Thanks Thozar eraniyan
இந்துவெறியை வளர்க்கும் இஸ்லாமிய தீவிரவாதம்.......
இந்துவெறி பாசிச பயங்கரவாதத்தை வளர்த்துவிடத் துடிக்கும் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதம்!!!!!!!!!!!!
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றிருப்பதாக 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பைக் காட்டுகின்றன நமது ஊடகங்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதற்கிடையில் நெல்லையில் நேற்று அப்துல் கபூர் என்ற ஒரு நபரை வெடிகுண்டுகளுக்கான மூலப்பொருள்களோடு பிடித்திருப்பதாக அனைத்து காட்சி, எழுத்து ஊடகங்களும் கூப்பாடு போடுகின்றன.
இந்துவெறிக்கு பதிலடி தருவதாக எண்ணிக்கொண்டு இதுபோன்ற தாக்குதல்களை இஸ்லாமிய இயக்கங்கள் மேற்கொள்வது மேன்மேலும் இந்துத்துவ பயங்கரவாதிகளை வளர்க்கவே பயன்படுமேயன்றி வேறில்லை. பொதுமக்கள் கூடுமிடங்களில் இதுபோன்ற குண்டுவேடிப்புகளை நிகழ்த்துகின்ற இயக்கங்கள் மிகவும் கண்டிக்கப்படவேண்டியவைதான். ஆனால், குண்டுவெடிப்புகளில் பெரும்பாலும் தொடர்புடைய, பற்பல குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இந்த அளவிற்கு ஊடகங்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை.
தென்காசி குண்டு வெடிப்புக்கு முசுலீம் தீவிரவாதத்தைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய ராம.கோபாலன், இல.கணேசன், ஜெயலலிதா போன்ற இந்துவெறியர்கள், அச்சம்பவத்தை சட்டவிரோதமாக நிகழ்த்தி முசுலீம்களின் பக்கம் திசைதிருப்ப முயன்றதாக இந்துமுன்னனிக் காரர்கள் கைது செய்யப்பட்டு, விசாரனையில் ஒப்புக் கொண்ட பிறகு, தமது மேற்கண்ட அறிக்கைக்கு இந்துவெறித் தலைவர்கள் யோகியமான மறுப்பைத் தெரிவிக்கவில்லை இன்றுவரை.
கோத்ரா சம்பவத்தின் தொடர்ச்சியாக குஜராத்தில் மோடியின் தலைமையில் நேரடிக் கண்காணிப்பின்கீழ் நடத்தப்பட்ட இந்துவெறி பயங்கரவாத இனப்படுகொலைகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை தெகல்கா இதழ் வெளிக்கொண்டுவந்தது. அனைத்தையும் நிகழ்த்திய குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலமாகவே தெகல்காவின் அந்த புலனாய்வு அம்பலப்படுத்தியது.
இன்றையதினம் முசுலீம் தீவிரவாதிகளைச் சுற்றித்திரியும் ஊடகங்கள் தெகல்காவின் புலனாய்வை அடியோடு புறக்கணித்து இருட்டடிப்பு செய்தது. மதவெறியை எதிர்ப்பதாக நாடகமாடும் போலி கம்யூனிஸ்டுகள் கூட தெகல்காவை இவ்விசயத்தில் இருட்டடிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட தொடர்ச்சியான இருட்டடிப்புகளூக்குப் பிறகு தெகல்காவின் அடுத்த இதழில்; "இப்படிப்பட்ட மவுனம் இந்து பயங்கரவாதத்தைவிட ஆபத்தானது" என்று சரியாகக் குறிப்பிட்டு சாடியது.
இந்துவெறி பயங்கரவாதம் தலையெடுத்த பிறகு நடைபெற்ற எண்ணற்ற கலவரங்களிலும் குண்டுவெடிப்புகளிலும் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் ஏராளம். மதக்கலவரங்களே குண்டுவெடிப்புகளைத் தோற்றுவிக்கின்றன. "குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கலவரத்தின் குற்றவாளிகள்?! அவர்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது" என்கிறார் தோழர் மருதையன். கலவரத்துக்குப் பிறந்த ராம.கோபாலன்கள் இன்றுவரை 'வீரத்துறவி' என்ற பட்டத்தோடு வலம்வருவதற்கு, பாஜக பெரும்பான்மை பெற்று நாடாளுமன்ற அரியனை ஏறுவதற்கு என்று ஏவிவிடப்பட்ட மதவெறி பயங்கரவாதங்களும் அதன் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளும் அப்பாவி மக்களின் உயிருக்கே உலைவைத்திருக்கின்றன.
தெகல்காவின் ஆதாரங்களை வழ்க்காகக்கூட ஏற்கமறுத்து புறக்கணித்த நம்நாடு மேன்மைக்குரிய நீதி நிர்வாகத்தின் நேர்மையற்ற தன்மை நீடிக்கும்வரை இதுபோன்ற குண்டுவெடிப்புக்களுக்கான பதற்றங்களும் நீடிக்கவே செய்கின்றன. எப்படியாகிலும் இஸ்லாமிய தீவிரவாதம் இந்துவெறி பயங்கராவாதத்துக்கு மேன்மேலும் தூண்டுகோலாக மட்டுமே அமையும் என்பதுதான் கடந்த கால குண்டுவெடிப்புகாள் சொல்லுகின்ற பாடம்.
இப்போதைய குண்டு வெடிப்புகளுக்கு நியாயம் கேட்டு தொடர்போராட்டம் நடத்தப்போவதாக இந்துவெறி அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. குஜராத் சம்பவத்துக்கு இன்று வரை யோக்கியமான முறையில் பொறுப்பேற்காத பயங்கரவாதிகள் இப்போது நியாயம்கேட்டு மக்களிடம் வருகிறார்களாம்.
விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தோழர்களின் கருத்துக்களை தொடர்ச்சியாகாத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
தோழமையுடன்,
இரணியன்.

--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================