அப்பாவின் செருப்பு

என்னை பள்ளியில்
சேர்க்கஅழைந்தீர்கள்
கிடைக்காத புத்தகத்தை
தேடி அலைந்தீர்கள்
வேலை எனக்கு வேண்டி -அதே
வேலையாய் அலைந்தீர்கள்

அலைந்து அலைந்து
உட்கார்ந்த உங்களுக்கு
ஆதராய் அந்த கால்களுக்கு
என்னால் தரமுடியாத
என்தோலை
ஒரு பிராணிகொடுத்து
பெருமை தேடிக்கொண்டது
பிறக்காத பிள்ளையாய்

-தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post