பார்ப்பனியம் பற்றிய கேள்வியில்

சாதி அமைப்பை தூக்கி பிடிப்பவர்களே

சாதி வர்ணத்தால் வந்தது வர்ணம் குணத்தால் வந்தது

என தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் நிலமை அவ்வாறு

இல்லையென தெரிந்து உங்களை நீங்களே ஏன் அம்பலபடுத்தி

கொள்கிறீர்கள்

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்

எனது தாத்தா ஒரு பெண்ணை கற்பழித்தால் என்னை தண்டிபீர்களா?

அவ்வாறு என்னை தண்டிப்பதாக சொல்லுமளவுக்கு நெஞ்சழுத்தம் இருக்கா?

உசிலம்பட்டியில் இருக்கும் தேவர்கள் தாழ்த்தபட்ட சாதியினரை கொடுமைபடுத்தினால்

உங்களால் கேட்க முடியுமா?

நாங்கள் அமைதியானவர்கள் ஆகவே எங்களை தாக்குகிறீர்கள் ?

என அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்

அவருக்கு நான் சொல்லிக்கொண்டது இதுதான்

நண்பரே ! பார்பனியம் என்று சொல்வது அழுகிபோன சாதிஆதிக்க திமிரை அன்றி

பார்பனரகிய உங்களை அல்ல!

ஒரு பெண்ணை உங்கள் தாத்தா கற்பழித்தால் காலங்கடந்த தண்டனையை

உங்களுக்கு தரமுடியாதுதான்.

ஆனால் ஒரு பெண்ணை கற்பழிப்பது பாவமல்ல என உங்கள் தாத்தா கொண்ட

கருத்தை நீங்கள் ஆதரித்து அதை செயல்படுத்துவோம் என சொன்னால்

உங்களுக்கு உங்கள் உறுப்பை துண்டிக்குமளவு அதிகமான தண்டனையைதான்

ஒரு நீதிமான் தறுவான் என்றேன்.


மிக உயந்த அறிவுபெற்றவர்கள் என தங்களை போற்றிகொள்ளும் நபர்களின்

கேள்வியை பாருங்கள் சிரிக்கும்படிதான் இருக்கு.

தாழ்த்தபட்டவர்களின் சமுதாயம் எழுச்சிபெறும் நாள் வந்தால்

அவர்களை அடக்கியவர்கள் அடிவாங்கத்தான் வேண்டும்

என நான் சொல்லவில்லை சுவாமி விவேகானந்தரே கூறியுள்ளார்.

இதில் தேவர் என்ன பார்ப்பனர் என்ன வெள்ளம் பெருக்கெடுத்தால்

குடிசை என்ன கோபுரம் என்ன ?

உங்களது பழைய பஞ்சாங்க அணைகளால் தடுக்க முடியாது அதை .

தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post