அதிருதில்ல

வேலை செய்த காசில்
விருப்பமான ரஜினிபடம்
வீட்டுக்கு போனா
சோறில்லை என சொன்னா
சொரணை அதிருதில்ல!

குழந்தைக்கு பிடிக்குதுன்னும்
குமரிக்கு பிடிக்குதுன்னும்
கொட்டுகின்ற பால்குடங்கள்
குடிசைக்குவருவதில்லை
கும்பிடுடா ரஜியன்னா
கும்பி அதிருதில்ல

குத்துகின்ற அலகும்
வெட்டுகின்ற ஆடும்
வெளியே காட்டுகின்ற
விளங்காத பந்தாவும்
கதி களங்க செய்யும்
கலாசாரம்மென
காட்டுது உன் கோபம்
நிஜமா அதிருதில்ல !

யாரு ரஜினின்னும்
ஏன் அவனை
தூக்கிறேன்னும்
சமூக அக்கறைன்னும்
சில நேரம்
சிந்திக்கையில்
ஜீவன் அதிருதில்ல!


தோழர் அசுரன் அவர்களது பிளாக்கில் அவரது ரஜினி மீதான விமர்சனத்துக்கு நான் இட்ட கவிதை

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post