ஈழம் என்ன நடக்குது -ஒரு கிராமத்தானின் கடிதம்

இலங்கையில் நடந்துவரும் யுத்தம் புலிகளின் கை

ஓங்கும்போது ரேடியோவில் செய்தி கேட்டு அப்பா

சொல்லும்போது

"நம்ம ஆளுகடா அங்க சிங்களவன எதிர்த்து

போராடுறாங்க என்பார் "

ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்

போராளிகள் பயிற்சிபெறுவதையும்
சிங்கள மிருகங்களால் தமிழர்கள் கொல்லப்பட்டதையும்
தெருவில் ஒரு டிவி பெட்டி வைத்து காண்பிப்பார்கள்

கையில் இருக்கும் காசுகளை சொந்தங்களுக்காக

கொடுப்போம்

அப்போது அந்த நிகழ்ச்சிகள் ரொம்ப உணர்ச்சி பூர்வமா

இருக்கும்

ஒரு பெரிய இனகலவரம் வந்தது அப்போ டவுசர்

போட்ட காலத்துல இதை கண்டிச்சு எல்லா தெருவிலும்
மேடைகள் அமைத்து சுடுகாட்டில் இருந்து எடுத்துவந்த
மண்டை ஓடு போன்றவற்றை வைத்து
"ஜெயவர்த்தனா ஒழிகன்னு " கத்தி கொண்டே ஓடுவோம்

எங்களுக்கு தெரிந்த ஒரே எதிரியின் பெயர்

ஜெயவர்த்தனே .

அந்த உணர்வு கொஞ்சமும் இன்னும் மங்காமல்தான்

இருக்குங்க

ஆனால் இப்போ வெளிப்படையா ஒரு மேடைபோட்டு
ஈழதமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்னு யாரும்

சொல்ல வரவில்லைன்னு ரொம்ப வருத்தமா இருக்கு

பிறகு ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி
அங்கே அமைதி ஏற்படுத்துகிறார்னதும்
ரொம்ப சந்தோசம் தமிழர்கள் பிழைச்சுகுவாங்கடாங்கிற
சந்தோசம் மன பாரத்தை குறைத்தது

ஆனால் கொஞ்ச நாளில் புலிகளையும் தமிழர்களையும்
சண்டையில் கொல்கிறார்கள்னு தெரிந்தது வெறுத்து

போச்சுங்க என்னத்த சொல்வது.

பிறகு ராஜிவ் கொல்லப்பட்டார் அப்படின்னது
தமிழ் நாடே அமைதியாகிடுச்சு .

முன்ன இருந்த மாதிரி மேடை ஏறி பேச இந்த

தலைவர்கள் தயங்கினாங்க .

அந்த சமயத்தில் "சுவரெழுத்துகளில் " அறிக்கைகள்

மூலமாக போராளிகளுக்கு ஆதரவளிப்போம்னு
மக இக எல்லா இடத்திலும் கோசம் போட்டு கிட்டு

இருந்தாங்க .

(இவங்க எதிலும் ஒரு ஆச்சரியமான நிலைபாடு

எடுப்பாங்களோன்னு நினைச்சுகுவேன் )

இன்னும் ஒரு அமைதி நீரு பூத்த நெருப்பா தமிழ்

மக்களின் மனதில் இருக்குதுங்க .

ஒவ்வொரு செய்தியை கேட்டும் பார்த்தும் தங்களுக்குள்
பேசிக்கத்தான் செய்கிறார்கள் . உணர்ச்சி ஒன்னும்

குறையல.

ஒரு பக்கம் தேச பிரதமர் இராஜிவ் காந்தி
இன்னொரு பக்கம் தமிழரின் உரிமைக்காக போராடும்

போராளிகள் எதை விட முடியும் எதை எடுக்க முடியும்
அவங்களுக்கு.

இதில் யாருபக்கம் நியாயம் இணையத்தில் பேசி பேசி
ஓய்ந்ததுதான் மிச்சம்

ஆனால் ஒரு பயனும் அந்த ஈழத்தமிழனுக்கு கிடைக்கல

ஒரு பக்கம் புலிகளும் தமிழர்களையும் முஸ்லீம்களையும்

கொல்கிறார்கள்னு செய்தி கேட்கிறோம்

இன்னொரு பக்கம் புலிகள் சிங்கள இராணுவத்துடன்
சமரசமற்ற ஒரு போரை நடத்துகிறார்கள் என்பது
பெருமையா இருக்கிறது .

புலிகள் செய்யும் தப்ப தட்டி கேட்குற நிலைமையிலும்

இல்ல ஏன்னா

சிங்கள இராணுவத்துக்கு எதிரா போராட்டத்தின் ஒரே
இயக்கமா அதுமட்டும் நிக்குது

அதே நெரம் சிங்கள் அரசு செய்யும் கேவலமான

வேலைகளை பார்க்கும் போது புலிகள் இந்த மாதிரி

அடிக்காட்டியும் இவனுக அடங்க மாட்டானுகடான்னு

தோணுது .

ஈழத்துக்கு உள்ளே உள்ள அரசியல் நிலமைகள்

மக்களுக்கு சரியா கிடைக்கல என்பது மட்டும்

உண்மைங்க

தினமலர்னு ஒரு தமிழ் பத்திரிக்கை இருக்கு அது எப்ப

பார்த்தாலும் புலி எதிர்ப்பை எழுதும்

மற்ற பத்திரிக்கைகளும் கலந்து எழுதுவாங்க

இணையத்தில் இருக்கும் அளவு சாதாரணமா

ஈழ செய்திகள் ஒரு தமிழ் நாட்டு தமிழனுக்கு

கிடைப்பதில்லை என்பது மட்டும் உண்மைங்க

புலிகள் பத்து பேர் இறப்புன்னு ஒரு ஓரத்துல கட்டம்

கட்டி போடுவாங்க

தெரிஞ்சா மட்டும் என்ன செய்வாங்கன்னு கேட்கிறீங்களா

அப்படி இல்லைங்க தெரியனும் அப்போதான் நல்லது

பொதுவா தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள்

என்ன வேண்டுகிறார்கள் என்றால் போர் நிக்கனும்

அமைதி திரும்பனும் அங்கே இருக்கும் தமிழன்

கொஞ்ச நிம்மதியா இருக்கனும் அவ்ளோதான்.



(சமீபத்தில் சிங்கள வான்படையின் குண்டுவீச்சில் இறந்த போராளி தமிழ்செல்வனுக்கு வீரவணக்கம்)

27 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post