சுதந்திரம் தேடி
போராடும்
இறகில்லா
பறவைகள்
நதிகளை
நோக்கி துள்ளும்
செவிலில்லா
மீன்கள்
வானத்தை நோக்கி
உயரும்
பந்தலில் நட்ட
மரங்கள்
கரைகளை
விரைந்து
தள்ளும்
கையில்லா
அலைகள்
காதலுக்கென
உருகும்
அழகில்லா
ஆண்கள்
நிஜங்களை
நம்ப மறுக்கும்
நிழல் தேடும்
நிஜங்கள்
Tags
கவிதை