திருப்பூரில் இருக்கும் மக்கள் தொகைக்கு இரண்டு மடங்காக ரேசன் கார்டு
இருக்கிறதாம்
ஆகவே கார்டு வைத்திருப்பவர்களை பார்த்து அவர்களது கார்டு சரியானதா
என சோதிக்கும்படி மாநகராச்சி நிர்வாகம் உத்தரவிட்டது .
கடந்த ஒருமாதமாக வீடுவீடாய் வந்து சோதனை செய்வதற்கு பதில்
ஒரு தெருவில் வந்து ஒரு மரத்தடியில் உக்கார்ந்து கொள்ளும்
ஆசிரியர்கள் எல்லாரையும் கார்டை எடுத்துக்கொண்டு வ்ரச்சொல்கிறார்கள்
இதுதானா வீடு வீடாய் சோதனை செய்யும் லட்சனமா ?
இத்தனைக்கும் இவர்களுக்கு 1 கார்டை சரிபார்த்தால் 5 ரூபாய் என பேட்டா
வழங்கப்படுகிறதாம் /
அது இருக்கட்டும் இன்னைக்கு இந்த தெருவில் இந்த இடத்தில் இருக்கிறார்கள்
என சொல்லுவார்கள் மக்கள் கூட்டம் அவர்களை தேடி போகும் அங்க போனா
அடுத்த தெருவில் ஒரு இடத்தில் இருக்கிறாங்கன்னு சொல்லுவாங்க மக்கள் கூட்டம்
அங்க போகும் இப்படி தெருத்தெரு சுத்த விடுவதுதான் இவர்களின் ரேசன் கார்டு
சோதனையா ?
ஒரு விசயத்தையும் திட்டமிட்டு நடத்தமுடியாத அதிகாரிகள்
எதுக்குய்யா மாதா மாதம் சம்பளம் வாங்கிறீங்க
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================