அதிகும்பா கல்வெட்டும் வரலாற்றுப் புறக்கணிப்பும்

அதிகும்பா கல்வெட்டும் வரலாற்றுப் புறக்கணிப்பும்.

(நன்றி.பா.பார்த்திபன் . ஆர்குட்)

-------அதிகும்பா கல்வெட்டு" ஒரிசா மாநிலம், புவனேசுவருக்கு அகில் 1825ஆம் ஆண்டு ஸ்டிர்லிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கலிங்க மன்னன் காரவேலன் தன் வெற்றிச் சிறப்புகள் அடங்கிய 17 வரி பிரசஸ்தி (மன்னனின் வெற்றிச் சிறப்பு)யை அதிகும்பா கல்வெட்டில் வெட்டியுள்ளான். இக்கல்-வெட்டின் 11வது வரி தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு பற்றி குறிப்பிடுகின்றது.

------>தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு 1300 ஆண்டுகள் இருந்துள்ளது என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த பிராகிருத மொழிக் கல்வெட்டை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எபிகிராபிகா இண்டிகாவில் எழுதிய கே.பி. ஜெயிஸ்வால் மற்றும் ஆர்.ஜி.பானர்ஜி அவர்-கள் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு 113 ஆண்டுகள்தான் இருந்துள்ளது எனக் குறிப்-பிட்டுள்ளார்.

-----> 1930இல் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டுச் செய்தியை ஏற்றுக் கொண்ட கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1948இல் தம் தென்னிந்திய வரலாற்றில் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்.


------>கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியைப் பின்பற்றி நவீன வரலாற்று ஆசிரியர்களான வே.தி.-செல்வம், சு.தில்லைவனம், நா.சுப்ரமணியம் போன்றோரும் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு 113 ஆண்டுகள் தான் இருந்துள்ளது என்றே குறித்துள்ளனர்.

----->இதனை எதிர்த்து மா.கந்தசாமி அவர்கள் 2003ஆம் ஆண்டு தம் தமிழகத் தொன்மையும், சிறப்பும் என்னும் நூலில் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு 1300 ஆண்டுகள் இருந்துள்ளது என நிறுவியுள்ளார். ஆனால், இது இன்னும் தமிழக வரலாற்று ஆசிரியர்களின் கவனத்திற்குச் செல்லவில்லை என்பது வேதனைக்குரியது. அதிகும்பா கல்வெட்டைப் பற்றி ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது தமிழரின் கடமை.
--->அதிகும்பா கல்வெட்டின் வரி பதினென்னு: ஜானபதம் ச தெரச வச சதிகம் அமிம்ததி தமிள தேச சங்காத்தம் பரசம் ச வஸ்... என்று குறிப்பிடுகின்றது. (பார்க்க: Epigraphiya Indica Vol XX).
மேற்கண்ட பகுதிக்கு விளக்கம் அளிக்கும் கல்வெட்டு ஆசிரியர்களான கே.பி.ஜெயிஸ்வால் மற்றும் ஆர்.டி.பேனர்ஜி அவர்கள், காரவேல-னால் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு (தமிள தேச சங்காத்தம்) உடைக்கப்பட்டது.

------->இக்கூட்டமைப்பு 113 ஆண்டுகள் தொடர்ச்-சியாக வந்துள்ளது. இது அச்சம் விளைவிக்கக் கூடிய சக்தியாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு விளக்கம் அளித்துள்ள கல்வெட்டு ஆசிரியர்கள் 113 ஆண்டுகள் என்பதற்குக் கீழ் ஓர் அடிக்-குறிப்பைச் சேர்ந்துள்ளனர்.

----->அந்த அடிக்குறிப்பில், தெரச வச சதிகம் - நாங்கள் 1300 ஆக இருக்க வாய்ப்பில்லை என்பதால் 113 என்று பொருள் கொண்டு திவசசத என்று கொண்டுள்ளோம் என்று கல்வெட்டு ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது தெரச வச சதிகம் (1300) என்பதை திவசசத (113) என்று மாற்றியுள்ளனர்.


----->ஒரு கல்வெட்டை காரணமின்றித் துணிந்து மாற்றியுள்ளனர் என்பது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ் மன்னர்கள் கி.மு.1500 ஆண்டுகளுக்கு முன்பே நாடு, நகர், அரசு இவற்றைப் பெற்று விட்டனர் என்பதற்கு கலிங்க மன்னன் கல்வெட்டு சான்று உரைத்துள்ளது. ஆனால், இது வரலாற்று ஆசிரியர்களால் புறக்கணிக்-கப்பட்டு வந்துள்ளது. இது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமை.

----->ஆர்.டி.பேனர்ஜி மற்றும் கே.பி.ஜெயிஸ்வால் ஆகியோருக்கு முன் இக்கல்வெட்டை வாசித்த அறிஞர்கள் இதற்கு வேறு விதமாக விளக்கம் அளித்தாலும் அவர்களெல்லாம் 1300 ஆண்டு-கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்
------->(See: Ancient India - V.D. Mahajan, S. Chand & Company Ud New Delhi 2006 pp. 369) இதனை இந்திய வரலாற்று ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி ஆகும்.
தமிழர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பே குழுவின நிலையைக் கடந்து அரசாட்சி நிலைக்கு உயர்ந்து விட்டனர் என்பதை நிறுவ,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே - என்ற கபிலர் பாடலையும்
அவர்களைச் சங்க மிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டு போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மர் என்று
- என்ற இறையனார் களவியல் நக்கீரர் உரையையும் மேற்கோள் காட்டிய பழைய வரலாற்று ஆசிரியர்களை, நவீன வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கலாம்.

----->ஆனால், கலிங்க மன்னனின் கல்வெட்டுச் செய்தியை நவீன வரலாற்று ஆசிரியர்களால் இனியும் மறுக்க முடியாது. தமிழ் மன்னர்கள் 3500 வருடங்-களுக்கு முன்பே அரசாட்சி நிலைக்கு உயர்ந்து விட்டனர் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த ஆதாரம் ஆகும்.


------>வடமொழியே உயர்ந்தது. வடமொழியே இந்திய மொழிகளின் தாய் என்ற இந்தோ - ஆரிய உயர்வு மொழிக் கொள்கையைக் கொண்டு இந்திய வரலாற்றை எழுதிய இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தமிழின் பெருமை-யையும், புகழையும் திரித்துக் கூறினாலும், தவறாக எழுதினாலும் அவை நீடித்து நிற்காது என்பதை நடுநிலையான ஆசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

----->இந்தக் காரவேலன் கல்வெட்டில், வரி 13இல் அமைந்துள்ள மற்றொரு செய்தியை ஆய்வு செய்ய வேண்டியதும் இங்கு அவசியமாகின்றது. அபுதம் அச்சரியம் ச அதி சிவச பரிசரம் அயகதி ரத்ன மாணிக்கம் பாண்ட ராசா முதமணி ரத்னானி அகபயாதி இத ச என்று வரி 13 குறிப்பிடுகின்றது.

------>இதனைப் பற்றி முகவுரையில் குறிப்பிடும்பொழுது இக்கல்-வெட்டு ஆசிரியர்கள் பாண்டிய மன்னனை காரவேலன் வென்று - திரையாக முத்துக்கள், மாணிக்கங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைப் பெற்றுக் கொண்டனர் என (see: Epigraphica Indca Vol XX pp. 77) குறிப்பிடு-கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.
நன்றி : பா. பார்த்தீபன் (ஆர்குட்டில் இருந்து )
------>அதிகும்பா கல்வெட்டின் வரி 13இல் காரவேலன் பாண்டிய மன்னனை வென்றதற்குரிய சான்றுகள் எதுவும் இல்லை. மேலும், வரலாற்றுப் பேராசிரியர் பி.தி.சீனிவாச அய்யங்கார் தம் தமிழ் வரலாற்றில் (History of Tamils) பாண்டிய மன்னன் காரவேலனுக்கு பரிசுப் பொருட்களாகவே முத்துக்கள், மாணிக்கங்கள் போன்றவற்றைக் கொடுத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

------> எனவே, பரிசுப் பொருளாக கொடுக்கப்பட்ட பொருள் திரைப் பொருளாகக் கொடுக்கப்பட்டது என இந்திய வரலாற்று ஆசிரியர்கள் உரைப்பது (பார்க்க: இந்திய வரலாறு இர. ஆலால சுந்தரம் தமி. பா.க. வெளியீடு பக். 323) எத்துணை கொடுமை.

----->எனவே எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களைக் கவனமாக ஆராய்ந்து முழுமையாக தமிழக வரலாற்றை திருத்தி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறு திருத்தி அமைக்-கும்-பொழுது தமிழர்கள் 3500 வருடங்களுக்கு முன்பே அதாவது பெருங்கல் பண்பாடு (Maga Lithic Culture) தொடங்கும் பொழுதே அரசாட்சி நிலைக்கு உயர்ந்து விட்டனர் என்-பதை நிறுவ அதிகும்பா கல்வெட்டு (Hathigumpha Inscription) உதவும் என நம்பலாம்


--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post