அற்பவாதி

இவன் இருப்பை நிர்ணயிக்க சேவை
தனது பொறுப்பை உலகறிய போர்வை
படித்த விசயங்களை வெறுப்பான்
வெறுத்த விசயங்களை படிப்பான்
நிறுத்தவியலாதெனும் வாழ்வில்
பொறுக்கமுடியாத இவன் தூக்கம்
கணத்த தசையாலானதிவன் தோலே
காதும் அதனோடு இவன் நெஞ்சும்
கண்ணில் நீர் வரத்தும் பேச்சும்
சொல்லில் வேல் பறக்கும் பேச்சும்
சுகமே நோக்கும் இவன் கண்ணால்
சொல்லதேவையில்லை யார்க்கும்!

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post