விதைகளின்
விதைக்கும் நானே
உன் விழிகளின்
நீரால் கருகலாம்
கருகிய எனது
செடிகளுக்கு
காவல் நீ
இருந்துகொள்!
மரணங்கள்
சப்தமிடும்
பொழுதுகளில்
பூக்கும்
மந்த காச புன்னகை
உனது !
புதுமைகள்
செய்யும் என
நினைத்த உன்
புன்னகை
எமனின்
எருதுகளை
செறித்த
ஏப்பத்துடன்!
சத்தமிடாமல்
முத்தமிட்டு செல்
மெளன கோடாரியால்
மனசை வெட்டும்
தருணங்களை
மீட்டாதே
மீண்டும் மீண்டும்!
சாவை சந்திக்கும்
சங்கடமில்லை எனக்கு
துரோகம் அவ்வாறல்ல
கால கண்ணாடி
காட்டலாம் இனிமேல்
கணக்கிடாமல்
விடுபட்ட கனவுகளின்
முறிவுகளை!
முழுமதி போன்றதுன்
முகமதை வரைந்தபின்
முட்டாள் ஓவியன்
மூர்ச்சை ஆனால்
மோசத்தை வீசமந்த
முழுசல்லாத
புன்னகை!
-தியாகு