இருந்தான்
அவன் இறந்த காலத்தில்
நாங்கள் இருந்தோம்
என வரலாறு பேசட்டும்
போ குமார்










--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post