கடவுள் தேவை இல்லை இனிமேல்


ஜெனிவா: உலகின் மிகப்பெரிய அணுபிளவு சோதனை இன்று ஜெனிவாவில் துவங்கி உள்ளது. செயற்கை பிரளயத்தை ஏற்படச் செய்து அதன் மூலம் பூமி மற்றும் உயிர்கள் உருவானதை நிரூபிக்கும் சோதனையில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய இயற்பியல் அணுபிளவு சோதனையாக கருதப்படுகிறது. இதில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 300 அடி ஆழத்திலும், 27 கிமீ தொலைவில் நீள்வட்டப் பாதையிலும் 2 புரோட்டான்களை இயக்கி, அவற்றை வெடிக்கச் செய்து அதன் மூலம் உலகம் உருவானதை அறியும் சோதனையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீள்வட்டப்பாதையில் சுமார் ஆயிரம் காந்தப்புல சிலிண்டர்கள் இணைக்கப்பட்ட முனைகளைக் கொண்ட வெவ்வேறு மின் ஆற்றல்களைக் கொண்ட இரு புரோட்டான் அணுக்களை இணை‌‌ய செய்வதன் மூலம் இந்த செயற்கை பிரளயம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒளி வேகத்தைக் கொண்டு சுமார் 11 ஆயிரம் சுழல் கம்பிகள் ஒவ்வொரு விநாடியின் போதும் சிதைவடைய செய்யப்படுகிறது. சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இயங்கி வரும் இந்த ஆய்வகத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பணியாற்றி வந்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் 30 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. உலகின் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனையின் மூலம் உலகம் தோன்றியதன் ரகசியங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அறிவியல் ஆர்வளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த செயற்கை பிரளயத்தினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என உலக சுற்றுப்புற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் பாதிப்பு ஏதும் நிகழாது என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். கதிரியக்க பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் உலகம் முழுவதும் இந்த சோதனைக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நன்றி,
தினமலர்
நன்றி :
 
காமேஸ் முத்தமிழ்
--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post