புதிய பொருளாதாரமும் வறுமைகோடும் -தோழர் அக்னி இறகு

தேசிய முறை சாரா தொழிலாளர் கமிஷன் இந்த மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 45.7 கோடி பேர் உள்ளனர் என்றும் இவர்கள் கட்டிடம் கட்டுதல், விவசாயகூலிகள், உள்கட்டமைப்பு துறையில் பணிபுரிதல் மற்றும் ஒப்பந்த தொழில், மீன்பிடித்தல், நெசவு என்று பல்வேறுபட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 39.4 கோடிபேர்(80%) தினக்கூலியாக வெறும் ரூ.20 மட்டுமே(அரை டாலருக்கும் கீழ்) பெறுகின்றனர். தேசத்தின் வளர்ச்சி எல்லா தரப்பினரையும் சென்றடையவில்லை என்று தேசிய முறைசாரா தொழிலாளர் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கை பற்றிய செய்திகள் கிடைக்கும் இடங்கள் http://economictimes.indiatimes.com/8_out_of_10_working_Indians_earn_less_than_Rs_20_a_day/rssarticleshow/2272128.cms http://www.hinduonnet.com/thehindu/holnus/002200708100324.htmபுதிய பொருளாதார கொள்கைகள் 1991 இல் அறிவிக்கப்பட்டது. தேசத்தில் 1990 ல் மாத சம்பளம் ரூ.500கீழ் வருமானம் பெறுவோர் வறுமைக்கோடின் கீழ் வாழ்வதாக அரசு அன்று அறிவித்தது. அது இன்றளவும் அதே அளவுதான் உள்ளது. அதனால் இன்று வெறும் 24%(தோராயமாக 24 கோடி பேர்) மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக அரசு பெருமையுடன் சொல்லிவருகிறது. இதை தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் சரியான அளவுகோளாக இருக்கும். 1990 இல் ஒரு கிராம் தங்கம் ரூ.250 மட்டுமே. எனவே அன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தவர்கள் 2கிராம் தங்கம் வாங்க முடியும். அப்படியென்றால் இன்று இரண்டு கிராம் தங்கம் ரூ1650 க்கு விற்கப்படுகின்றது. எனவே விலைவாசிப்புள்ளியுடன் ஒப்பிடும்போது இன்று ரூ1600 க்கு கீழ் சம்பளம் பெறுவோர் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்தானே? ஏன் இந்திய அரசு இதை உயர்த்த மறுக்கின்றது? ஏழ்மையை ஒழித்துவிட்டோம் என்று பசப்பவா? மேலே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி நாட்டின் மக்கள் தொகையில் 40% பேர் மாத ஊதியமாக வெறும் ரூ600(விடுமுறை சம்பளம் எதுவும் கிடையாது எனவே விடுமுறைநாட்களை கழித்தால் இது இன்னும் குறையும்)க்கு கீழ் பெறுகின்றனர். அப்படியானால் அரசு கூறிய 24% பேர் புள்ளிவிவரம் ஒரு ஏமாற்றுவேலை என்றுதானே பொருள். ஆக மாத ஊதியம் 1600 ரூபாயை வறுமைக்கோடு என்று அறிவித்தால் நாட்டில் ஏழ்மையானவர்கள் ஏறத்தாழ 60% என்கிற நிலையை எட்டும். அதே வேளையில் 10லட்சம் டாலர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதையும் அந்த கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கின்றவனிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்கு கொடுப்பது தருமம். ஆனால் இங்கே இல்லாதவனிடம் இருந்து பிடுங்கி இருப்பவனுக்கு கொடுத்து அவனை செல்வச்செழிப்பில் மிதக்க வைக்கும் மாபெரும் கொடுமையை அரசு செய்து வருகின்றது என்பதை இது காட்டுகிறது. ஆகக்கூடி இந்திய அரசு புதிய பொருளாதார கொள்கையை ஏற்ற பின்னர் ஏழ்மை அதிகரித்துள்ளதுடன் ஏழை பணக்கார இடைவெளியும் அதிகரித்துள்ளது. சோஷலிச பொருளாதார காலத்தில் இந்த இடைவெளி தொழில்களின் தேசியமயமாதல் காரணமாக குறைந்து வந்துள்ளது. ஏழ்மையும், வறட்சியும் 1947 ஆம் ஆண்டு நிலவ்ரத்துடன் ஒப்பிடும்போது 1990 பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. ஏழைகள் பலர் கல்வி காரணமாக முன்னேற்றம் பெறத்தொடங்கினர். ஆனால் புதிய பொருளாதார கொள்கையில் ஏழைகள் புதியதாக உருவாகியுள்ளனர். இதுதான் இந்திய தேசம் வளர்கிறது(ஏழ்மையில்) என்று சொல்லப்படுகிறதோ? -- வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/நா.பிரதாப் குமார்.

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post