பதிவர் பட்டறை 2007 -வீண் ஜம்பமா?

பதிவர்பட்டறைகள் நாட்டுக்கு ஓண்ணும் பெருசா நன்மை செய்யாது எனும் நண்பர்களின் நியாயம் என்னவென்றும் நாம் பார்க்கவேண்டும் .
1.புதிய பதிவர்களை உருவாக்குகிறோம் 2.தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம்
இந்த இரண்டு விசயங்களை மறுத்தும் கேள்விகேட்டும் ஒரு நண்பர் பல இடங்களில் கேள்வி எழுப்பி இருந்தார் .
(நான் கூட இந்த பட்டறை நடத்த மிகவும் கடுமையாக உழைத்த தோழர்களின்உழைப்பை தூக்கி எறியகூடாது என சொல்லி ஒரு பதிவில் பாராட்டு ஊக்கபடுத்தி இருந்தேன் )
அவரது கேள்விகள்
1. ஏழைகளுக்கு உதவாத ஒரு நடுத்தரவர்க்க மனிதர்களின் கிளப் , சங்கம் , போன்றதுதான் இது
2. தமிழ் வளர்ச்சிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை
பட்டறை நடத்தியவர்களிடம் எனது நண்பனின் கேள்வி இதுதான்
1.பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை இரண்டையும் ஒன்றாக நடத்தியது என்ன காரணத்தால் . நாங்க இம்புட்டு பேரு இருக்கிறோம் என்று காட்டவா ? ;)
உண்மையில் பதிவர்பட்டறை மட்டும் நடத்தனும்னா அதை தனியே நடத்தி இருக்கலாமே .
2. தனிமனித வழிபாடுகளின் துவக்கம்தான் இதுவும் என்பதில் எள்முனை அளவு கூட சந்தேகம் இல்லை . இதை மறுக்க முடியுமா
பிளாக்கர்களின் அங்கீகார புள்ளியாக சந்திப்புக்களையும் அவற்றை நடாத்துபவர்களையும் உருவாக்க கூடாது .
இதுல அவன் பெரியவன் இவன் சின்னவன் என்ற குரூப் பாலிடிக்ஸ் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
மேலும் கருத்துக்களை மட்டும் முன்னிறுத்தி போகும் இந்த பிளாக்கர்கள் எனும் அருமையான கருவி இதுபோன்ற தனிநபர்களின் பின்னால் போகும் அபாயம் இருக்கிறதா இல்லையா?
இதுபோன்ற கேள்விகளை கேட்கும் நபர்களுக்கு பதில் சொல்லும்கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு இல்லையா ?
இந்த பதிவு போட்டதே தப்புன்னு எதாவது பதில் வந்தா அந்த நண்பர் சொல்வதில் உண்மை இருப்பதாக அர்த்தம்

28 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post