திராவிட நண்பனே


வர்க்க புரட்சி பேசினால்- நண்பன்
சமூக விடுதலை பேசுவான்
சமூக விடுதலை பேசினால்
வர்க்க புரட்சி சரி என்பான்

பெரியார் வர்க்க விரோதியான்னா
நீயே பெரியாரின் விரோதி என்பான்
சாதி படிநிலை பேசுவான் பின்
வர்க்கபேதம் என்னவென்பான்

சாதியும் வர்க்கமும் வேறென்பான்
சாதியில் வர்க்கம் இல்லையென்பான்
சோறும் நெல்லும் வேறென்று
சொல்லிட்டு போவான் சும்மாதான்!

புரட்சி வருமா என கேட்பான்
விடுதலை வருமா என கேட்பேன்
விடுதலை வந்திடும் என சொல்வான்
புரட்சி வந்திடும் என சொல்வேன்

இரண்டுமே ஒண்ணுதான் என சொன்னால்
இவனொரு வரட்டு பயலென்பான்
இறங்கிடு மக்களுக்கு உதவவென்றால்
இருக்குது அனேக வேலைஎன்பான்!


பட்டினி கிடக்குது சனங்களென்பேன்
கெட்டியாய் போன சாதிஎன்பான்
சாதியை எறித்துபின் என்செய்வார்
சட்டியில் சோறு வந்திடுமா ?

சொன்னதும் கோபத்தை கொண்டுவிட்டான்
தொண்டையை செருமியே சொன்னானே
"சாதியை ஒழிக்காமல் சமதர்மம் சாத்தியாமா? "
சண்டைக்கு வாடா நீயுமென்பான்!

செட்டியும் நானும் ஒரு சாதி
அய்யரும் நானும் ஒரு சாதி
அதுவே வர்க்க சாதி என்பாய்
அய்யர் வீட்டு சோறு வந்து
அமருமா என் வீட்டு சட்டியிலே
அழகா கேட்டு அமர்தான் பின்
அய்யரை கொன்றபின் அங்கே
செட்டியை செயித்தபின் மேலும்
நாய்க்கரை ஒழித்தபின் சோறு
சொல்லாமல் வந்து அமர்ந்திடுமா
சொல்லடா சொல் என சொன்னபின்
அய்யரை கொல்வதை தடுக்கிறாய் நீ
செட்டியின் பாக்கெட்டில் இருக்கிறார் நீ
பார்பனின் பக்கம்தான் நீ இருப்பாய்
பார்க்கிறோம் ஒருகை உன்னைஎன்பான் !

சாதிகள் ஒழித்தபின் இருக்குமந்த
சண்டாள பசிக்கு பதிலென்ன
மீதியை சொல்லடா மேலும் என்றால்
மேசையை உடைத்துபின் மேலேறி
மொழியெனும் ஆயுதன் எடுத்தானே !

7 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post