பள்ளுபறையென்ற
பதினெட்டு சாதிகளை
படைத்தவன்தான் யாரோ -விசம்
விதைத்தவன் தான் யாரோ.
சாதிக்கொரு சங்கம்
இருக்குதைய்யா ஊருக்குள்ள
சாமிக்கும் சாதிவைச்சு
பிரிச்சவனஎன்ன சொல்ல
பள்ளுபறையென்ற........
சாதி பேயைத்தான் ஓட்ட வந்த
பெரியாரென்ற மனுசனையே
சாதியா பிரிச்சாக - அவன்
சங்கதிய மறைச்சாக
பள்ளுபறையென்ற..........
சமூக நீதியெல்லாம்
சால்ஜாப்பு பேச்சுங்க -
ஓட்டுத்தான் வாங்கினதும்
போச்சுங்க
பள்ளுபறையென்ற..........
பிறக்கும் குழந்தைக்கு முன்
பிறக்குதிந்த சாதி அய்யா
கருவுக்குள்ள நுழையுமந்த
சாதியைத்தான்என்ன சொல்ல.
பள்ளுபறையென்ற..........
எத்தனையோ சாதி
என்சாதி உன் சாதி
ஏழைக்கு கூலி மட்டும்
ஏத்தவில்லை ஒரு சாதி
பள்ளுபறையென்ற..........
என்சாதி ஆனாலும்
ஏழை சாதி நீஎட்டியே நில்என்பான் -ஐயா
ஏழையெல்லாம் ஒரு சாதி
எந்திருச்சி வாருங்கய்யா.....
-தியாகு
பதினெட்டு சாதிகளை
படைத்தவன்தான் யாரோ -விசம்
விதைத்தவன் தான் யாரோ.
சாதிக்கொரு சங்கம்
இருக்குதைய்யா ஊருக்குள்ள
சாமிக்கும் சாதிவைச்சு
பிரிச்சவனஎன்ன சொல்ல
பள்ளுபறையென்ற........
சாதி பேயைத்தான் ஓட்ட வந்த
பெரியாரென்ற மனுசனையே
சாதியா பிரிச்சாக - அவன்
சங்கதிய மறைச்சாக
பள்ளுபறையென்ற..........
சமூக நீதியெல்லாம்
சால்ஜாப்பு பேச்சுங்க -
ஓட்டுத்தான் வாங்கினதும்
போச்சுங்க
பள்ளுபறையென்ற..........
பிறக்கும் குழந்தைக்கு முன்
பிறக்குதிந்த சாதி அய்யா
கருவுக்குள்ள நுழையுமந்த
சாதியைத்தான்என்ன சொல்ல.
பள்ளுபறையென்ற..........
எத்தனையோ சாதி
என்சாதி உன் சாதி
ஏழைக்கு கூலி மட்டும்
ஏத்தவில்லை ஒரு சாதி
பள்ளுபறையென்ற..........
என்சாதி ஆனாலும்
ஏழை சாதி நீஎட்டியே நில்என்பான் -ஐயா
ஏழையெல்லாம் ஒரு சாதி
எந்திருச்சி வாருங்கய்யா.....
-தியாகு
Tags
கவிதை