கொடூரமானவை புலிகளென
வேட்டையாடி கொன்ற உங்கள்
நாட்கள் திரும்ப வராதன
அழிவிலிருந்து காக்க
நினைக்கையில்
வாசலில் நிற்கலாம் அவை
சயனைடு குப்பிகளுடன்
வன்மம் நிறைந்ததென
கொன்ற புலிகளின்
நகங்களை அணிந்து
விளையாடும் உங்கள்
பிள்ளைகள் விடலாம்
புலிகளின் மூச்சு
காந்தியின் நாடுதானெனினும்
கட்டாயபடுத்தலாமா
புற்களை திண்ணும்படி
புலிகளை
அழகான வரிகளுடன்
அவை இனிமேல்
பார்க்க கிடைக்கலாம்
அனுக இயலா தூரத்தில்
நீங்கள் இருக்கையில்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================