இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்

நன்றி : கார்க்கியின் பதிவுகள்
 
புதிதாக ஒரு இம்சை கிளம்பியிருக்கிறது - ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு.

சில நாட்களுக்கு முன் மங்களூரில் கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை சராமாரியாக தாக்கியதில் தான் முதன் முதலாக இந்த அமைப்பு "புகழ்"அடைந்தது. இப்போது காதலர் தினக் கொண்டாடங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள இதன் தலைவன் முத்தலிக் என்பவன், காதலர் தினத்தன்று ஆண்களும் பெண்களும் ஜோடிகளாய்த் திரிந்தால் பிடித்து கல்யாணம் செய்து வைத்துவிடுவோம் - இல்லை என்றால் கையில் ராக்கி கட்ட வைப்போ்ம் என்று சொல்லி வைக்க, குமுறி எழுந்த நவயுக முற்போக்கு ( தங்களை 'லூசு' பெண்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்) பெண்கள் சிலர் காதலர் தினத்தன்று முத்தலிக்குக்கு பிங்க் நிற ஜட்டிகளை பார்சல் அனுப்பப் போவதாக சொல்லி இனையத்தளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

மீடியாவெங்கும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஆமா, யார் இந்த ராம் சேனா? யார் இந்த முத்தலிக்? எங்கேர்ந்து கெளம்புராய்ங்க?

முத்தலிக்

முத்தலிக்

மேலே படத்தில் கண்ணக்கோல் வைப்பவன் போலவே திருட்டு முழி முழிக்கிறான் அல்லவா, இவன் தான் முத்தலிக் - ப்ரமோத் முத்தலிக்!

கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன். 2000ம் ஆண்டுத்
தொடக்கம் எட்டே ஆண்டுகளில் 45 கிரிமினல் வழக்குகள் இவன் மேல் பதிவாகியிருக்கிறது. தனது பதிமூன்றாம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததில் ஆரம்பித்த கிரிமினல்
வாழ்க்கை இப்போது ஸ்ரீ ராம் சேனா வரையில் வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்து தற்கொலைப் படை அமைத்துள்ளதாக அறிவிக்கும் அளவுக்கு
உயர்ந்து நிற்கிறது. வருடம்தோறும் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் நடைபெறும் நாதுராம் கேட்ஸேவின் நினைவு நாள் கூட்டத்தில் தவறாமல் பங்கு பெறுவதை பெருமையாக அறிவித்துக்
கொள்ளும் இந்தக் கிரிமினல் மிகச் சுதந்திரமாகச் சுற்றி வருவதுடன் அவ்வப்போது கலாச்சார ஃபத்வாக்களையும் விதித்து வருகிறான்.

இந்த இடத்தில் சாதாரண ப்ளேடு பக்கிரிகளிடம் வீரம் காட்டும் போலீசு 45 வழக்குகள் பதிவாகியிருக்கும் ப்ரமோத் முத்தலிக்கின் மயிரைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று இப்போது (பிரச்சினைகள் ஆரம்பித்த பின்) ஆர்.எஸ்.எஸ் சொல்வதெல்லாம்
ஏற்கனவே கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்
லை என்று ரீல் விடுவதைப் போலத்தான். பொதுவாக ஆர்.எஸ்.எஸின் தந்திரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான இயக்கங்களை நடத்துவது தான்; ஏனெனில் பின்னால் தடை
செய்யும் அளவுக்கு பிரச்சினை வந்தால் அந்த குறிப்பிட்ட முகமூடியை மட்டும் அப்போதைக்கு கழட்டி விட்டுவிடலாம் அல்லவா? - அதாவது ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ் என்றால் சல்லி
வேர் ஸ்ரீ ராம் சேனா.

இந்த காட்டுப்பயல்களை எதிர்த்து களத்தில் நிற்பதாக மீடியாக்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவது "பிங்க் ஜட்டி" இணையக் குழுமத்தினர். ராம் சேனை காதலர் தினத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவுடன் களத்தில் குதித்த - தம்மை லூசு / முற்போக்குப் பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் - பெண்கள் இணையம் வாயிலாக ஒன்றினைந்து சேனையின் தலைவன் முத்தலிக்கு பிங்க் நிற ஜட்டிகளை காதலர் தினத்தன்று பாரிசாக அனுப்பப்போவதாக அறிவித்துள்ளனர் ( முன்னா பாய் எபக்ட்!) . அறிவித்த சில நாட்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் / ஆண்கள் இந்த இணையக் குழுமத்துக்கு ஆதரவளித்து முன்வந்துள்ளனர்.

இவர்கள் ராம் சேனாவின் காதலர் தின எதிர்ப்பு என்ற அம்சத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து, ராம் சேனா என்பது பெண்களுக்கு எதிரானது என்ற அம்சத்தை மட்டும் மைய்யப்படுத்தி தமது பிரச்சாரத்தை அமைத்து வருகிறார்கள். இந்த பிரச்சாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கும் வேலையை ஆங்கில மீடியாக்கள் செய்துவருவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

இந்த போராட்ட முறையின் அயோக்கியத்தனம் ஒருபக்கம் இருக்கட்டும் - இதனால் வசதியாக மறைந்து போவது ராம் சேனையின் மக்கள் விரோதத் தன்மை!

கேளிக்கை விடுதிகளில் குடித்துக் கும்மாளமிடும் உரிமையும், முறையற்ற உறவுகள் கொள்ள உரிமை பெற்றிருப்பதுமே பெண் விடுதலையின் உச்சம் என்பது தான் இவர்கள் செய்யும்
பிரச்சாரத்திலிருந்து விளங்க வருவது. நகரங்களில் கட்டிடங்களில் சித்தாள் வேலையிலும், மற்றக்கூலி வேலைகளிலும் , கிராமப்புரங்களில் விவசாயக்கூலி வேலையிலும் மிகக்
கொடூரமான முறையில் சுரண்டப்படும் பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் - குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் கணவன், மகன், தந்தை என்று எல்லா உறவுகளாலும் ஈவு இரக்கமற்று
சுரண்டப்படும் பெண்கள் கொண்ட நாட்டில், பெண்விடுதலை என்பதை குடித்துக் கும்மாளமிடுவதற்கான உரிமை என்ற அளவில் சுருக்கும் அயோக்கியத்தனத்தையே இவர்கள் செய்கிறார்கள்.

இந்துத்துவம் என்பதே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது - மட்டுமல்லாமல் அது மக்களுக்கே எதிரானது.  பரந்துபட்ட ஒரு தளத்தில் நின்று இந்துத்துவ இயக்கங்களின் மக்கள்
விரோத ஜனநாயக விரோத அடித்தளத்தை மக்கள் மத்தில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசிய தேவையை மறக்கடிக்கும் வகையில் இப்போது
பிங்க் ஜட்டியா பிங்க் சேலையா என்ற அளவில் விவாதத்தை சுருக்கியது தான் இந்த ஜட்டிக் குழுவினர் செய்த வேலை.

கழிசடைத்தனம் செய்யும் உரிமையே விடுதலை என்று கோரும் இந்தப் பெண்கள் உண்மையில் ராம் சேனையை புனிதப்படுத்தும் வேலையையே செய்கிறார்கள். பிங்க் நிற ஜட்டியின்
பிரகாசிக்கும் ஒளியில் ராம் சேனையின் மற்ற எல்லா மக்கள் விரோத தன்மையும் மறைந்து போகிறது.

ராம் சேனை போன்ற கிரிமினல் கூட்டத்துக்கு சரியான உடனடி பதில் என்பது தெருவில் இறங்கி திருப்பி அடிப்பது ஒன்று தான் - அவர்களுக்கு வன்முறை தவிர்த்து வேறு எந்த
மொழியும் புரியாது. இவர்களுக்கான நீண்டகால பதில் என்பது இந்துத்துவ அரசியல் நிலவ அடித்தளமாய் இருக்கும் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைக்கு புரட்சி மட்டும்
தான்!



--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post