பெற்றது தமிழ்

கற்றது தமிழ்


இந்த படம் வந்தபின் தமிழ் படித்தவர்களுக்கு மரியாதை

இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியது

உண்மைதான்.

ஆனால் என்ன தீர்வென்று சொல்லாமல் பல கொலைகளை கடந்து சென்றது படம்.

தன்னுடன் தமிழ் படித்தவன் மின்சார இரயிலில்

கைகுட்டை விற்பதை பார்த்ததும் அதிர்ந்து விடும்
நாயகன் தமிழ் பயில்வது குறித்து கேள்வி எழுப்புகிறான்

இந்த சமூகத்தில் தமிழ் கற்றவனுக்கு என்ன மதிப்பு

இருக்கிறது

தமிழ் எத்தனை பழமை வாய்ந்த மொழியாய் இருந்து

என்னபயன்

எமக்கு தொழில் கவிதை என்று காலரை தூக்கிவிட

முடியவில்லையே என்ன காரணம்.

தமிழ் வழி கல்வியே கேவலமாக கருதப்படும் ஒரு

சமூகத்தில் எப்படி காப்பியங்களும் கவிதைகளும்
ஆக சிறந்த படைப்புகளும் வரும்

மொழி வெறும் ஊடகமா? அதில் அவன் கலாசாரம்

இல்லையா

மொழி வெறும் பயன் பாட்டு கருவியா அதில் அவனும்
அவன் முன்னோரும் வாழ்ந்த பதிவுகள் இல்லையா?

தமிழ் படித்தவனுக்கு வேலை இல்லை என்பது மட்டுமல்ல

வரலாறு புவியியல் எது படித்தவனுக்கும் வேலை இல்லையே அது ஏன்

பள்ளிகூடங்களும் வீடுகளும் முழுக்க முழுக்க கணினியை கட்டிகொண்டு அழவேண்டுமா?

ஆங்கிலமும் கணினிபடிப்பும் இன்றி அன்றாட சோறு கிடைக்காதா?

நம் நாட்டின் ஆக சிறந்த விவசாயத்தொழிலை பின்னுக்கு தள்ளியது இதற்கு காரணமாக இருக்கலாம்

அமெரிக்க பீட்சாக்களை வாழ்வின் இலட்சியமாக கொண்டவனுக்கு தமிழோ தாய்நாடோ இரண்டாம் பட்சமானபின் .


அவனிடம் தமிழின் பெருமையை யார் சொல்லமுடியும்

எங்கும் நிறைந்த போட்டியில் அனைத்து மதிப்பீடுகளும்
விழுந்து நொருங்கும் போது

கணினி சார் வேலைகள் ஆங்கில படிப்பு அதுதரும் பந்தா என நகரும் மேல்தட்டு வாழ்க்கை கனவு
தமிழை மட்டுமா தட்டி காயப்போட்டது

நமது கலாசாரம் பண்பாடு எல்லாம் தூக்கி வீசப்பட்டு

ஆங்கில கனவானின் பூட்சுக்கு பாலிசானது தமிழ் மட்டுமல்ல!
 
அறிவியல் வளரும் வேகத்துக்கு தமிழ் வளர்க்கனுமா

அல்லது தமிழை கழற்றி விட்டு விட்டு  தனியே போகனுமா?

தமிழ்மொழியில் கற்றால் நியூட்டனின் விதிகள் புரியாதா

தமிழ் மொழியில் பேசினால் அனுப்பிளவினால் ஏற்படும்

ஆற்றலை புரிந்து கொள்ள முடியாதா?

நம்மிடம் இல்லாதது தமிழ் ஆர்வம் இல்லாமையா

அல்லது நம்மிடம் இருப்பது அதிதீவிர ஆங்கில மோகமா

என்னதான் அம்மான்னு சொன்னாலும் அடுத்தவீட்டு காரி  உன் அம்மா ஆவாளா?

தமிழில் பாண்டுகளும் தமிழில் திரட்டிகளும் செய்யும் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ் உணர்வு இல்லாமல் போய்விடவில்லை .

கணினி சார்ந்த அனைத்து வேலைகளும் தமிழில் செய்ய முடிந்தால் தமிழை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது .


தமிழ் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.

என்னை போன்ற அரைகுறைகளே தமிழில் கவிதை என ஒன்றை எழுதுமளவுக்கு எளிமையும் இனிமையும் நிறைந்த மொழிக்கு

அறிவியல் கூறுகளும் கலை சொற்களும் இயற்ற முடியாமல் போகாது

கல்வெட்டுகளில் எழுதி வைக்கப்பட்ட தமிழ்

தமிழ் என்றும் வாழும் தகுதி உடையது

என செப்புகிறது











--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post