காரல் மார்க்ஸ் -நினைவு நாள் 14 th march

நன்றி : டாலர் செல்வன்\தத்துவ மேதைகள் இதுவரை உலகை வர்ணனை தான் செய்திருக்கிறார்கள்.நாம் இனிஅந்த உலகை மாற்ற வேண்டும்"–காரல் மார்க்ஸ் "இதுவரை பூசாரிகளும்மதத்தலைவர்களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தைகாட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயேபொன்னுலகம் அடைய வைக்கும்…..வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்கபடுவதுஅல்ல..உங்கள் அறிவு நீங்கள் வாழும் வாழ்க்கையால் தான்நிர்ணயிக்கப்படுகிறது" (மார்க்ஸ் 1861)போராட்ட வரலாறு: மார்க்ஸ் (1818 - 83) 1842′ல் ரைன்லான்ட் கஜட் என்னும்பத்திரிக்கையின் ஆசிரியராக தனது பொது வாழ்வை துவக்கினார். ஒரெ வருடத்தில்அரசு அந்த பத்திரிக்கையை தடை செய்து அவரையும் ஆசிரியர் பதவியில் இருந்துதூக்கியது. மார்க்ஸ் பாரிசுக்கு குடிபெயர்ந்து பிரென்சு மண்ணில் இருந்துப்ருஷ்ய தொழிலாளிகளுக்காக குரல் கொடுத்தார். 1845′ல் பிரென்சு அரசு அவரைநாடு கடத்தியது. புருஸ்செல்ஸ்ல் இருந்து தனது முதல் பொருளாதார அறிக்கையயைவெளியிட்டார். (வறுமையின் தத்துவம்). 1847′ல் கம்யுனிஸ்ட் பிரகடனம் என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்தபிரகடனத்தை என்கெல்ஸுடன் சேர்ந்து வெளியிட்டார்.உடனடியாக அவர்பெல்ஜ்யத்திலிருந்து வெளியெற்றப்பட்டார்.பிரன்சு அரசும் அவரை ஆயுதபுரட்சியில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தி அவரை நாடுகடததியது.அவருக்கு எந்த நாடும் இடம் தர முன்வரவில்லை. "நாடற்ற நபர்"என்று அவர் அறிவிக்கபட்டார்.ரத்தச்சிவப்பு வண்ணத்தில் தனதுபத்திரிக்கையில் அதன் கடைசி இதழை வெளியிட்டு விட்டு குடும்பம்குட்டியோடு(1843′ல் திருமணம் செய்து கொண்டார்) நாடோடியாக நாடு நாடாகசுற்றினார்.எந்த நாடும் அடைக்கலம் தரவில்லை.1849′ல் பிரிட்டன் மட்டுமேஅடைகலம் தந்தது. சாகும் வரை பிரிட்டனில் வாழ்ந்தார். வறுமையிலும்,வியாதிகளிலும் பிடிக்கபட்டார். அவரின் பல குழந்தைகள் பசியால் செததன.மனைவிநரம்பு வ்யாதியால் பாதிக்கபட்டார்.எங்கெல்ஸ் கஷ்டப்பட்டு செய்த பண உதவி மட்டுமே அவர் பசியை அவ்வப்போதுஆற்ற்யது ஆனால் இந்த 35 ஆண்டுகளில் அவர் மாபெரும் எழுத்து புரட்சியைசெய்தார்.நரம்பு வியாதி வந்த போதும் பிரிட்டிஷ் மியுசியத்துக்கு சென்றுதனிஅறையில் அமர்ந்து எழுதினார். டாஸ் காபிடல் என்னும் புரட்சியாளர்களின்வேதநூலை அவர் 1867′ல் வெளியிட்டார்.வறுமையிலும் வியாதியிலும் 1883′ல்அவர் இறந்தார். அவரது கல்லறையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் எஙெல்ஸ்கண்ணீர் உரை ஆற்றினார்.அனைத்து போராளிகளின் தந்தை என்று மார்க்ஸை அவர்குறிப்பிட்டார். "போரட்ட உணர்வு மார்க்ஸின் இணைபிரிக்கமுடியாத குணம்"என்றார் எங்கெல்ஸ். "அவர் போராட்டத்தை நேசிக்கவில்லை காதலித்தார்."என்றார் எங்கெல்ஸ்இருக்கும் உலகை வைத்து மார்க்ஸ் திருப்தி அடையவில்லை.ஒரு புது உலகை அவர்அமைக்க விரும்பினார்.பெண்ணியம் முதல் போராடும் அனைத்து துறைகளுக்கும்தலைவரும், தந்தையும் காரல் மார்க்ஸ் தான்.பின்னவீனத்துவ தத்துவ மேதைகள்படைத்த அற்புத துறைகளுக்கு தாயாய் இருப்பது மார்க்சியமே மார்க்ஸ் தனது இளவயதில் கெகல்(G.W.F. Hegel) என்ற தத்துவ அறிஞரின் சிஷ்யனாகஇருந்தார்.ஆனால் பின்னாளில் கேகலின் தத்துவங்களை நடைமுறைக்கு ஒத்துவராதவைஎன்று கடுமையாக சாடினார்."கெகல் சொன்னது சிந்தனைக்கு மட்டுமேவிருந்து.நடைமுறைக்கு அல்ல" என்று கிண்டலும் அடித்தார் மார்க்ஸ் மதங்களைவெறுத்ததும் இதனால் தான்.அவற்றால் எந்த நடைமுறை பயனையும் அவர் காணவில்லை.இப்பொதைய பசிக்கு அவை எதுவும் செய்வதில்லை, அவை காட்டும் மோட்சம்இறந்தபிறகே அடையகூடியது என்பதை உணர்ந்ததும் அவர் வருத்தம்அடைந்தார்.ஆனால் மதங்கள் மனிதனின் தற்போதய வாழ்வை இறந்தபின் வரும்சொர்க்கதிற்க்காக தியாகம் செய்ய சொல்வதை உணர்ந்ததும் அவர் கடும் கோபம்அடைந்து 'மதம் மனிதனின் எதிரி' என்று சாடும் அளவுக்கு அவர் சென்றார்.நடைமுறை வாழ்வில் பயனளிக்காத எந்த ஒரு தத்துவத்தயும் எதிர்த்தவர்மார்க்ஸ். கெகலை அவர் சாடியதும் அதன் அடிப்படையில் தான். ஆனால் கெகலின்அடிப்படை சித்தாந்தமான "சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுயதேடலின் உருவாக்கம்" என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.மார்க்ஸியம் என்பதை'அந்த சுயதேடல் இன்னும் முடிவடையவில்லை' என்ற தத்துவத்தை அடிப்படையாககொண்டு உருவாக்கினார். மனிதன் உருவாக்கிய சமூக அமைப்புகளை அவர்வலியோனுக்கும் மெலியோனுக்கும் இடையே நடைபெற்ற யுத்த களமாகபார்த்தார்.ஆண்டாண்டு காலமாக வலியோனே வெற்றி பெற்று தனக்கு சாதகமானசமூகத்தை,அரசை,சட்டத்தை உருவாக்கினான்.நாளடைவில்அச்சட்டம்,சமூகம்,சமுதாயம்,அரசு இவை அனைத்தும் வலியோனை மேலும் மேலும்வலியோனாக்கியது. கானகத்தில் உருவான "வல்லவன் வாழ்வான்" என்ற விதி 19ம்நுற்றாண்டு ஐரொப்பிய சமுகத்திலும் நிலவியதை அவர் கணடார். இந்த விதியேஇதுவரை உருவான அனைத்து சமுகங்களயும் படைத்தது என்பதையும் அவர் கண்டார்.வலியோனுக்கும் மெலியோனுக்கும் நடைபெறும் யுத்ததை அவர் "வர்க்க போராட்டம்"என்று வர்ணித்தார்.அவர்கள் இருவரும் ஒருங்கினைந்து வாழ முடியும் என்பதைஅவர் நம்பவில்லை. புலியும், புள்ளிமானும் எங்காவது கூடி வாழ முடியுமா?மெலியோன் என ஒருவன் இருப்பதால் தான் வலியோன் என ஒருவன் இருக்கிறான்.மெலியோனை சுரண்டி தான் வலியோன் வாழ முடியும். வலியோன் வாழ்வான் என்றவிதியை மார்க்ஸ் மறுக்கவில்லை. மெலியோன் தனது விதியை போராட்டம் மூலம்மாற்றி அமைக்க முடியும் என அவர் நம்பினார்.மெலியோன் வலியொனாவதெ அவன்முன்னேற வழி என அவர் நினைத்தார்.ஐரொப்பிய சமூகம் முன்னெறியது என்பதை மார்க்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை.ரோமானியா காலத்து அடிமைகளையும் தற்போது உள்ள பஞ்சாலை தொழிளாலிகளையும்ஒப்பிட்டு பார்த்தால் பெரிதாக எந்த வித்யாசமும் இல்லை என்று அவர்சொன்னார்.
- ---------------------
மதம் மக்களை மயக்கும் அபினி -மார்க்ஸ்-

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post