சோத்துக்கு சாகவில்லை
சோறின்றி சாகவில்லை
சுதந்திரம் வேண்டி நின்றாய்
சூரியனே என் திலீபா !
பத்தோடு பதினொன்றல்ல -சாவு
இத்தோடு முடிந்தது
என்றெழுந்த கதிரவனே
என்னுயிரேஎன் திலீபா!
கொடுத்து பெறுவதில்லை
எடுத்து கொள்ளவதுதான்
ஈழம் என்பதை நானுனக்கு
என்றுரைப்பேன் என்திலீபா!
வாயினால் பேசிய -ஒரு
வன்முறை இல்லாத பூ நீ
பேய்களே ஆளும் ஊரில்
பிணமானாய்ஏன் திலீபா!
செத்தவரின் கணக்கில் இல்லை
வாழ்பவரின் கணக்கில் இல்லை
வாழுகின்றாய் புகழுடம்பில்
வாரலாறேஎன் திலீபா!
-தியாகு
சோறின்றி சாகவில்லை
சுதந்திரம் வேண்டி நின்றாய்
சூரியனே என் திலீபா !
பத்தோடு பதினொன்றல்ல -சாவு
இத்தோடு முடிந்தது
என்றெழுந்த கதிரவனே
என்னுயிரேஎன் திலீபா!
கொடுத்து பெறுவதில்லை
எடுத்து கொள்ளவதுதான்
ஈழம் என்பதை நானுனக்கு
என்றுரைப்பேன் என்திலீபா!
வாயினால் பேசிய -ஒரு
வன்முறை இல்லாத பூ நீ
பேய்களே ஆளும் ஊரில்
பிணமானாய்ஏன் திலீபா!
செத்தவரின் கணக்கில் இல்லை
வாழ்பவரின் கணக்கில் இல்லை
வாழுகின்றாய் புகழுடம்பில்
வாரலாறேஎன் திலீபா!
-தியாகு
Tags
கவிதை