அசுரன் வேணும்

தேவனென்றும் அசுரனென்றும்
தெருசண்டை நமகெதுக்கு
சேவை வேறு புரட்சிவேறு
போக போக தெரியும் பாரு !

மாமாவை மாமாவென்றும்
மச்சினனை மச்சினன்னும்
மறைக்காம சொல்லிப்புட்டா
சிரிக்காம போகலாமா -தம்பி
(தலையிருக்க) சிகை மட்டும் ஆடலாமா!

சொன்னாக்க குத்தமுன்ன
செயலை நீயும் காட்டுடான்னா
புண்ணாக்கா புளியஞ்சோறா
போறபோக்கில் கொடுப்பதற்கு !

வீரமா பேர் இருக்கு
வீதியெங்கும் சிலை இருக்கு
காப்பாத்த வக்கில்லயே
கண்சிவந்து என்ன பயன் !

பார்பானை திட்டிபுட்டா
பழிமேல போட்டுபுட்டா
பருப்பதுதான் வெந்துடுமா
பாட்ட நீ மாத்திபோடு !

சிங்கமும் சிறுநரியும்
சிலநேரம் ஒண்ணாகும்தான்
சிங்கத்தை சிறுநரிதான்
சீறினாக்கா சிரிப்புவரும் !

வேதத்தை திட்டிபுட்டோம்
வேகத்தை குறைக்கலாமோ
வேகாத வெங்கயத்தை
வேகவைக்க முயற்சிக்காதே !

தப்பதை தப்புன்னும்
மப்பதை மப்புன்னும்
மனம் விட்டு சொல்ல இங்கு
மாண்புமிகு அசுரன் வேணும் !

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post