போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
ஏன்?
ஊதிய உயர்வு கேட்டா?
சலுகைகள் அதிகம் கேட்டா?
இல்லை, இல்லவே இல்லை. உழைக்க வாய்ப்பு கேட்டு. பி.எஸ்.என்.எல் நிறுவனம்
நம்பகத்தன்மையுடன் அதி அற்புதமான சேவையளித்து வருவதால் பொதுமக்கள் பலரும் அதன்
அழைப்புக் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் வரிசையில் காத்திருந்து இணைப்பு வாங்கினார்கள். இத்துனைக்கும்
தனியார் இணைப்புகள் அந்த கால கட்டத்தில் கூவி கூவி விற்கப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதம் சென்னைக்கு அனில் அம்பானி வந்து முதல்வர் கருணாநிதி யை
வந்து கவனித்து விட்டு சென்றார். அப்பொழுது கையூட்டாக கை மாறிய பணம்
கோடிக்கணக்கில். அது முதல் தொலைத்தொடரபு துறையில் புதிதாக எந்த அறிவிப்பும்
இல்லை. அதற்கு முன்னர் வரை தயாநிதி மாறன் அவர்கள் மாதம் ஒரு அறிவிப்பை
வெளியிட்டு வந்தார். இது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு
வித்திட்டது. ஜனவரிக்கு பின்னர் பெரும்பாலான காட்சிகள் மாறிவிட்டன. திடீரென
தமிழகத்தில் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் அங்காடிகள் திறக்கப்பட்டன. அதை எதிர்த்து
கூட்டப்படும் வியாபாரிகள் சங்க கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் மட்டும்
ஆப்ஸெண்ட்.
அதன் தொடர்ச்சியாக பி.எஸ்.என்.எல்லின் வளர்ச்சியும் தனியார் நிறுவனங்களின்
வளர்ச்சிக்காக முடக்கப்பட்டது. இன்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் போராட்ட
அறிவிப்பு கொடுத்ததன் நோக்கம் கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சிதிட்டங்களை
பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே. அது குறித்த செய்தி குறிப்புகள்
கீழ்கண்ட தொடுப்பில் கிடைக்கும்.
http://www.thehindu.com/2007/07/03/stories/2007070359751200.htm
http://www.financialexpress.com/latest_full_story.php?content_id=169199
http://economictimes.indiatimes.com/BSNL_employees_to_go_on_strike_on...
http://www.deccanherald.com/Content/Jul52007/national2007070511122.as...
--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/